மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திவரும் நாவல் போட்டியின் வரிசையில் மூன்றாம் போட்டி 2012இல் தொடங்கப்பட்டது. அப்போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கும் விழா கடந்த பெப்ரவரி 21அன்று மலேசியத் தலை நகர் குவால லும்பூரில் நடைபெற்றது. முதன்மைப் பரிசு ஆதி.குமணன் நினைவுப் பரிசான 10,000 ரிங்கிட்டையும் சென்னைக்குச் சென்றுவரும் விமான டிக்கட்டையும் வென்றவர் “துளசி” எனும் நாவலை எழுதிய ஓர் புதிய இளம் எழுத்தாளரான மாதுரி மனோகரன். முதல் பரிசான […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நிரம்பப் பேசி விட்டாய் நீ இங்கு வந்து ஒரு வார்த்தை சொல்லாது ! உன்வாய் மொழியைப் புரிந்து கொள்ளும் நம்பிக்கை இழந்து விட்டேன் ! புன்னகை அம்பை என்மேல் ஏவி புகுந்து கொண்டாய் நீ என் ஆத்மாவில் ஆழ்ந்திருக்கும் ஏதோ ஒன்றில் ! உடனே ஆர்வமோடு உற்று நோக்குவாய் என் முகத்தினை ! ஆகவே உன்னைத் தவிர்க்க முனைகிறேன் என் புற […]
தவ்லீன் சிங் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுருத்தல் இன்று ஜிகாதி பயங்கரவாதமே. எப்போதாவது நமது அரசியல்தலைவர்கள் இதனை அங்கீகரித்து கேட்டிருக்கிறீர்களா? ஜிகாத் என்பது இந்தியா என்ற கருத்துக்கே எதிரானதாகவும், அதன் அடிப்படை கருத்து இந்தியாவை இன்னொரு முறை இஸ்லாமின் பெயரால் உடைப்பதுதான் என்பதை ஒப்புகொண்டு பார்த்திருக்கிறீர்களா? இந்த நாட்டின் மக்களிடம், தெளிவாக, கார்கில் போருக்கு பின்னால், பாகிஸ்தானிய ராணுவம், இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களுக்கு பணம் பொருள், ஆயுத உதவி கொடுத்து உருவாக்கி இந்தியாவுக்கு எதிராக அதன் உள்ளிருந்தே […]
க்ருஷ்ணகுமார் உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. வள்ளல் அருணகிரிப் பெருமான் – கந்தர் அனுபூதி – பாடல் – 51 சீக்கியர்களின் மதநூலான குருக்ரந்த் சாஹேப்பில் மூல்மந்தர் (மூல மந்திரம்) என்றழைக்கப்படும் முதற்பாடல் சரியான உச்சரிப்பைச் சுட்ட தேவ நாகர லிபியிலும் ஆங்க்ல லிபியிலும் தட்டச்சப்பட்டுள்ளது இக் ஓம்கார் इक ओम्कार ik OmkAr பரம்பொருள் ஒன்றே ஸத்நாம் […]
– இவள் பாரதி எப்போதும் தீப்பற்றிக் கொள்ளும் வார்த்தைகள்தான் வீசப்படுகின்றன எதிர்கொள்கிற என்னிடமிருக்கும் பஞ்சுபோன்ற வார்த்தைகள் பற்றி எரிகிறது பலத்த சத்தத்துடன்.. அந்த நெருப்புப் பொறியில் எல்லோரையும் பற்றும் தீ கடைசியில் சாம்பலாகிறது கொஞ்சம் சமாதானத்துடனும் நிறைய சச்சரவுகளுடனும்
