ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2015

This entry is part 12 of 26 in the series 22 பெப்ருவரி 2015

அன்புடையீர், 2015 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி  2015  மாத இதழ்  இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot   கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 500 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.   தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.   நன்றி.   சித்ரா சிவகுமார்

பிறவி மறதி

This entry is part 13 of 26 in the series 22 பெப்ருவரி 2015

சேயோன் யாழ்வேந்தன் நான் பாறையாக இருந்தபோது இந்தப் பறவை பலமுறை என்மீது அமர்ந்திருக்கிறது நான் மரமாக இருந்தபோது என் கிளையொன்றில் அது கூடுகட்டியிருந்தது நான் நதியாக ஓடுகையில் சிலசமயம் சிறகை நனைத்து சிலிர்த்திருக்கிறது இப்போது என்னை அடையாளமே தெரியாததுபோல் பறந்துகொண்டிருக்கிறது அப்பறவை ஞாபக மறதி ஒரு நோய் பிறவியை மறப்பது பெரிதினும் பெரிய நோய் -சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)

பலி

This entry is part 14 of 26 in the series 22 பெப்ருவரி 2015

யார் வீட்டு வாசலில் சென்னை விலாசம் எழுதிக்கொண்ட ஒரு போலிஸ் வேன் வந்து நிற்கிறது.இரண்டு பெண் போலிஸ்காரர்கள் ஒரு போலிஸ் அதிகாரியும் அதனிலிருந்து இறங்கி நிற்கிறார்கள். ஹெட் கிளார்க் அந்த எபனேசர் மேடம் வீட்டு வாசலில்தான். ‘ன்’ என்றோ ‘ர்’ என்றோ ஒருவரின் பெயர் முடிந்தால் அது ஆடவரைமட்டும்தான் குறிக்குமா என்ன . அப்படி சட்டென்று யாரும் ஒரு முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். விஷயம் தெரிந்தவர்கட்கு இது தெரியும். கொஞ்சம் தெரியாதவர்கட்குமட்டுந்தானே நானும் எப்போதும் சொல்கிறேன். சமுத்திர […]

வைரமணிக் கதைகள் -4 அழகி வீட்டு நிழல்

This entry is part 15 of 26 in the series 22 பெப்ருவரி 2015

வாரத்தில் ஒருநாள் திருநாகேச்சுரத்துக்கு வந்துவிட வேண்டும் பாலாமணிக்கு. இந்த நாள், இன்ன மணி, இந்தக் கிழமை என்றில்லை. ஓய்கிற நாள். ஓய்கிற வேளை. இன்று ஓய்ந்தது. இரவு எட்டு மணிக்குப் புறப்பட்டாள். டவுன் பஸ்ஸில்தான். கும்பகோணத்திலிருந்து திருநாகேச்சுரத்திற்கு டவுன் பஸ்ஸாய்ப் பறக்கிறது. மணிக்கூண்டு, மார்க்கெட், மாமாங்கக்குளம் என்று மெஸ்ஸுக்கு காய்கறியோ, மளிகைச் சாமானோ வாங்க பாலாமணி அலைகிற போதெல்லாம் திருநாகேச்சுரம் போகும் பஸ் கண்ணில் தட்டுப்படும். ‘இன்னிக்கு ஓயல்லேம்மா. நாளைக்கு வந்துடறேன்’ என்று மனசுள் பாலாம்பிகையிடம் சொல்லிக் […]

சிறந்த சிறுகதைகள் – ஒரு பார்வை-1

This entry is part 16 of 26 in the series 22 பெப்ருவரி 2015

என் செல்வராஜ்   சிறுகதைகள் பல்லாயிரக் கணக்கில் வெளிவந்துள்ளன. வாரந்தோறும் பல வார இதழ்களும், நாளிதழின் வார இணைப்புக்களும் சிறுகதைகளை வெளியிட்டு வருகின்றன. பெரும்பான்மை மாத இதழ்களும் சிறுகதைகளை வெளியிட்டு வருகின்றன. இலக்கியச் சிந்தனை அமைப்பு தமிழில் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்தவற்றை மாதாமாதம் தேர்ந்தெடுத்து வருகின்றது. வருட முடிவில் அந்த ஆண்டுக்கான சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்கிறது. 12 மாதங்களுக்கான சிறந்த கதைகளை வானதி பதிப்பகம் ஆண்டுக்கான கதையின் தலைப்பில் புத்தகமாக வெளியிடுகிறது.   2000 வரையான கதைகளில் […]

