மா.பாலசுப்பிரமணியன் திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான அம்ஷன் குமாரின் `சினிமா ரசனை` நூலின் விரிவுபடுத்தப்பட்ட இரண்டாம் பதிப்பின் வெளியீட்டு விழா சென்னையில் 29-12-2012 அன்று புக் பாயிண்ட் புத்தக விற்பனை நிலையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மூத்த திரைப்பட இயக்குனர் பாலு மகேந்திரா தலைமை தாங்கினார். விழாவிற்கு வந்தவர்களை படப்பெட்டி இதழின் ஆசிரியர் குழு சார்பாக மா.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். நூலை இயக்குனர்கள் மகேந்திராவும் வசந்தும் இணைந்து வெளியிட முதல் பிரதிகளை இயக்குனர் பாலாஜி சக்திவேல் , கலை இலக்கிய விமர்சகர் […]
வணக்கம் தமிழ் ஆவண மாநாடு தொடர்பான இந்த மடலினை உங்கள் நண்பர் வட்டத்துக்கு அனுப்பி அனைவருக்கும் அறியத்தரக் கேட்டுக் கொள்கிறோம். இந்த மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 1, 2013 ஆகும். அவ்வாறு சமர்ப்பிக்க விரும்புவோர் ஜனவரி 15, 2013 க்கு முன்பதாக சுருக்கமான முன்வரைவை 400 சொற்களுக்கு மேற்படாதவாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலதிக விபரங்களுக்கு: http://noolahamfoundation.org/wiki/index.php?title=Tamil_Documentation_Conference நன்றி தமிழ் ஆவண மாநாடு 2013 இலங்கையின் தமிழ்பேசும் சமூகங்களின் மரபறிவுச்செல்வங்களை ஆவணப்படுத்தல் […]
அரு.நலவேந்தன் – மலேசியா நான் 1 நீண்ட மனத்தேடலுக்குப் பின் இமைகளை அசைத்தேன்.இருண்ட தேசத்தில் புலம்படாத பிம்பங்கள் தோன்றி மறைந்தன.கண்களை மெல்ல திறந்தேன்.வெள்ளை பிரகாசம் கன்னத்தை அறைந்து,கருவிழி ஆங்காங்கே சிதறியது.இடத்தை புரிந்து கொள்ளவில்லை அசுரத்தனமான வலி முகப்பகுதியிலிருந்து வருவாதாகப் பிரக்ஞை உறுத்தியது.கைகளை இருக்கிக்கொண்டேன்.கால்களை மேல் நோக்கி இழுத்தேன். வாய் திறந்து கத்தமுடியவில்லை. கண்களை இருக்கி மூடிக்கொண்டேன்.மூக்கினால் முக்கினேன்.பக்கத்தில் ஓர் உருவம் தோன்றி பிரசங்கித்தது.வெள்ளைச் சீருடை. ஊசியால் குத்துகிற வலி. விழிகளின் வாசல் மூடின. […]
ஷான் பறித்துப் போன பாவி மனங்களை கடை மூடிக் கணக்கிடும் குறும்பாடும் கண்கள் மறுநாள் புன்னகைகள் பதியனிட்டுக் கொண்டு சிரிப்பாடும் சிறு குமிழ் இதழ்கள் தொடுகை முடிந்து மூடிக் கிடக்கும் நகம் பூத்த விரல் தாமரைகள் தாவிக் குதித்து ஓடிக் களித்து ஓரிடம் நின்ற களைப்பில்லாக் கால்கள் ஏறி இறங்கும் சுவாச அசைவில் உலகம் தாலாட்டும் இலை வயிறு இதழின் ஓர் கோடியில் எப்போதாவது பூக்கும் இளக்காரப் புன்னகை புரியாத புதிராய் அம்மு தூங்கவில்லை அவள் புரிவது […]
(கட்டுரை: 91) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பூமியின் துருவங்கள் இரண்டும் திசை மாறும் அரை மில்லியன் ஆண்டுக் கொரு முறை கிரீன் லாந்து கனடா வழியே ஒரு யுகத்தில் செல்லும் தடம் புரண்ட பூமத்திய ரேகை ! வடதிசை செங்குத்தாய் திரும்பி கிழக்குத் திசையானது ! துருவங்கள் மாறிச் சுழற்சி நின்று எதிர்த் திசையில் ஓடும் ! மின்னியல் இயக்கம் பூமியில் தன்னியல் மாறும் ! சூழ்வெளி வாயுக் […]
