வரிசையில் உள்ள காலிக்கோப்பைகளில் இன்னும் சில நொடிகளில் மனிதர்களின் பொன்னான நேரம் நிரம்பிவிடும் கோப்பைகளின் வண்ணக் கரங்களில் மனிதர்கள் பொம்மைகளாக மாறுகிறார்கள் விஷக்கோப்பைகள் பெண்களை அதிகம் நேசிக்கின்றன விழி உருட்டல்களில் சதித்திட்டங்கள் பலப்பல உருவாகின்றன அழகான பெண்கள் அழுத வண்ணம் … அபத்தங்கள் களைகட்டிச் செழிக்கின்றன உண்வு தண்ணீர் குடும்பம் எல்லாம் மறந்து போகும் அறிவு உறிஞ்சப்பட்டு மனிதர்கள் சக்கையாக வீசப்படுகிறார்கள் தொலைக்காட்சித் தொடர்களின் கோர வாய்க்குள் கிடக்கும் மனிதர்களை வெளியே எடுப்பது எப்படி […]
எழுத்தாளர்களுக்கு விருதளித்து கெளரவிப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் விளக்கு அமைப்புக்கும் இந்த மதுரை மாநகரத்துக்கும் விசித்திரமானதொரு உறவு உண்டு. அந்த உறவுக்கான விதை இருபத்தேழு இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஊன்றப்பட்டுவிட்டது. இதே மதுரையில்தான் காமராசர் பல்கலைக்கழகமும் தமிழ்ச்சிறுபத்திரிகைகளும் இணைந்து ‘எண்பதுகளில் கலை இலக்கியம்’ என்னும் தலைப்பில் மூன்றுநாள் கருத்தரங்கமொன்றை நடத்தினார்கள். இதற்குப் பின்னணியாக பெங்களூர் நண்பர்கள் வட்டம் இருந்தது. தமிழவன், காவ்யா சண்முகசுந்தரம், ஜி.கே.ராமசாமி, ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன், மகாலிங்கம், முகம்மது அலி, நஞ்சுண்டன், கிருஷ்ணசாமி, கோ.ராஜாராம் ஆகியோரைக் […]
நேற்று அந்த நீளமான பஃபே லைனில் பக்கத்தில் வந்து நின்றவர் தூரத்து நண்பர். மனநல மருத்துவர். ரொம்ப நாள் கழித்து பார்க்கிறோம். சம்பிரதாய விசாரிப்புகள் முடிந்தவுடன் தொழிலில் இருக்கும் சவால்கள் குறித்து பேச்சு வந்தது. “சமீபத்துல ஒரு பேஷண்ட்.. எது பேசினாலும் பார்ப்பனர் பார்ப்பனர்னே முடிக்கிறாரு, வர வர தொண தொணப்பு ரொம்ப ஜாஸ்தியாகிட்டே போகுது, கொஞ்சம் என்னன்னு பாருங்கன்னு அவர் பிரண்ட்ஸ் கூட்டிட்டு வந்தாங்க… சரின்னு உக்கார வச்சி Rorschach test கொடுத்தேன்” “அப்படின்னா” “அதாம்பா.. […]
ரஜினி படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது என்ற அரிச்சுவடியையும் மீறி படம் பார்க்கும்போது மைண்ட் வாய்ஸ் எழுப்பிய குண்டக்க மண்டக்க கேள்விகள்: உள்ளத்தை அள்ளித்தா படத்தில் மணிவண்ணனை கடத்தி வைத்து கோத்தகிரி பெண்டுக்கு வந்து பணத்தை கொடுத்து மீட்டுக்கொள்ளும்படி சொல்லும்போது, அந்த நாய்க்காக அவ்ளோ தூரம்லாம் வரமுடியாதுடா அப்பிடி வேலியோரமா வந்து வாங்கிக்க என்பார் கவுண்டபெல். அது போல இந்த படத்தில் எதற்கு மும்பை? போதைப்பொருள் கடத்தல் மாஃபியா டான் என்றவுடன் மும்பை என்று முடிவு செஞ்சிட்டாங்க […]
அறமற்ற துறையால் மிக மோசமாக நிர்வகிக்கப்படும் தமிழ்நாட்டுக் கோவில்களுக்குள் நான் நுழைவதில்லை என்பதில் பலகாலம் பிடிவாதமாக இருந்திருக்கிறேன். நமது பேராலயங்களின் முக்கியத்துவம் அறியாத, அதன் மதிப்பு குறித்து சிறிதும் அறிவில்லாத மூடர்கள் மட்டுமே தமிழக அறமற்ற துறையில் வேலை செய்கிறார்கள் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை. பாழடைந்து இடியும் நிலையில் உள்ள நமது பேராலயங்களின் கதியைக் காண்கையில் ரத்தக் கொதிப்பு வந்துவிடுகிறது. மண்டபங்களைக் கார் நிறுத்தும் இடமாகப் பயன்படுத்தும் அறமற்ற துறை அதிகாரிகளை என்ன சொல்வது? அப்படியே […]
