மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உனக்குப் பகை நீதான் ! முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 144 ஈரேழு வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஏரேழு வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டன. ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் வாலிபக் காதலருக்கு […]
ப.பார்த்தசாரதி படுபயங்கரமான சாலை விபத்தொன்றில் காலும் கையும் துண்டாய் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பாதி மயங்கிய நிலையில் நசுங்கிய உடல் பிரிந்த கைகளை வேறொருவன் சாக்குப் பையில் போட அனைத்திலும் அவன் பார்வை பட காலன் வரும் ஒலியாய் ஆம்புலென்ஸ் ஒலியெழுப்ப காலத்தாமதமில்லா சிகிச்சையில் உயிர் பிழைத்த ஒருவனின் வாழ்க்கை பாதையை ஏதோ ஒன்று விளிம்பிலிருந்து நெடுந்தூரமாய் நீட்டிக்கிறது தள்ளாடியபடி பயணிக்க.
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட […]
கோவை புதியவன் ஏர் பஸ் வெளிச்சத்தில் இருட்டாகிப் போனது ஏழையின் பயணம் அப்பாவின் புகையில் மூச்சுத் திணறியது பீடி சுற்றும் மகளின் வாழ்க்கை கதாநாயகன் கட்-அவுட்டுக்கு ஊற்றிய பாலில் வழிந்தோடியது ரசிகனின் முட்டாள்தனம் வாசலில் பிச்சைக்காரன் வயிறு நிரம்பியது கோவில் உண்டியலுக்கு சாதிக்க மலையேறியபின் சறுக்கி விழுந்தது பயம் மட்டுமே. thendral_venkatguru@yahoo.co.in
மார்கழி பனி நீ வெளியே வரும்வரை உன் வீட்டு வாசலில் காத்திருந்து உன்னை தொட்டு குளிர் காய்ந்து கொள்ளும் வெட்டைஇல்லாமல் வாசல் தெளித்தை கண்டு மார்கழி பனி வெட்கி தலை கவிழும் நீ உன்வீட்டு வாசலில் போடும் மாக்கோலத்தை கண்டு கதிரவன் கிழக்கு வாசலில் போட்ட கோலங்களை கலைத்து விடுவான் நீ உன் வாசலில் இட்ட கோலம் பூமாதேவிக்கு வைக்கப்பட்ட திலகமாகும் நீ வைக்கும் செம்பருத்தி பூவுக்காக சாணி பிள்ளையார் கோலத்தின் நடுவில் அழகாக அமர்ந்து அருள் […]
அவனுக்குத் தியாகையன் என்று பெயர் வைத்ததால் சங்கீதத்தில் ஆர்வம் வந்ததா அல்லது சங்கீதம் அவனுக்கு நன்றாக வரும் என நினைத்து அவன் அப்பா பஞ்சரத்னம் அப்படி ஒரு பெயரை அவனுக்குச் சூட்டினாரா என்று தெரியவில்லை. அவன் அம்மா நாகரத்தினம்மாவிற்குப் பையனின் நாமகரணத்தில் எந்தவித பங்கும் இல்லையென்றாலும், பையன் அழும்போதுகூட கலப்படமே இல்லாத சுத்தமான முஹாரி ராகத்தில்தான் அழுவதாகப் பெருமைப் பட்டுக்கொண்டிருந்தாள். பஞ்சரத்தினமும் சங்கீத ஆர்வலெரெல்லாம் ஒன்றும் இல்லை. அவரின் தாத்தா திருவையாறில் குடியிருந்தபோது இவர் பிறந்ததால் முதல் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “அம்மா ! தயவு செய்து என்னை நீங்கள் இன்னும் குழந்தையாக நடத்த வேண்டாம் ! நேற்றிரவு நீங்கள் சொன்னதை நான் கவனமாக எடுத்துக் கொள்ள வில்லை. இப்போது புரிகிறது. பல வருடங்களுக்கு முன் சொல்ல வேண்டியதை இப்போது நீங்கள் சொல்லி என்னை ஆழமாய்க் காயப் படுத்தி விட்டீர். இனி நானும் அப்பாவும் நேராகப் பேசிக் கொள்ள வேண்டும் உங்கள் மூலமாக […]
மண்டப முகப்பில் கும்பிடுகளை உதிர்த்து மணமேடை நிழற்பட பதிவு வரிசையைத் தவிர்த்து பசியாத வயிற்றுக்கு பந்தியில் இடம் பிடித்தேன் சூழலுக்கு பொருந்தா வேடம்பூண்ட இடது பக்கயிருக்கைக் கிழவியின் இலை இளைத்துக்கிடந்தது அவர் தேகம் போலவே வலதுகையால் பிட்டதை பாசாங்காய் வாய் கொறிக்க எவரும் அறியா சூட்சுமத்துடன் இடது கை இழுத்து புதைத்துக்கொண்டிருந்தது மடியில் பசிக்காத வயிற்றுக்கு பாசாங்காய் புசித்துண்ணும் எனக்கு பரிமாறியவர் பாட்டியின் இளைத்துக்கிடந்த இலையையும் இட்டு நிரப்பிப்போனார் முதுமை முடக்கிய கணவனோ புத்திசுவாதீனமில்லா மகனோ தீரா […]
எண்ணற்ற நட்சத்திரக் கோள்களில் தேடி த் தேடி களைத்துபோய் இருக்கையில் எங்கோ ஒரு மூலையின் ஓரமாய் கண்சிமிட்டி அழைக்கிறாய் இறகுகளின் சுமைகளை அப்போது தான் உதிர்த்து பரவலாய் வைத்திருந்தேன் … அவைகளை எடுத்து பிணைத்து கொண்டு இருக்கையில் … சப்தப்படாமல் விடிந்து விடுகின்றது ஒரு காலைப்பொழுது …. இரவிற்கான காத்திருத்தல் தொடங்குகிறது ….. ஷம்மி முத்துவேல்
ஆட்சி மாறி விட்டதே, அதனால் சென்னையின் மையப்பகுதியில், அண்ணா சாலையில், காயிதே மில்லத் கல்லூரி மைதானத்தில், இந்த முறை சந்தை இருக்கும் என்று எதிர் பார்த்தேன். பொய்த்து விட்டது. வழக்கமாக டிசம்பர் கடைசி வாரத்தில் ஆரம்பிப்பார்கள். இம்முறை சனவரி ஐந்து. அதே தமிழ் மைய மைதானம். அப்படித்தான் சொன்னார்கள்.. தமிழ் மையம் காஸ்பர் பரிந்துரைப்படி கடந்த ஆட்சியில் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மைதானம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக.. சென்னை மைலாப்பூரிலிருந்து இங்கு வருவதே கடினம். என் கதை இன்னமும் சோகம். […]