சாம்பல்

This entry is part 4 of 5 in the series 9 பிப்ரவரி 2025

வளவ. துரையன் வீடு முழுவதும் உன்பெருஞ்சினத்தைஇறைத்து வைத்திருக்கிறாய்அதன் வெப்பம்வீதியெலாம் கனக்கிறதுஎப்பொழுது அதுஅணையுமென்று சிலபுறாக்கள் காத்திருக்கின்றனவிதையே இல்லாமல்பெரிய மரமாக வந்துநிற்கும் மாயம்உன்னிடம் உள்ளதுஎந்த அறைக்குள்நுழைந்தாலும் உன்வெப்ப வாசனைதான்நாசியைக் கருக்குகிறதுஅணைப்பதற்குஅறுசுவை நீர் தேடிஅலைவதே என்வாழ்வின் பெரும்பயணம்எந்த எரிமலையும்தணிந்துதான் தீரவேண்டும்சாம்பல் எப்போது வரும்?

ஆறுதலாகும் மாக்கோடுகள்

This entry is part 5 of 5 in the series 9 பிப்ரவரி 2025

ரவி அல்லது முக்கோணத்தில்முளைத்திருக்கும்கொம்பான வளைவுகளையும்.சதுரத்தில்நெளிந்திருக்கும்பின்னல்கோலங்களையும் பார்க்கும்பொழுதெல்லாம்அம்மாவின்நினைவு வரும்.அவரைப் போன்றஒருவர்இங்கிருப்பதுசற்றேஆறுதலாகத்தான்இருக்கும்.கடக்கும் கணம்நேசத்தில்ஏக்கமாக மனம் எட்டிப்பார்க்கும்.கவனம் பெறாதமாக்கோலத்தைப்போலகண்டுக்கொள்ளப்படாமல்இங்கு இவர்கள்இருப்பார்களோ என்றகவலையோடுகடப்பதுஒவ்வொரு முறையும்நடந்தேறும்இல்லாமையின்இன்னலின்நெருடலாகஎங்கேயும்எப்பொழுதும். -ரவி அல்லது.ravialladhu@gmail.com

பெயின்ட் அடிக்கும் விடலை

This entry is part 3 of 5 in the series 9 பிப்ரவரி 2025

சசிகலா விஸ்வநாதன் பதினெட்டு வயது இளந்தாரி பையன் பல வண்ணங்கள் தெறித்து,பழசான ஆங்காங்கே நைந்து போன கால்சராய்; என்றோ மஞ்சள் வண்ணத்தில் இருந்து  இன்று பல வண்ண தெறிப்புகளின் கோலம்  வண்ணக் கலவையில் அவசரமாய் முக்கியெடுத்து  பிழிந்தும், பிழியாமலும் உலர்த்தினாற் போல், மேற்சட்டை  அவன் மார்பு கூட்டை  மறைக்க;சட்டையின் நீண்டு தொங்கும் பாகம்   கையைத் துடைக்க அவன் மேலிழுக்க ஒட்டிய வயிற்றின் வறுமை காட்டியது. சுவரில் பல்லி போல் ஒட்டிக்கொண்டு, பூரான் போல் உரு மாறி கொள்ளையன் […]

உறைந்து போகுமா நயாகரா நீர்வீழ்ச்சி?

This entry is part 2 of 5 in the series 9 பிப்ரவரி 2025

குரு அரவிந்தன் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயிருப்பதாக நண்பர் தெரிவித்ததைத் தொடர்ந்து சென்ற சனிக்கிழமை நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்க்கப் போயிருந்தேன். பல தடவை கனடிய பக்கமுள்ள 187 அடி உயரமும், 2590 அடி அகலமும் கொண்ட பெரிய நீர்வீழ்ச்சிக்கு அருகே படகில் சென்று, அவர்கள் தரும் சிகப்பு நிற மழைக்கோட் அணிந்து தூவானத்தில் நனைந்து ‘மெயிட் ஆப் த மிஸ்ட்’ ஐப் பார்த்து மகிழ்ந்த எங்களுக்கு உறைந்து போன நயாகராவைப் பார்க்க வியப்பாக இருந்தது. மனிதமனங்களும் இப்டித்தான் […]

சென்றிடுவீர்  எட்டுத்  திக்கும்!

This entry is part 1 of 5 in the series 9 பிப்ரவரி 2025

சோம. அழகு அமெரிக்க வாழ் தமிழர்களின் தமிழை வைத்து அவர்களது சொந்த ஊரைக் கண்டுபிடிக்கவே இயலாது. ஏனெனில் எல்லா வட்டார வழக்குகளையும் விழுங்கிவிட்ட ஒரு செயற்கையான மேட்டுக்குடித் தமிழ் அது. குழந்தைகளின் தமிழைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். எங்கேனும் எப்போதேனும் அவர்களிடமிருந்து எட்டிப் பார்க்கும் தமிழில் ர, ட போன்ற எழுத்துகள் அவற்றை ஒத்த ஆங்கில ஒலியைப் பெற்றுவிட்டன. [ல, ள, ழ], [ர, ற] மற்றும் [ந, ன, ண] ஆகியவற்றினுள் வித்தியாசமே இல்லை. நம் […]