கிறிஸ்துமஸுக்கு முன்னாலேயே வீடுகளின் முன்புறத்திலேயோ அல்லது மரக்கிளைகளிலோ கட்டித் தொங்கவிடப்பட்ட நட்சத்திரக்கூண்டுகளின் கலர்ப்பேப்பர்கள் டிசம்பர் மாதத்தின் அசாத்தியப் பனிப்பொழிவில் வண்ணம் வெளுத்து உள்ளிருக்கும் முட்டை பல்பின் மஞ்சள் ஒளி அடுத்த ஆண்டின் பிறப்பிற்கு மங்கலமாய்க் காத்திருக்கும். கூராய்ச் சீவின பென்சிலை நட்டுவைத்தது போல இருக்கும் கிறிஸ்துவ தேவாலயங்களின் கோபுரத்தின் உச்சிவரை இழுத்து நான்கு புறங்களிலும் அலங்காரமாய்த் தொங்கவிடப்பட்ட சீரியல் விளக்குகளும், மின் மாயத்தினால் மறைந்து மறைந்து தோன்றும் சிலுவையும் அதைப்போன்றே அப்படி மறைந்து பின் தோன்றுவதால் இருபுறமும் […]
முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர் மா. மன்னர் கல்லூரி. புதுக்கோட்டை நூலாசிரியர்: சிவசக்தி இராமநாதன், வெளியீடு நந்தினி பதிப்பகம், சூர்யா பிரிண்ட் சொலுசன்ஸ்,534. காமராசர் ரோடு, சிவகாசி, 9842124415 விலை. ரு. 150 கிராமங்களில் இருந்து நகரங்களுக்குப் பெயரும் நாகரீக வாழ்க்கை என்பது தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது. நாடுகள் கடந்துப் பெருநகரத்திற்குப் போகவேண்டிய உயரத்திற்குத் தற்போதைய இந்திய மக்களின் சூழல் வளர்ந்துவிட்டது. இருப்பினும் பிறந்த நாட்டை, பிறந்த தாய்மண்ணை வெளிநாடுகளில் பெயர்ந்து வாழும் இந்தியமக்கள் மறவாமல் இருக்கிறார்கள் என்பது […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ‘அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம் ‘ அமெரிக்க ஆக்கமேதை, தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921] ‘பிண்டம், சக்திக்கு [Matter, Energy] உள்ள நெருங்கிய உறவை விளக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியே [Theory of Relativity] இதுவரைப் படைத்த சமன்பாடுகளில் மகத்தானதோர் இணைப்பாகக் கருதப்படுகிறது ‘ […]
சாமிசுரேஸ் என்னுள் ஓர் நிலம் உருக்கொள்கிறது ஊமையாய் முறிந்து போன புற்களை மெல்லத் தடவி வார்த்தேன் பதுங்கித்திரிந்த மரங்களுக்கு இறகுகள் பொருத்தினேன் என் மூச்சை ஆழப்படுத்தி காற்றைப் பதியஞ் செய்தேன் கண்கள் விரியத்தொடங்கின ——– இனி என்றுகாண்பேன் என் தெய்வீக தேசத்தை யாரிடம் கேட்பது வாழ்வின் சுவடுகளில்லை ஒரு சமூகத்தின் பிறப்பை மூழ்கடித்த பிரளயம் அரங்கேறி முடிந்து மௌனமும் கதறலுமே எதிரொலியானது உயிர் மட்டும் துடித்து எரிகிறது மயான தேசத்தின் துர்நாற்றம் தீர இன்னும் எத்தனை ஆண்டுகள் […]
ஒரு நூற்றாண்டு தன் கடனை கழித்து விட்டிருந்தது காலச் சக்கரத்தில் ஒரு பல் புதியதாய் முளைத்திருந்தது நூற்றாண்டுச் சாயமாய் அநேக தேசியச் சின்னங்கள் தோறும் சிகப்புத் திட்டுக்கள் தெறித்திருந்தன ஜன ரஞ்சகத்தின் நிகராய் கடவுள்களும் பெருத்திருந்தார்கள் கழிந்த யுகத்தின் சில காவியுடைகள் கண்ணாடிப் பெட்டகங்களில் பத்திரமாயின எப்படி நேசிப்பதென்றும் எங்ஙனம் சுவாசிப்பதென்றும் கட்டணமேற்றுக் கற்பித்தன கலாசாலைகள் இன்னமும் இவ்வுயிர் தாங்கி நிற்கும் இப்பூத உடலிற்கான வாழ்வாதாரங்கள் அமெரிக்க ஏகாபத்தியங்களென்றும் சுவாச நாளங்களுக்கான கருப் பொருட்கள் யூரோவும் டாலருமென […]
