நல்வழியில் நடக்கும் தொல்குடி!

This entry is part 10 of 16 in the series 17 ஜனவரி 2016

  –மேகலா இராமமூர்த்தி மனிதகுலம் தோன்றிய தொடக்ககாலத்தில் மனிதர்கள் தனித்தனியாகவே வாழ்ந்தனர். காலப்போக்கில் விலங்குகளிடமிருந்தும், மழை, காற்று, தீ முதலிய இயற்கைச் சக்திகளின் இடர்களிடமிருந்தும் தம்மைக் காத்துக்கொள்வதற்காகவே அவர்கள் குழுக்களாய் வாழத்தொடங்கினர். எப்போது குழுக்கள் தோன்றினவோ அப்போதே யார் அதனை வழிநடாத்திச் செல்வது? எனும் கேள்வியும் பிறந்து, ”உடல்வன்மையும் மனத்திண்மையும் வாய்ந்தவொருவனே அதற்குத் தகுதியானவன்” என்ற தீர்வையும் அவர்கள் கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தியிருக்கவேண்டும். பின்னர், மாந்தகுலவளர்ச்சி காரணமாய், ஒரே இடத்தில் அனைவரும் வாழ்வதற்கு இயலாமல் மக்கள் இடம்பெயர்ந்தும், […]

மருத்துவக் கட்டுரை — உடலின் எதிர்ப்புச் சக்தி

This entry is part 11 of 16 in the series 17 ஜனவரி 2016

நமது உடலின் எதிர்ப்புச் சக்தியை தற்காப்பு அரண் ( defence mechanism ) எனலாம். இதை நோய் தடுப்புப் பிரிவு ( immunity system ) என்றும் கூறுவதுண்டு. உடலின் இந்த முக்கிய அங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம். நமது சுற்றுச் சூழலில் கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிர் உலகம் ஒன்று உள்ளது. இவற்றில் பல மனிதனுக்கு நோய்களை உண்டுபண்ணும் தன்மை மிக்கவை. வேறு சில நன்மை பயப்பவை. பேக்டீரியா , வைரஸ் , காளான் போன்ற்வை […]

சி.மோகனுக்கு விருது விளக்கு (2014) வழங்கும் விழா

This entry is part 12 of 16 in the series 17 ஜனவரி 2016

எழுத்தாளரும், கலை, இலக்கிய விமர்சகரும், மொழிபெயர்ப்பாளருமான சி.மோகனுக்கு 2014ஆம் ஆண்டுக்கான “விளக்கு விருது’ வழங்கப்பட்டுள்ளது.  அமெரிக்க வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பு சார்பில் புதுமைப்பித்தன் நினைவாக ஆண்டுதோறும் “விளக்கு விருது’ வழங்கப்பட்டு வருகிறது.   “விந்தை கலைஞனின் உருவச் சித்திரம்’ (ஓவியர் ராமானுஜத்தின் வாழ்வை மையமாகக் கொண்ட சிறந்த நாவல்), “தண்ணீர் சிற்பம்’ (கவிதை) “எனக்கு வீடு, நண்பர்களுக்கு அறை’ (கவிதை) உள்ளிட்டவை சி.மோகனின் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.  ஓநாய் குலச் சின்னம் என்ற சீன நாவலையும் உலகச் சிறுகதைகள் பலவற்றையும் […]

ஒலியின் வடிவம்

This entry is part 13 of 16 in the series 17 ஜனவரி 2016

    குகைக்கு வெளியே அவர் வீற்றிருந்தார்   “உங்கள் தனிமை பாதிக்கப் படுகிறது”   “இல்லை. குகையில் பாம்புகள், வௌவால்கள், அணில்கள் யாவும் உண்டு”   “உங்களைத் தேடி வந்தது…”   “எறும்புகள் உங்கள் இருப்பிடத்தை ஆக்கிரமிப்பதாய் உணர்ந்ததால்”   நான் பதிலளிக்கவில்லை   “எறும்புகள் இருப்பிடம் உங்கள் கண்ணுக்குப் புலனாகாது. நீங்கள் காண்பதெல்லாம் பாதைகள்”   “என் குரலுக்கு வடிவம் உண்டா?”   “உங்களிடம் ஆன்மீகப் பிணைப்பு இருப்பவருக்கு மட்டும்’   வணங்கி விடை […]

சிந்தனை ஒன்றுடையாள் ஸம்ஸ்க்ருதம்-தமிழ் பாலம் (தொகுப்பாசிரியர்: டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்)

This entry is part 14 of 16 in the series 17 ஜனவரி 2016

  வெளியீடு: அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் விலை: ரூ 350. தொடர்புக்கு : வர்த்தமானன் பதிப்பகம், சென்னை மின்னஞ்சல் முகவரி: varthashree@gmail.com         நூல் குறித்து     தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியாவின் மிகத் தொன்மையான செம் மொழிகள். இவற்றிடையேயான உறவு 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. ஆன்மிகம், தத்துவம், மனிதநேயம், வாழ்வியல் விழுமியங்கள், அரசு / நிர்வாகம், அழகியல் போன்ற பல களங்களிலும் இவ்விரு மொழி இலக்கியங் களில் பொதுமையான ஓட்டத்தைக் […]

“அப்துல் கலாமின் ஐஸோகண்கள்”

This entry is part 16 of 16 in the series 17 ஜனவரி 2016

 என்.துளசி அண்ணாமலை “வணக்கம். பொழுது புலர்ந்து விட்டது. திரு.சுந்தரபாண்டியன் அவர்களே, எழுந்திருங்கள்” டிஜிட்டல் அழகுக்குயிலியின் கொஞ்சல் அழைப்பில் சுந்தரபாண்டியனின் விழி மலர்கள் அசைந்தன. நெற்றியில் இலேசான சுருக்கம் ஏற்பட்டு மறைந்தது. விழிகளை மூடிய நிலையிலேயே கட்டிலினின்று எழுந்து சம்மணமிட்டு அமர்ந்தான். கைகளை ஒன்றோடொன்று அழுத்தித் தேய்த்துக் கொண்டு முகத்தைத் தடவினான். சுவாசத்தை நன்கு உள்ளிழுத்து சுவாசப்பைகளைக் காற்றினால் நிரப்பி, பின்னர் வெளியில் விட்டான். “இறைவா! எப்பொருளும் நீயெனவே எண்ணிநான் தோன்றாத வைப்பைஅழி யாநிலையா வையாய் பராபரமே”.   […]