அம்மாவின்?

This entry is part 1 of 13 in the series 28 பெப்ருவரி 2016

    அம்மாவே ஆசான் அந்த ஓவியன் முதலில் தன்னை வயிற்றில் சுமந்த நிலை   பின்னர் கையில் பாலாடை   அடுத்து அமுதூட்டும் கிண்ணத்துடன்   கையில் கரண்டியும் அருகில் அடுப்பும்   பேரனைச் சுமக்கும் நடுவயது தாண்டிய கைகள்   அம்மாவை ஓவியமாய் காலங்கள் தோறும் தீட்டி வைத்தான்   வெகு நாள் கழித்து அம்மா கையில் தூரிகை சுழன்றது   அர்த்த நாரிஸ்வரன் ஒரு பக்கத்தில் அவளது பாதி முகமும் வடிவும்   […]

தொடுவானம் 109. விழாக்கோலம் கண்ட தமிழகத் தேர்தல்

This entry is part 2 of 13 in the series 28 பெப்ருவரி 2016

இயல்பான நிலைக்கு வர கொஞ்ச காலம் ஆனது. கோகிலம் பற்றி யாரிடம் சொல்ல முடியும்? பெஞ்சமின் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அவனிடம் முதலில் சொன்னேன். அவன் இருவர் மேலும் தவறு இல்லை என்றுதான் ஆறுதல் சொன்னான். சம்ருதி அது பற்றி கருத்து கூறாமல் கவலைப்பட்டால் அவள் திரும்பி வரப்போகிறாளா என்று சமாதானம் சொன்னான். என் அறைக்கு அடிக்கடி வந்துபோகும் செல்வராஜ் ஆசிரியரிடம் சொன்னபோது இதை வைத்து ஓர் அருமையான நாவல் எழுதலாமே என்றார்! இறப்பு என்றாலே நேரடியாகப் […]

இன்னா இன்னுரை!

This entry is part 3 of 13 in the series 28 பெப்ருவரி 2016

முனைவர். இராம. இராமமூர்த்தி நாம் காணவிருக்கும் இக்கட்டுரைக்கண் இரண்டு செய்திகள் இடம்பெறவுள்ளன. பாடலின் மையப்பொருளாக விளங்கும் அகப்பொருட் செய்தியொன்று; பிறிதொன்று அப்பாடற்கு உறுதுணையாக விளங்குவதோடு, பண்டை நாளைய வரலாறு பற்றிய செய்தி. முதலில் அகப்பொருட் செய்திக்குறிப்பினைக் காணலாம். சங்க இலக்கியங்களில் நற்றாய்க்கு உசாத்துணையாக விளங்குபவள், அவள் தோழியாகிய செவிலி. மற்றொருவர், ’தானே அவளே’ வேறுபாடின்றி விளங்கும் தலைவியின் உயிர்த்தோழியாவாள். இவ்வருமருந்தன்ன தோழி, செவிலி(த்தாயின்) மகளாவாள். இவ்விருவரும் அகப்பொருள் இலக்கியங்களில் இன்றியமையாச் சிறப்பிடங்கள் பெறுதலை இலக்கியங்கற்போர் நன்கறிவர். ஈண்டுச் […]

டி.கே.துரைசாமியை படியுங்கள் !

This entry is part 4 of 13 in the series 28 பெப்ருவரி 2016

நேதாஜிதாசன் ராமச்சந்திரனா என கேட்பார் எந்த ராமசந்திரன் என்றும் கேட்பார் சாவிலும் சுகம் உண்டு என்பார் சுசிலா அழகு என்பார் அது ஏன் என்றும் தெரியவில்லை என்பார் இந்த மனதை வைத்து எதுவும் செய்யமுடியாது என்பார் தனிமையில் தனிமையோடு தான் இருந்தார் மஞ்சள் நிற பூனையை பற்றி சொல்வார் நினைவுப்பாதையில் நிழல் பட வாக்குமூலம் சொல்லி நாயோடு சென்றவர் அவர் இப்போது இல்லை இருந்தால் ஏன் நான் இல்லை என கேட்டிருப்பார் தயவு செய்து நகுலனை விட்டுவிடுங்கள் […]

சாமானியனின் கூச்சல்

This entry is part 5 of 13 in the series 28 பெப்ருவரி 2016

நேதாஜிதாசன் திராவிட கூச்சல் இன்னமும் கேட்டுகொண்டிருந்தது சத்தம் போடாதே என அதட்டியது காவி கூச்சல் எதை எரிக்கலாம் என தேடிக்கொண்டிருந்தது சாதி கூச்சல் யாரை விமர்சிக்க என சலித்துக்கொண்டிருந்தது இலக்கிய கூச்சல் எதை திருட என யோசித்து கொண்டிருந்தது அதிகார கூச்சல் யாரிடம் இருந்து பிடுங்க என அலைந்து கொண்டிருந்தது காக்கி கூச்சல் எங்கு ஒட்ட என இடம் தேடிக்கொண்டிருந்தது ஆளுங்கட்சியின் கூச்சல் எங்கு போக என திட்டமிட்டுகொண்டிருந்தது டீ விற்றவரின் கூச்சல் இதில் கேட்கவா போகிறது […]