புனைப்பெயரில் ”அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு” வள்ளுவம் சொல்லும் வாழ்வு முறை. “ஆதிபகவன்” என்ற வார்த்தை தமிழர்களின் உணர்வோடும் வாழ்வோடும் கலந்த வார்த்தை. கடவுள் மறுப்புச் சொல்பவர் கூட தாய்க்கு சிலை வைத்து பூஜை செய்யும் கலாச்சாரம் பிண்ணிப் பிணைந்த இனத்தின் மொழியில் “ஆதிபகவன்” என்ற சொல்லிற்கு உயிர்ப்பான அர்த்தம் உண்டு. உலகின் ஆதியான கடவுளையும் மொழியால் சொல்லப்படும் அர்த்தங்களையும் இணைப்பாக கொண்ட குறளால், பூஜிக்கப்படும் ஒரு இனத்தின் வரிகளின் வார்த்தை “ஆதிபகவன்” ஆதிபகவன் -> […]
எத்தனுக்கு எத்தன் கதையைப், பரபரவென்று, 143 ந்¢மிடங்களில் சொல்லும் படம். புலனாய்வு துறை வேலை மறுக்கப்பட்டவன், பொய்யாக ஒரு புலனாய்வு குழு அமைத்து, கணக்கில் வராத பணத்தையும், நகைகளையும் அபகரிப்பது ஒன் லைன். ரசிகனை யோசிக்க விடாமல், துரித தூரந்தோ எக்ஸ்பிரஸாக அமைக்கப்பட்ட திரைக்கதை, மெயின் லைன். ‘எ வெட்னஸ்டே’ படத்துக்குப் பிறகு வந்திருக்கும், நீரஜ் பாண்டேயின் படம். எதிர்பார்ப்புக்கு மேலேயே இருப்பது, அவருக்கு பச்சைக் கொடி. அடிதடி ஆர்ப்பாட்டம் இல்லாமல் அக்ஷய் குமார், ஏழு பிள்ளைகள் […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி நிகழும். அவை ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போன்றது. மனித மனம் இன்பத்தை மட்டுமே விரும்புகின்றது. அம்மனம் துன்பத்தைச் சந்திக்கும்போது துவண்டு போகின்றது. மனிதன் துன்பத்தில் உழலுகின்றபோது தன்னை இழந்துவிடுகின்றான். துன்ப முடிவினைக் கொண்டு முடியும் உலக இலக்கியங்கள் மக்களின் மனங்களில் என்றும் நிலைத்து நிற்கின்றன. உலகின் மிகச்சிறந்த அவலக் காப்பியமாக சிலப்பதிகாரம் திகழ்கின்றது. இக்காப்பியத்தில் அமைந்திருக்கும் அவலம்போன்று வேறு […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நள்ளிரவு தாண்டியிருக்கும். சாஹிதிக்கு திடீரென்று விழிப்பு ஏற்பட்டது. ரொம்பவும் தாகமாய் இருந்தது. எழுந்து தண்ணீருக்காகப் பார்த்தாள். அறையில் எங்குமே இல்லை. அவளுக்கு ஜுரம் வந்தது முதல் நிர்மலா அந்த அறையிலேயேதான் படுத்துக்கொண்டாள். தாயின் தவிப்பைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு அன்பும், இரக்கமும் பெருக்கேடுத்துக் கொண்டே இருந்தன. நிர்மலா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். சாஹிதிக்கு தூக்கம் வரவில்லை. தாகம் அதிகரித்தது. தாயை எழுப்புவதில் விருப்பம் இல்லாமல் […]
வால்ட் விட்மன் வசன கவிதை -12 என்னைப் பற்றிய பாடல் – 5 (Song of Myself) (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா +++++++++++++++ புவியில் பிறந்தது எத்தகை அதிர்ஷ்ட மென எவராவது நினைத்த துண்டா ? எனக்குத் தெரியும், அப்படிச் சொல்வோரிடம் விரைவில் நான் சொல்வேன் இறப்பதும் ஓர் அதிர்ஷ்டம் என்று ! புறக்கணிப்பேன் மரணத்தை நான் இறப்பிலும், பிறப்பிலும் […]