மதுவும் கல்லீரல் செயலிழப்பும்

This entry is part 6 of 15 in the series 14 ஜனவரி 2018

            மதுவை உடைத்து உடலிலிருந்து வெளியேற்றுவது கல்லீரல். தினமும் தொடர்ந்து மது பருகினால் கல்லீரலின் இந்த வேலை பளு அதிகமாகி அதன் செல்கள் ( cells – இதற்கு சரியான வார்த்தை தமிழில் இல்லை ) அழிவுக்கு உள்ளாகின்றன. அந்தப் பகுதியில் தழும்புகள் ( scars ) நிறைந்துவிடுகின்றன. இவற்றால் கல்லீரலின் வேலையைச் செய்ய இயலாது. இவ்வாறு தழும்புகளால் சுருங்கிப்போன கல்லீரலை கரணை நோய், ஈரல் இறுக்கி நோய் அல்லது ஆங்கிலத்தில் […]

கண்காட்சி

This entry is part 13 of 15 in the series 14 ஜனவரி 2018

ஒருவிதத்தில் அதுவுமோர் அருவவெளிதான்…. அந்த விரிபரப்பெங்கும் அங்கிங்கெனாதபடி அலைபாய்ந்துகொண்டிருக்கின்றன ஆட்கொல்லிப் புகைப்படக்கருவிகள், அனுமதியின்றியே ஸெல்ஃபியெடுக்கும் கைபேசிகள், வாயைக் கிழித்துப் பிளப்பதாய் நீட்டப்படும் ஒலிவாங்கிகள்….. போர்க்கால நடவடிக்கையாய், பேசு பேசு பேசு….’ என்று அவசரப்படுத்திக்கொண்டேயிருக்கின்றன அத்தனை காலமும் பொதுவெளியில் பரஸ்பரம் கடித்துக்குதறிக்கொண்டிருந்தவர்கள் – ஆறாக்காய ரணமாய் அவமதித்துக்கொண்டிருந்தவர்கள் ஆயத்த ஆடையாய் நேச அரிதாரம் பூசி ‘போஸ்’ கொடுப்பதைப் பார்க்க பிரமிப்பாயிருக்கிறது. ஒரு நொடியில் வெறுப்பை விருப்பாக்கிக்கொள்ள முடிந்தவர்கள் பித்துக்குளி போலா? புத்தனுக்கும் மேலா? பெரும் வித்தக வேடதாரிகளா….? ஆடலரங்கை […]

கோதையும் குறிசொல்லிகளும்

This entry is part 14 of 15 in the series 14 ஜனவரி 2018

  ஊர்ப்பெண்களின் பிறப்பை, ஒழுக்கத்தையெல்லாம் கேள்விக்குறியாக்குவதே பாரிய தீர்வுபோலும் பிரச்சனைகளுக்கெல்லாம். பேர்பேராய் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். மாதொருபாகனை One Part Woman என்றா லது மிகப்பெரிய பெண்விடுதலை முழக்கமல்லோ. ராவணனே பரவாயில்லை யென்று ஜானகி  நினைத்ததாக முற்பிறவியில் அசோகவன மரமாயிருந்து சீதையின் மனதிற்குள் கிளைநீட்டி ஒட்டுக்கேட்டதாய் புட்டுப்புட்டு வைத்தவர்கள் இன்று ‘கால இயந்திர’த்தில் பின்னேகி கோதையின் படுக்கையறைக்குள் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆணுக்குப் பெண்ணிங்கே இளைப்பில்லை காண் – இதிலும்தான். அவரவர் வாழ்க்கையில் ஊரை அனுசரிப்பதாய் ஆயிரம் வேலிகளுக்குள் வாகாய் வாழ்ந்திருப்பவர்கள் அடுத்தவீட்டு […]

தொடுவானம் 204. மகிழ்வான மருத்துவப் பணி

This entry is part 12 of 15 in the series 14 ஜனவரி 2018

         கலைமகள் வந்தபின்பு நான் மருத்துவமனை உணவகத்தில் உண்பதை நிறுத்திக்கொண்டேன். அம்மா கலைமகளுக்கும் கலைசுந்தரிக்கும் சமையல் கற்றுத் தந்திருந்தார். . அது இப்போது எனக்கு உதவியாக இருந்தது. கலைமகள் என்னுடன் இருக்கும்வரை இங்கே சமையல் செய்யலாம். உணவுப் பிரச்னை ஒரு வகையாகத் தீர்ந்தது.           மனைவி இன்னும் மலேசியாவில்தான் .இருந்தாள். இரண்டு வாரத்துக்கு ஒரு கடிதம் வரும். அலெக்ஸ் நன்றாக இருப்பதாக எழுதுவாள்.       […]

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – ஜனவரி மாதக்கூட்டம்

This entry is part 15 of 15 in the series 14 ஜனவரி 2018

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். *  ஜனவரி  மாதக்கூட்டம் . 7/1/18 மாலை.5 மணி..       பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு ., (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர் நடைபெற்றது. தலைமை : ஏ.வி.பழனிச்சாமி-பொருளாளர் .க.இ பெ.மன்றம் சிறப்பு விருந்தினர்: கன்யாகுமரி கு.சிவராமன் எழுத்தாளர் சிறப்புரையாற்றினார். அவரின் உரையில் :;   “ இன்று நாடுகளின் எல்லைகளைக் கடந்து நிற்கும் பெருமுதலாளித்துவம் தனது தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தன்னைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்றால், சோஷலிஸம் தனது பலவீனங்களிலிருந்து […]