ரவி அல்லது. தாவித் திமில் பிடித்து. தட்டுத் தடுமாறி விடாது இழுத்து. தலை குப்புற விழ வைத்து. கிழித்து இரத்தம் பீறிட கிறுக்காக்கி எகிறிக் கொண்டே இருக்கிறது இந்த எண்ணங்கள் எப்பொழுது பிடிபடாமல் ஓடி. *** –ரவி அல்லது. ravialladhu@gmail.com ***
முனைவர் ந.பாஸ்கரன் போகி பொங்கல் திருநாளை வரவேற்கும் முன்தீ நாள். மன மாசுகளையும் மனை மாசுகளையும் இரு மாசுகளையும் தின்றொழிக்கத் தீநாக்குத் தொங்கும்நாள். பழையனவற்றைப் புதியன எரித்து விரட்டும் எரிநாள். அழுக்கு அஃறிணைகளைக் கழட்டியெரித்தெறிய உயர்திணைக்கு வாய்ப்புநாள். நெருப்புநீரில்… மனப்பந்தலில் பூத்துக்குலுங்க மல்லிகைப்பூக்கள் பூக்கும்நாள். பயன்பாட்டு ஒட்டடைகளில் புதையுண்ட பொருள்கள் புதைபொருள்கள் அல்ல புதைக்கவேண்டிய பொருள்களாக்கிப் போகியோபோகியென்று உரக்கச்சொல்லும் வெளிச்சநாள். போகியின் முடிக்கும்நெருப்பு எடுக்கும். பொங்கலின் அடுப்புநெருப்புக் கொடுக்கும். — முனைவர் ந.பாஸ்கரன் இணைப்பேராசிரியர் தமிழாய்வுத்துறை பெரியார் […]
வளவ. துரையன் அரியாசனம் யாரும் அமைத்துத் தராததால் அரற்றுகிறது அசல் போலிகள் தம் பொக்கை வாயால் சிரித்துக் கொண்டிருக்கின்றன. போலிகள் எப்படியும் பொய் எனும் ஆயுதம் கொண்டு வெற்றி பெறுகிறார்கள் காலம்காலமாகவே இந்திரன்கள் வெற்றி பெற்றும் கவுதமர்கள் தோற்றுக் கொண்டும் இருக்கிறார்கள் எல்லாம் முடிந்தபிறகு கல்லாய் மாறிப்பின் கால்பட்டுப் […]
வளவ. துரையன் எங்கள் வீட்டு நாய்க்குட்டி சேற்றில் புரண்டு வந்தது. அதைக்குளிப்பாட்டினேன் எங்கள் வீட்டு பூனைக்குட்டி அணிலைப் பிடித்துத் தின்று வாயில் குருதிக் கறையுடன் வந்தது. கையிலெடுத்துத் துடைத்து விட்டேன் எங்கள்வீட்டு மல்லிகைக் கொடி நேற்றடித்த காற்றில் அலைபாய்ந்தாட அதற்கு ஒரு கொழுகொம்பு நட்டேன். என் கடைசிப் பையன் […]
சோம. அழகு தேநீர் கடைக்கும் நகல் எடுக்கும் கடைக்கும் பொதுவான இடத்தில் நின்று இனிப்பு தூக்கலான ஒரு கோப்பை பாலை ஆதினி மிடறுகளாய் மாற்றிக் கொண்டிருந்த வேளையில், வெகு நாட்களாகக் கேட்டிராத ஆனால் மனதிற்கு மிகவும் நெருக்கமான, கேட்டவுடன் மொத்தமாக உருகச் செய்கிற பாடல் ஒன்றை ஒலித்தவாறே பேருந்து ஒன்று சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்தது, இல்லை! இல்லை! ஆதினிக்காகக் காத்துக் கொண்டிருந்தது. பிடித்த பாடலை நினைத்தபொழுதெல்லாம் கேட்கக் கிடைப்பதை விட இவ்வாறு அரிதாக ஒரு அற்புதமாக போகிற […]
ஜெயானந்தன் வாழ்வின் தீரா நதியின் ஓட்டத்தில், மனித வாழ்வு எதிர்கொள்ளும் எல்லாவிதமான வலிகளும், மனித வாழ்வின் சாபம். இதில் கலைஞன் தப்பித்து சிறிது நேரம் இளைப்பாற, இலக்கியம் நிழல்தரும். ஏழை-எளிய மனிதர்களை எண்ணிப்பாருங்கள், எண்ணில் அடங்கா துயர் தருணங்கள். நடுச்சாமத்தில் பாலுக்காக அழும் குழந்தையின் வாயில், காய்ந்த முலையின் காம்புகள். கதவே இல்லாத வீட்டில், எதற்காக சாவி தேடி அலைகின்றான் குடிகாரன். அநாதையாக விட்டுச்சென்றவனின் கையில் கபால ஓடும், காவியும் எதற்கு? தப்பித்துக்கொள்ள, புத்த மடத்தையா தேடுவது. சாமியார்தனங்களில், […]
.ரவி அல்லது. தற்கொலைத் தாக்குதல் என்றான பின் யார் எங்கு எப்படி என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். யுகாந்திர நோதலின் வெறுப்புக் கனல் கொளுந்து விட்டு எரிய உதவிடும் காற்றைப் பற்றி சொல்லத் தேவையில்லை கலந்திருக்கும் மாசுக் கட்டற்று கலந்திருப்பதால். அபகரித்து ஆக்கிரமித்த நிலங்களை மீட்கும் போரில் புற முதுகிட்டு ஓடும் அவலத்தை ரசிக்க முடியவில்லை அழிவில் எம் பங்கும் மிகைத்திருப்பதால் சமாதான மேகங்கள் சூழாமல் சர்வ நாச யுத்தம் நடந்து கொண்டிருக்கும்பொழுது அங்கேயொரு மாமிச மனித பிண்டம் […]
பி.கே. சிவகுமார் (திருச்சி தந்தை பெரியார் அரசு கலை, அறிவியல் கல்லூரி தமிழாய்வுத் துறையும், நாகர்கோயில் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து எழுத்தாளர் பெருமாள் முருகன் படைப்புகள் குறித்த இருநாட்கள் பன்னாட்டுக் கருத்தரங்கை ஜனவரி 7-8, 2025 அன்று நடத்தின. இக்கருத்தரங்கில் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு திரையிடப்பட்ட கட்டுரையின் எழுத்து வடிவம் இது.) நண்பர்களுக்கு வணக்கம்! வட்டார வழக்கில் கதை சொல்வது என்பது அந்தப் பகுதியில் புழங்கும் பேச்சு வழக்கைக் கவனித்து, பெரும்பாலும் புழங்கும் உச்சரிப்பையும் மொழியாளுகையையும் பிரதியெடுப்பதாகக் […]