பேசாமொழி மாற்று சினிமாவிற்கான மாத இதழ் – புதியது

This entry is part 6 of 13 in the series 28 பெப்ருவரி 2016

படிக்க: http://thamizhstudio.com/Pesaamozhi/index_content_38.html நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் சினிமாவிற்கான இணைய மாத இதழின் பிப்ரவரி இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. நிறைய கட்டுரைகள் ஆவணப்படுத்துதல் அடிப்படையில் பதிவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. தவிர சிவாஜி பத்மினி போன்றோர்களுக்கு மேக்கப் மேனாக இருந்த தனக்கோட்டியின் நேர்காணல், நடிப்பிற்கான ஆர்வம் எப்படி வந்தது என்பது பற்றிய சிவாஜி எழுதியுள்ள கட்டுரை, சென்னை பிலிம் சொசைட்டி நடத்திய திரைப்பட ரசனை வகுப்பு குறித்த கட்டுரை, மருதநாயகம் படம் […]

நூலின் முன்னுரை: பறந்து மறையும் கடல் நாகம் : ஜெயந்தி சங்கர் நூல்

This entry is part 7 of 13 in the series 28 பெப்ருவரி 2016

    ========================================================== நான் வெகு சமீபத்தில்  பார்த்த ஒரு சீன ஆவணப்படத்தை இங்கு நான் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். சீனாவில் தற்போதைய  மக்கள் தொகையில் 32 மில்லியன் பையன்கள் பெண்களைவிட அதிகமாக  ( இருபது வயதிற்குட்பட்டவர்களில்)  அதிர்ச்சியைத் தருகிறது.இந்த விகிதம் இந்தியாவிலும் காணப்படுவதிப்பற்ரிய்ச் செய்திகள் சமீபத்தில் அதிகரித்திருக்கின்றன. கருச்சிதைவும், குழந்தைகளின் வளர்ப்புச் சிரமங்களும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்திருக்கிறது. திருமண வயதையொட்டிய ஆண்களின் பெண் தேடலில் இது சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. பெண் குழந்தைகளை வீட்டில் […]

இனப்பெருக்கம்

This entry is part 8 of 13 in the series 28 பெப்ருவரி 2016

அழகர்சாமி சக்திவேல்    இனப்பெருக்கம் தான் திருமண வாழ்க்கையின் அர்த்தம் மதம் அடித்துச் சொன்னது. சமூகமும் ஜால்ரா அடித்தது.   ஜால்ராவின் சத்தம் கூடியபோதுதான் பிள்ளை பெற முடியாத பெண் மலடியாக்கப்பட்டாள் பிள்ளை பெற முடியாத ஆண் பொட்டை ஆக்கப்பட்டான்.   உலகத்தில் 150 மில்லியன் அனாதைகள். தத்து எடுக்க ஆள் இல்லை. காக்கை எச்சமிட்ட விதைகளாய்.. தன் பழத்தாயும் தெரியாமல் மரத்தந்தையும் புரியாமல் மதம் போற்றும் எல்லோரும் அவரவர் இனப்பெருக்கத்தில் மட்டுமே சுயநலமாய்… தன் இரத்த […]

எழுபதில் என் வாழ்க்கை

This entry is part 9 of 13 in the series 28 பெப்ருவரி 2016

    ஆட்டுக்கல் இட்டலி அம்மிச் சட்டினி கறந்தபால் நுரையொடு காலை மாலை காப்பி கூட்டாஞ்சோறு குளத்துக் கெளுத்தி மூங்கில் கட்டில் முற்றத்து நிலா கோழி மேயும் கொல்லையில் தாயம் முகம் பார்த்துப் பேச மூணாங்கிளாஸ் மூர்த்தி   பல் தேய்க்க காட்டு வேம்பு தமுக்கடிக்க தட்டான் குளம் மும்மிய வேட்டியை குடையாக விரித்து நடக்கும் பாதையில் வரப்பு நண்டு   இருப்பதைத் தொலைத்து விட்டு இத்தனையோடும் என் எழுபதின் வாழ்க்கை வேண்டும்   மறுக்கப்படும் இவைகளென்றால் […]

ரகசியங்கள்

This entry is part 10 of 13 in the series 28 பெப்ருவரி 2016

  சேயோன் யாழ்வேந்தன் ஆண் பெண் அவரவர்க்கான ரகசியங்களில் பொதுத் தன்மைகள் இருக்கின்றன. ஆண்களின் ரகசியங்களில் அதிக வேறுபாடுகள் இல்லை. மறைக்கப்பட்டிருக்கும் பெண் ரகசியங்களை மனக்கண்ணில் பார்த்துவிடுகிறார்கள் ஆண்கள். கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் மறைக்கும் ரகசியங்கள் இல்லறத்தைவிடப் புனிதமானவை. தன் ரகசியங்களைச் சட்டைகளில் எழுதிவைத்திருக்கும் பைத்தியங்களைப் பார்த்திருக்கிறேன். என் ரகசியங்கள் என்னை அறிந்திடாத வண்ணம் எனக்குள் ஒளிந்துகொள்கிறேன். குழந்தைகள் உங்கள் காதோரம் கிசுகிசுக்கும் ரகசியங்கள் ஒரு புதிய உலகத்தை உருவாக்க வல்லவை! seyonyazhvaendhan@gmail.com