தொடுவானம் 56. மணியோசை

This entry is part 17 of 26 in the series 22 பெப்ருவரி 2015

          ஊர் செல்லுமுன் சென்னை சென்று அண்ணனைப் பார்த்தேன். அவரும் இந்த மாதத்தில் பி.டி. பட்டப் படிப்பின் தேர்வு எழுதிவிடுவார். அதன்பின்பு ஊர் வந்துவிட்டு அண்ணியைப் பார்க்க திருச்சி செல்வார்.            அவரிடம் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி பற்றி கூறினேன். தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைக்கு அதில் ஓர்  இடம் உள்ளது பற்றி கூறினேன். ராஜ்குமார் சொன்னது பற்றியும் தெரிவித்தேன்.           அந்த ஒரு இடத்துக்கு நானும் முயற்சி செய்யப் போவதாகக் கூறினேன். அவர் அப்படியே […]

இலக்கியச் சோலை,கூத்தப்பாக்கம் நாள் : 1-3-2015 ஞாயிறு காலை 10 மணி

This entry is part 18 of 26 in the series 22 பெப்ருவரி 2015

இலக்கியச் சோலை,கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண்: 153 நாள் : 1-3-2015 ஞாயிறு காலை 10 மணி இடம் : ஆர்.கே.வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம். நிகழ் முறை தலைவர் : திரு வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை. வரவேற்புரை : முனைவர் திரு ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை. சிறப்புரை : புதுச்சேரி தொண்டை மண்டல நாணயவியல் கழகத் தலைவர் திரு. கே. கோபிராமன் “தொல்லியல்—ஓர் அறிமுகம் என்பது பற்றி காட்சிப் பொருள்களுடன் உரையாற்றுவார். நன்றியுரை […]

இருதலைக் கொள்ளியில் அகப்பட்ட எறும்பு

This entry is part 19 of 26 in the series 22 பெப்ருவரி 2015

    சோழ மன்னன் உலா வருகிறான். அவன் மீது காதல் கொண்ட ஒரு தலைவி அதைக் கேள்விப்பட்டாள். அவன் ஒவ்வொரு தெருவாக வந்து போவதற்குள் நடு இரவு வந்து விடும். எனவே அவன் தன் வீட்டுக்குப் பக்கத்தில் வரும்போதே அவனைக் கண்டு விட தலைவி எண்ணுகிறாள். இதோ வீட்டுக்கு அருகில் மன்னன் வரும் ஒலிகள் கேட்கின்றன. மனமானது அந்த மன்னனைக் காணும் ஆசையால் தெரு வாசலுக்கு விரைகின்றது. ஆனால் நாணமானது அந்த மனத்தைப் பின்னுக்கு இழுத்து […]

விதைபோடும் மரங்கள்

This entry is part 20 of 26 in the series 22 பெப்ருவரி 2015

அந்த ஊரில் இருந்த ஒரே பள்ளிக்கூடம் அதுதான். அதுவும் இப்போதோ அப்போதோ விழுந்து விடும் நிலையில்தான் இருந்தது. மழை பொய்த்துவிட்ட காலமாகிப்போனதால் இன்னும் ஓரிரண்டு வருடங்களுக்குத் தாங்கும் என்று ஊர் மக்கள் பேசிக் கொண்டார்கள். பெண்கள் பேச்சு வேறாக இருந்தது. அவர்கள் அந்தப்பக்கம் போகும்போதெல்லாம் ஒருவித அச்சத்துடனே அந்தப் பள்ளிக்கூடத்தைப் பார்த்துக் கொண்டு போனார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மாந்தோப்பில் இப்போது கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்துகொண்டிருப்பவர்கள், பள்ளிக்கூடம் இடிந்து போனால் அந்த இடத்தை தங்கள் விற்பனைக்குத் […]

மண்ணில் புதைந்து கிடக்கும் வரலாற்று ஆவணங்கள்

This entry is part 22 of 26 in the series 22 பெப்ருவரி 2015

வைகை அனிஷ் இந்திய வரலாற்றை அறிவியல் ப+ர்வமாக ஆய்வு செய்வதற்கும் உண்மையான வரலாற்றை காலவாரியாக எடுத்துக்கூறுவதற்கும் தொல்லியல் சான்றுகளே மிகுந்த துணைபுரிகின்றன. மனித குல வரலாற்றில் எளிய மக்களின் வாழ்வையும், நடுத்தர, உயர்குடி மக்களின் வாழ்வையும் தொல்லியல் சான்றுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்கள், தேவாலயங்கள்,பள்ளிவாசல்கள்,  மற்றும் அகழாய்வுகள் ஒவ்வொரு கால கட்டத்திலும் வாழ்ந்த மக்களின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.  இதே போன்று மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள், அவர் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் […]