மருமகளின் மர்மம் – 16

This entry is part 1 of 20 in the series 16 பெப்ருவரி 2014

ஷைலஜாவின் ஆயாவாக இருந்த நீலவேணி சாதுவானவள். அமைதியானவள். அதிகம் பேசாதவளும்கூட. அவள் கண்களில் தன்பால் அன்பும் இரக்கமும் சுரப்பதையும் ஷைலஜாவை அவள் ஒரு வளர்ப்புத்  தாய்க்குரிய பாசத்துடன் நேசிப்பதையும் சகுந்தலா அறிந்திருந்தாள். ஆனால், நீலவேணி தன் வாயைத் திறந்து விநாயக்ராமைப் பற்றி அவதூறாக எதுவுமே பேசி அவள் கேட்டது கிடையாது. எனினும் அவளுக்கு அவனைப் பிடிக்காது என்பது மட்டும் சகுந்தலாவுக்குத் தெரியும். அவள் புரிந்துகொண்டிருந்த வரையில் நீலவேணி நம்பத் தகுந்தவள் என்பதால், சகுந்தலா தனக்கோ அல்லது ஷைலஜாவுக்கோ […]

மருத்துவக் கட்டுரை – நடுச் செவி அழற்சி – ( Otitis Media )

This entry is part 1 of 20 in the series 16 பெப்ருவரி 2014

            நடுச் செவி ( Middle Ear ) என்பது செவித்திரைக்கும் ( Tympanic Membrane ) உட்செவிக்கும் ( Inner Ear ) இடையில் உள்ள பகுதி.           இப் பகுதியில்தான் Eustachian Tube எனும் குழாய் உள்ளது. காது வலி அதிகமாகத் தோன்றுவது இப் பகுதியில்தான்.நடுச்செவி அழற்சி வலிக்கான காரணங்கள் காதுக்குள் அழற்சியை உண்டு பண்ணி, வீக்கத்தினால் வலியை உண்டு பண்ணுபவை நோய்க் கிருமிகள். இவை வைரஸ், பேக்டீரியா, காளான் என்று மூன்று வகைகள். […]

சீதாயணம் நாடகப் படக்கதை – ​20​

This entry is part 1 of 20 in the series 16 பெப்ருவரி 2014

[சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை – ​ 20​ ​ நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ் படம் : 42 படம் :​4​3​​               [இணைக்கப் பட்டுள்ளன]   தகவல் : 1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958] 2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash […]

பெரிதே உலகம்

This entry is part 1 of 20 in the series 16 பெப்ருவரி 2014

கத்திரி வெயில் வறுத்தெடுக்கும் கடற்கரை மணலில் கைவிடப்பட்டதாய்த் திரியும் கிழவனுக்கு அலைகள் தேற்றினாலும் என்ன ஆதரவிருக்கும்? சேரிக் குடிசையிலிருந்து தன் பெண்டின் சிகையைப் பிடித்து ’தர தர’வென்று தெருவில் இழுத்துச் செல்லும் ’தற்கொண்டானுக்கு’ என்ன இரக்கமிருக்கும்? பேருந்திலிருந்து கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளிவிடப்பட்டு சாலைப் புழுதியில் விழுந்து கிடக்கும் குடிகாரன் மேல் பயணிகள் யாருக்கும் என்ன அக்கறையிருக்கும்? பரட்டைத் தலையும் கந்தையுமாய்த் தான் பாட்டுக்குத் திரியும் பைத்தியக்காரனை ’லத்தி’யில் துரத்தும் போலிஸ்காரனுக்கு என்ன நியாயமிருக்கும்? உலகில் எல்லா […]

திண்ணையின் இலக்கியத் தடம்-22

This entry is part 8 of 20 in the series 16 பெப்ருவரி 2014

மார்ச் 2 2003 இதழ்: பரத நாட்டியம் சில குறிப்புகள்-1 வைஷாலி- தமிழ் நாட்டில் பரதக் கலையின் நான்கு ஆசான்கள்- சின்னைய்யா, பொன்னைய்யா, சிவானந்தம் வடிவேலு. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20303021&edition_id=20030302&format=html ) சோழ நாடனின் கொடுமுடி கோகிலம் சுந்தராம்பாள் வரலாறு- ஒரு மதிப்புரை- வெளி ரங்கராஜன்- சிறுவயதிலும் மண வாழ்விலும் பட்ட துன்பங்களை மீறி அவர் கலையின் மீது கொண்டிருந்த ஈடுபாடு அதியசயிக்க வைப்பது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20303022&edition_id=20030302&format=html ) உலக வளத்தை நோக்கி முதல் அடிச்சுவடுகள்- சுந்தர ராமசாமி- இந்திய படைப்பு […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 46