தமிழ்நாட்டை விட்டு விலகி பலகாலம் சென்றுவிட்டு மீண்டும் தமிழகத்திற்குள் காலடி எடுத்துவைப்பவர்களுக்கு உடனடியாக முகத்தில் அறைவது அதன் மயான அமைதிதான்! தமிழர்கள் சப்தமானவர்கள். அது பேச்சானாலும் சரி, பாட்டானாலும் சரி, உச்சஸ்தாயிதான் அவர்களின் அடையாளமே. இன்றைக்கு அதெல்லாம் எங்கு போனதென்றே தெரியவில்லை. விடிந்தும் விடியாத காலைப் பொழுதில், பல் விளக்காமல் பொடிநடையாக நடந்து, ஓலைக்கூரையிட்ட அய்யாவு டீக்கடைக்குப் போனால், அய்யாவு அப்போதுதான் நன்றாக புளி போட்டுப் பள, பளவென விளக்கிய செம்பு பாய்லரில் பட்டை தீட்டி பொட்டு […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ https://www.fastcompany.com/90448176/inside-nasas-2-5-billion-mission-to-find-evidence-of-life-on-mars https://www.jpl.nasa.gov/news/news.php?feature=7563 https://youtu.be/s595S1Vf3PE செவ்வாய்க் கோள் தென் துருவத்தில் எரிந்து தணிந்த பூர்வீகப் பூத எரிமலை +++++++++++++ 2020 ஆண்டில் நாசா மீண்டும் செவ்வாய்க் கோளுக்குப் பயணம். நாசா ஏவப்போகும் 2020 புதுத் தளவுர்தி செந்நிறக்கொள் செவ்வாயிக்கு மீண்டும் போக குறி வைக்கிறது. பிரதம குறிக்கோள் மனிதர் இயக்கும் விண்கப்பல் செவ்வாய்க் கோளைச் சுற்றுவது, தளவூர்தியை இறக்குவது, மனிதர் இயக்கும் தளவூர்தி செவ்வாய்க் கோளை ஆராய்வது. […]
பவானி ரெகு பச்சை தேவையெனப் பித்தேறி மனம் பகலிரவுப் பொழுதுகளைப் பலியாக்கிச் சென்று, அச்சம் இலா நெறி அடி யொழுகியேனும் அடர்பச்சைக்கு நிதம் அடிபணிந் தேகும். இச்சகத்தில் இப்புறம் தேடா இருமருங்கின் அப்புறம் காணும் நிச்சயமற்றதை நினைந்தேங்கி, நிம்மதி தொலைத் திங்கே வாழ்வு! பவானி ரெகு
திருப்பூரில் சேவ் அலுவலகம், ( கலைஞர் அறிவாலயம் அருகில்)5, அய்ஸ்வர்யா நகர், அரசு பொது மருத்துவமனை அருகில்., தாராபுரம் சாலையில் 12/1/2020 அன்று நடைபெற்றது . திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு, ( Federation of Film Societies of India ) , கனவு – “ சேவ் “ இணைந்து நடத்தின விழாவில் திரைக்கதையாசிரியர் கதிர் பேசுகையில்;: ஒரு திரைப்படத்திற்கு நூறு சதவீதம் அடிப்படை பலமாக விளங்குவது திரைக்கதையாகும். திரைக்கதையை பயிலும் இளைஞர்கள் நல்ல புத்தகங்களை, […]
அன்பார்ந்த வாசகர்களுக்கு, சொல்வனம் இணையப் பத்திரிகையின் 214 ஆம் இதழ் இன்று (12 ஜனவரி 2020) வெளியிடப்பட்டது. இதழை solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின் வருமாறு: சிறுகதைகள்: அலகுடைய விளையாட்டு – சிவா கிருஷ்ணமூர்த்தி உயிராயுதம் – கமலதேவி 2016 – எண்கள் – அமர்நாத் ஒரு தூரிகை – ஜான் பெர்ஜர் தமிழில்: மைத்ரேயன் கட்டுரைகள்: சட்டம் யார் கையில் – பகுதி 2 -ரவி நடராஜன் இஸ்லாமியத் தீவிரவாதமும் அமெரிக்கப் பிடிவாதமும் – லதா குப்பா முரல் நீங்கிய புறா- நூல் அறிமுகம் – மு. கோபி சரபோஜி கவிதைகள்: விஜயா சிங் கவிதைகள் – தமிழில்: கோரா தன்னந்தனியே – வோர்ட்ஸ்வொர்த் – தமிழில்: இரா.இரமணன் நிழலென்னும் அண்ணன் – ஸ்வேதா புகழேந்தி பிற: மகரந்தம் – பதிப்புக் குழு படித்த பிறகு உங்கள் […]