செண்பகத்தின் கைக்குப்பதிலாக வேறொரு கையை பிடித்திருந்தாள். அந்த வேறொரு கை பெண்ணுக்குரியதுக்கூட அல்ல ஆணுக்குரியது வெட்கமாகப் போய்விட்டது. அவனும் அப்போதுதான் உணர்ந்திருக்க வேண்டும். கையை உதறினான். 9. ஜெகதீசனை முதன் முதலாக பார்க்க நேர்ந்தது திருவிழாக் கும்பலொன்றில். உள்ளூரிலல்ல இருபது கல் தொலைவிலிருந்த சீர்காழியில். சித்ராங்கி பாவாடை சட்டையில் அந்திச்சூரியன்போல ஜொலித்த காலம். அப்போதும் செண்பகம்தான் அவளுக்குத் துணை. மீனாம்பாள், சத்த வண்டி அமர்த்த முலைப்பால் உற்சவத்திற்கு வந்திருந்தார்கள். சித்திரை திருவாதிரையில் பிரம்மோற்ஸவம் தொடங்கும். இதில் 2ம் […]
ஆடுகளத்தில் தனுஷ் பாடும் பாட்டு …………. ………. … சில பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே போய் குறுந்தொதொகையில் “கல் பொரு சிறுநுரையார்” கவிதை எழுதிய போது.. “அணிலாடு முன்றிலார்” எழுத்துக்கள் எனும் மயிலிறகினால் மனம் வருடியபோது…. திடீரென்று அந்த எழுத்தாணி அதே சில பல ஆயிரம் ஆண்டுகளை விழுங்கியபின் கோடம்பாக்கத்தில் “கொல வெறியார்” ஆகி பாடல் எழுதினால்…………. சிநேகனுக்குள்ளிருந்து எத்தனை எத்தனை தனுஷ்கள் கருவுயிர்த்தனர்? இதோ கேளுங்கள்…… கீது கீது பேஜாரா கீதும்மே ! கசாப்புக்காரன் […]
ஓரளவு அறிமுகமான எழுத்தாளருக்கு / அரசியல் விமர்சகருக்கு தமிழக இலக்கிய அரசியல் வட்டத்தில் அனுபவமிக்க ஒரு ஃகாட் ஃபாதர்/ஃகாட் மதர் தேவை. பிரபலமான அரசியல்வாதிகளின் அரசியல் அறிவை அவர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் அறிந்துக் கொண்டதால் தன்னுடைய அரசியல் ஞானம் அவர்களை விட எவ்வகையிலும் தரம் குறைந்ததில்லை என்று திடமாக நம்புகிறார். மிகப் பிரபலமானவர்களின் பிரபலமான படைப்புகளை வாசித்த அனுபவங்கள் மூலம் அவர்கள் பிரபலமான சூத்திரத்தை அவரும் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பு , அறிந்தவர்கள் சொன்ன அண்மைக்கால […]
காலெட் ஹொசைனியின் முதல் நாவலான ‘ தி கைட் ரன்னர் ‘ பற்றி எழுத வேண்டும் என்று யோசித்து யோசித்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அட என்ன ஆச்சர்யம்.. நேற்று சோனி பிக்ஸில் போட்டு விட்டார்கள். ஒரு அற்புதமான நாவலை படிக்கும்போது ஏற்படும் வலி பல சமயம் அதை ஒரு திரைப் படமாகப் பார்க்கும்போது கிடைப்பதில்லை. சுஜாதாவின் ப்ரியாவிற்கு அப்படித்தான் ஆயிற்று. ஹீரோயிஸம் என்று போய் சொதப்பி விட்டார்கள். கைட் ரன்னரும் அந்த லட்சணத்தில்தான் இருக்கும் […]
அத்தை வீட்டுக்கு வந்திருந்தான் ஒரு சாமியாடி. அந்த சாமியாடிக்கிட்ட தங்களோட கஷ்ட்டங்களச் சொல்லி விடிவு காண வந்திருந்த கூட்டத்துல எப்படியும் ஒரு நூறு பேராவது இருந்திருப்பாங்க. சரி. இந்த சாமியாடிய கூட்டிட்டு வந்தது யாரு தெரியுமா? அவருதான் அத்தையோட மாமனாரு குட்டிக் கவுண்டரு. சாமி சொல்லரதெல்லாம் நெசமா இருக்குதாம். காணாம போன பொருட்கள கண்டுபிடிச்சுத் தருதாம் சாமி. தீராத வியாதிகளையெல்லாம் தீர வைக்குதாம். கேட்டவங்களுக்கு கேட்ட வரமெல்லாம் தருதாம். புள்ள வரம், பொண்டாட்டி வரம், புருஷன் வரம், […]