தலைவர்.வே.ம.அருச்சுணன் இந்த ஆண்டு தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் சரிவை கண்டுள்ளதைக் கண்டு தமிழ்மொழி வளர்ச்சி மீது அக்கறையும் மொழிமீது உயிரையே வைத்துள்ள உண்மையான தமிழர்களுக்கு அதர்ச்சியும் வேதனையும் தந்துள்ளன. இந்நிலை இனியும் தொடருமானால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளே இந்நாட்டில் இல்லாமல் அழிந்து போய், தமிழ்ப்பள்ளிகள் தேசிய பள்ளிகளாக மாற்றம் கண்டு தமிழ் மாணவர்கள் அனைவரும் மலாய் மொழியிலேயே கல்வி பயில வேண்டிய கட்டாய நிலை […]
. வே.ம.அருச்சுணன் – மலேசியா இரவெல்லாம் காத்துக் கொண்டுடிருந்த காமாட்சி, சோபாவிலேயே கண்ணயர்ந்துவிடுகிறார். கதவுத் திறக்கப்படும் அரவம் கேட்டுக் கண் விழித்துக்கொள்கிறார். “ஏன்பா….அழகு….இப்ப என்னப்பா மணி…?” “வீட்டுக்கு வந்தா ஏம்மா உயிரை வாங்கிறீங்க ?” “காலம் கெட்டுக் கிடக்குதப்பா! நேரத்துல வீட்டுக்கு வரக் கூடாதா? அம்மா தனியாத் தானே இருக்கேன்…?” “என்னைப் போன்ற இளம் பிள்ளைகள்…..சனிக்கிழமையிலே சந்தோசமா நண்பர்களோடு இருக்கிறதுலே என்னம்மா தப்பு…..? ஏம்மா என்னைப் புரிஞ்சிக்க மாட்டுறீங்க….!” அழகன் கோபப்படுகிறான். “உன் நண்பர்களோடப் […]
திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு… ரியாத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் கவிதைப் போட்டி பற்றிய இந்த அறிவிப்பை தங்கள் தளத்தில் வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி ரியாத் தமிழ்ச்சங்கம் – எழுத்துக்கூடம் சார்பில் கல்யாண் நினைவு மாபெரும் கவிதைப் போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் கீழ் கண்ட பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. முதல் பரிசு – 5000 இந்திய ரூபாய்கள் இரண்டாம் பரிசு – 3000 இந்திய ரூபாய்கள் மூன்றாம் பரிசு – 2000 இந்திய ரூபாய்கள் […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்குப் போனதுமே “வா.. போய் தங்கையை வீட்டிற்கு அழைத்து வருவோம். சாப்பிட வரச் சொல்லி நீதான் கூப்பிடநணும்” என்று எப்படிப் பேச வேண்டும் என்பதைச் சொல்லித் தந்து திரும்பத் திரும்ப எச்சரித்தான். இரண்டு வீடுகள் தாண்டியிருந்தது வசந்தியின் வீடு. இரண்டே இரண்டு குறுகிய அறைகள். சாமான்கள் எல்லாம் தாறுமாறாய் சிதறிக் கிடந்தன. சுத்தமே இல்லை. ‘வசதிகள் போதாமல் கஷ்டப்படுவார்கள் என்று அழைத்து வரவில்லை’ […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இனிமைக்குள் மூழ்கி எழுந்து கொண்டு உள்ளுக் குள்ளே எனது மனது உற்று நோக்கி வருகுது, பிச்சைக் காரன் பிறப்புரிமையில் சுற்றிலும் நோக்குவ தில்லை, என் கண்ணோட்டம் ! இதயத்துள் ளிருந்து வெளியே எட்டிப் பார்க்கையில், எழும்பிட ஆரம்பிக்கும் ஒற்றை நாணின் ரீங்கார ஓசை ! அழகுத் திருவடிவின் மடியில் இனிதாய் ஆசைப் பாதையில் வாசிக்கும் தாலாட்டி நாணல் புல்லாங் குழல் […]