மாணவத் தற்கொலைகள் தினப்படி செய்தியாகி விட்ட நிலையில் கேள்விப்படும் ஒவ்வொருவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன் தன் ஆசிரியையை கத்தியால் பலமுறைக் குத்து கொன்ற சம்பவம். யார் காரணம் ? யாரின் பங்கு அதிகம்? பள்ளி நிர்வாகமா, பெற்றோரா, ஆசிரியரா ? என்று திரும்பத் திரும்ப பலராலும் பேசப்பட்டு வரும் விஷயம். மூன்று பெண்களுக்குப் பிறகு பிறந்த செல்ல ஆண் பிள்ளையாக தினம் நூறு ரூபாய் கையில் எடுத்து வரும் ஒரு […]
– எஸ்ஸார்சி (குறுநாவல்) அவனும் அவளும் மும்பை சென்று வந்தார்கள். விடுப்புச்சலுகைப்பயணம் என்கிற அந்த வசதியை பயன்படுத்திக்கொண்டுதான். மைய அரசின் ஒரு அலுவலகத்தில் அவன் பணி புரிவதாலே அவர்கள் தந்த சலுகை. நான்காண்டுகளுக்கு ஒரு தடவை பறந்து விரிந்த இந்த இந்திய தேசத்தில் எங்கேயாவது ஒரு ஊருக்கு குடும்பத்தோடு சென்று திரும்பலாம். குடும்பம் என்பது எது என்கிற வினாவுக்கு ச்சரியாக விடை தெரிந்திருக்க வேண்டும். தெரியாவிட்டால் கூட அப்படி ஒன்றும் பாதகம் இல்லை. நீட்டி முழக்கி வியாக்கியானங்கள் […]
அழகான சிறகு முளைத்து இதயம் அண்டவெளியில் பறக்கும்… அருகே ஒரு வானம் உருவாகும், உனக்கும் அது பிடிக்கும்… இந்த வெளிகளெல்லாம் கடந்து காட்சிகள் புலனாகும்… மொத்தத்தில் மனம் தூய்மையாகும்… காலம் அல்லாத காலம் உருவாகும்… காகிதமில்லாமல் புத்தகம் உண்டாகும்… மரம் செடி கொடிகளில்லாமல், உனக்காய் காற்றுக் கூட வரும் சுவாசிக்க… உடல் நொந்திடாமல் தென்றல் வீசிடும் இதமாக… மனிதரில் பல ரகம், உனக்காய் தனியொரு கிரகம் உருவாகும்… உள்ளம் தனி உருவமாக வெளியே வந்து தோன்றிடுமே… மொத்தத்தில் […]
கு.அழகர்சாமி சென்னைப் பள்ளியொன்றில் பதினைந்து வயது கூட முழுமையடையாத ஒரு மாணவன் தன் பள்ளி ஆசிரியையைக் குத்தி கொலை செய்தது அதிர்ச்சியாகவும் துயரமாகவும் இருக்கிறது. நம் கலாச்சாரச் சூழலில் எப்படி இது நடந்தது என்ற தொனியும் அதில் இருக்கிறது. தன் பாடத்தில் சரியாகத் தேர்ச்சி பெறாத மாணவனின் டயரியில் தன் ஆசிரியை எழுதிய குறிப்புகளின் மேல் ஆத்திரப்பட்டு மாணவன் இந்தக் கொலைச் செயலை நடத்தியிருக்கிறான். ஏன் நடந்தது இது? என்ற கேள்வி எல்லோருடைய மனத்திலும் உருத்துகிறது. அது […]
முன்னுரை: இருபதாம் நூற்றாண்டு தொழிற் புரட்சியிலே உலக நாடுகளில் எழுந்த ஆயிரக் கணக்கான இரசாயன தொழிற்சாலைகள் & நூற்றுக் கணக்கான அணுமின்சக்தி நிலையங்கள் போன்றவற்றில் வெளியாகும் திரவ, கடின, வாயுக் கழிவுகளின்றி அவை தொடர்ந்து இயங்க முடிவதில்லை. அந்த யந்திர இயக்க உற்பத்திக் கூடங்கள் டிசைன் ஆகும் போதே அவற்றின் கழிவுகளைச் சூழ்வெளிப் பாதக விளைவு களின்றி எப்படிப் பாதுகாப்பாய்க் கையாளுவது, கண்காணிப்பது, புதைப்பது என்ற விளக்கமான வினை முறைகளும் தயாரிக்கப் பட வேண்டும். […]