This entry is part 6 of 20 in the series 16 பெப்ருவரி 2014

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 46. உலகின் முதல் ஆங்கில அகராதியைத் தொகுத்த ஏ​ழை……….! “பூஞ்சிட்டுக் கன்னங்கள் ​ பொன்மணிக் கிண்ணத்தில் பால்​பொங்கல் ​பொங்குது தண்ணீரி​லே காவிரி நீர் விட்டு கண்ணீர் உப்பிட்டு கலயங்கள் ஆடுது ​சோறின்றி… கலயங்கள் ஆடுது ​சோறின்றி​…. கண்ணுறங்கு…கண்ணுறங்கு….” அட​டே வாங்க…வாங்க..என்னங்க ​ரொம்ப ​சோகமான பாட்​டைப் பாடிக்கிட்டு வர்றீங்க…என்ன ஏதாவது பிரச்ச​னையா…? […]

கீழ்வானம்

This entry is part 4 of 20 in the series 16 பெப்ருவரி 2014

கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு, மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும், போவான்போ கின்றாரைப் போகாமல் காத்து,உன்னைக் கூவுவான் வந்துநின்றோம்; கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய, தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால், ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய். திருப்பாவையின் எட்டாவது பாசுரம் இது. இப்பாசுரத்தில் எல்லாராலும் விரும்பப்பட்ட, எல்லாரும் அவளிடத்தில் நெருங்கி வரக்கூடிய பெருமை உள்ள கிருஷ்ணனாலே விரும்பப் பட்டுக் கிருஷ்ணனைத் தன் வசத்தில் வைத்துள்ள ஒருத்தியை எழுப்புகிறார்கள். அவளை […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 22 பிற்காலக் கவிஞர்களின் ஆக்கம் பற்றியப் புரிதல். மொழிபெயர்ப்பாளரின் விளக்கம்.

This entry is part 1 of 20 in the series 16 பெப்ருவரி 2014

  1882-ம் ஆண்டு ஸ்காட்லாந்துக் கிறித்துவ மதப் பிரச்சாரச் சபையைச் சார்ந்த அருட்தந்தை.ஹாஸ்டி என்பவர் வரம்பு மீறி ஹிந்து மதத்தைப் பற்றி விமர்சனங்களை  தி ஸ்டேட்ஸ்மன் பத்திரிகையில் எழுதி வரத்  தொடங்கினார். பங்கிம் சந்திரச் சட்டர்ஜி இந்தக் குற்றச் சாட்டுக்களை எதிர்ப்பதென்று முடிவு செய்தார். ராம் சந்தர் என்ற புனைப் பெயரில் அதே வேகத்துடன் திருச்சபையின் குற்றச் சாட்டுகளுக்கு அதே செய்தித் தாளில் மறுப்புத் தெரிவித்தார். அது வரையில் பங்கிம் வெறும் இலக்கியவாதியாகவே கருதப் பட்டார். இதன் […]

நீங்காத நினைவுகள் – 34 ஈயமும் பித்தளையும்!

This entry is part 1 of 20 in the series 16 பெப்ருவரி 2014

  மைய அரசு அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக வேலையில் சேர்ந்த புதிது. அச்சம் என்றால் என்னவென்றே அறிந்திராத பருவம். அநியாயங்களைத் தட்டிக் கேட்பதில் எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாதென்னும் கோட்பாடு வலியுறுத்தப்பட்டு எங்கள் அப்பாவால் வளர்க்கப்பட்ட முறை. அஞ்சல் துறையின் ஆயுள் காப்பீட்டுத் துறையைச் சேர்ந்த உதவி இயக்குநரிடம் ஒரு நாள் வாய்மொழிக் கடிதம் வாங்கச் சென்ற போது ஏற்பட்ட அனுபவம். எனக்கு அவர் ஒரு கடிதத்தை வாய்மொழிந்துகொண்டிருந்த போது அவரது மேசை மீதிருந்த தொலைப்பேசி மணியடிக்க அவர் […]

பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு ரூ 50,000 பரிசு

This entry is part 1 of 20 in the series 16 பெப்ருவரி 2014

      கடந்த 3 ஆண்டுகளில் வந்த சிறந்த நூல்களை அனுப்பலாம். கவிதை, சிறுகதை நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு,ஆய்வு, நாடகம் அன்று அனைத்துப்பிரிவு நூல்களையும் அனுப்பலாம். ரூ50,000 பரிசு வழங்கப்படும். 3 பிரதிகள் அனுப்ப வேண்டும். கடைசி தேதி :  15-4-2014 முகவரி: அரிமா மு ஜீவானந்தம் இலக்கியப்பரிசு பாலாஜி ரோடுலைன்ஸ், 51/38, சரவணா தெரு, அவினாசி சாலை, திருப்பூர் 641 602