இவள் பாரதி நான் கொலையுண்ட நேற்றிலிருந்து மழை முகிழ்க்கும் கார் மேகங்கள் கலைந்துவிட்டிருந்தன.. நான் மண் சரிந்த கணத்திலிருந்து பூமித்தாயின் ஓலம் வானமெங்கும் எதிரொலிக்கிறது நான் வெட்டப்பட்ட மாலையிலிருந்து காற்றிலிருக்கும் பிராணவாயு நின்றுவிட்டது.. என் உறுப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறியபோது என்னைக் கடந்து சென்றோருக்கு எந்த குற்றவுணர்வோ இரக்கமோ கூட இருக்கவில்லை.. இதற்கு மேல் ஒரு இனத்தின் மரணம் குறித்து பேச ஒன்றுமில்லை
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com இன்று மனிதர்கள் மதத்தால், இனத்தால், மொழியால், நிறத்தால், அரசியலால் பிளவுபட்டுத் தங்களுக்குள் வேறுபட்டு ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு முயன்று கொண்டிருக்கின்றனர். நாட்டிற்கு நாடு மக்கள் வேபட்டு மனம் குறுகி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முனைகின்றனர். நாட்டுக்கு நாடு மட்டுமல்லாது ஒரே நாட்டிற்குள்ளும் இத்தகைய நிலைமையே அதிகரித்துள்ளது. நாட்டிற்குள்ளும், மாநிலத்திற்குள், மாவட்டத்திற்குள், வட்டம், ஊர், கிராமம், தெரு, வீடு, உறவுகள் என இவ்வேற்றுமை என்ற பகையுணர்ச்சி […]
“காரி ஸ்னைடர்” தற்போது எண்பத்து இரண்டு வயதான அமெரிக்கக் கவிஞராவார். “பீட்ஸ்” என அறுபதுகளில் அறியப்பட்ட காலகட்டத்து அமெரிக்கக் கவிஞர்களுள் ஒருவர். ஸான் “பிரான்ஸிஸ்கோ மறுமலர்ச்சி ” என்னும் புதுக்கவிதை எழுச்சிக்காலத்தில் ஒரு முக்கியமான முன்னோடி. புலிட்ஸர் பரிசைப் பெற்ற இவர் இருபதாம் நூற்றாண்டின் மிகப் பிரசித்தி பெற்ற “ஸுஸுகி” என்னும் ஜென் சிந்தனையாளரால் ஈர்க்கப் பட்டவர். இவரது கவிதைகளில் சில ஒரு மேற்கத்தியரின் ஜென் பற்றிய புரிதலாகக் காணக் கிடைக்கின்றன. ஸ்னைடர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த […]
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா The Greek Sun God in His Chariot முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் […]
ஆதாம் ஏவாள் பிறந்த மேனியில் காதலர் தின வாழ்த்து ஓலையில் எழுதிய முதலிரு காதலர் ! காதல் என்பது கனவு, களவு, உறவு, பிரிவு, துறவு ! இரகசியத் தேடல் ! முரசத்தில் அடித்து அதை முத்திரை செய்வது முறை ஆகுமா ? காதற் புறாக்கள் தூது போய்ப் பாதிக்கப் படும் வேதனை விழா இது ! நீதியும் போதனையும் வேதமும் மருந் தில்லை காதலர் புண்ணுக்கு ! நீயும் நானும் ஓயாக் கடல் மேல் பாய்மரப் […]