21. கிஷன் தாஸ் பங்களாவின் நடுக்கூடம். சுமதியும் சுந்தரியும் வந்து சேர்ந்தாகிவிட்டது. கிஷன் தாஸ், பிரகாஷ், சுமதி, சுந்தரி, பீமண்ணா ஆகியோர் காப்பி குடித்துக்கொண்டிருக்கிறார்கள். கிஷன் தாஸ், “பிரகாஷ்! நான் சுமதியோடு கொஞ்ச நேரம் தனிமையில் பேச வேண்டிய திருக்கிறது.… ” என்கிறார். குறிப்பறிந்து எழுந்து கொள்ளும் பிரகாஷ், தன்னோடு வருமாறு சுந்தரிக்கும் பீமண்ணாவுக்கும் சைகை செய்த பின், “அப்பா! விமானதளத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது நான் சுமதிக்கு உங்கள் குழந்தைப் பருவத்துக் கதை முழுவதையும் […]
“In spite of language, in spite of intelligence and intuition and sympathy, one can never really communicate anything to anybody. The essential substance of every thought and feeling remains incommunicable, locked up in the impenetrable strong room of the individual soul and body. Our life is a sentence of perpetual solitary confinement.” _ ALDOUS […]
ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாதபடி கெட்டி தட்டிப்போய் மலையாய் நிற்கிறது வெறுப்பு முதுகின் பின்னால் நீ பேசிய எல்லா சொற்களும் முள் கிரீடம் அணிந்த வண்ணம் என் முன் வந்து கோரமாய்ச் சிரிக்கின்றன தீயின் முன் நின்றுகொண்டு உன்னால் இனிப்பு உண்ண முடிகிறது என் திசை வரும் காற்று முழுவதையும் வெப்பமேற்றி அனுப்புகிறாய் தீயைப் பங்கு வைக்கும் முயற்சியில் எனக்கு மட்டும் அதிக அளவு கிடைத்தது எப்படி ? […]
மணிகண்டன் ராஜேந்திரன் சாதி என்ற சொல்லை நாம் படிக்கும்போதும் கேட்கும்போதும் அதை ஒரு சொல்லாக வார்த்தையாக எளிதாக கடந்து விடுகிறோம்..சாதி என்பது ஒட்டுமொத்த சமூகம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம் அல்லது கள்ள மௌனம் காக்கிறோம்.. புரட்சியாளர் அம்பேத்காரின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால் “சாதிதான் சமூகமென்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்” என்றார்..ஏனெனன்றால் இந்தியாவில் “சாதிதான் சமூகம்,சமூகம் தான் சாதி” என்பதை எவராலும் மறுதலித்துவிட முடியாது.. 1997ம் ஆண்டு கடலூர் மாவட்டம் குமாரக்குடி கிராமத்திலிருந்து மூவர் பக்கத்துக்கு ஊருக்கு […]
அன்று இரவும் நண்பர்கள் நாங்கள் மூவரும் சீன உணவகத்தில் கூடினோம். நான் சென்றுவந்தது பற்றி ஆவலுடன் இருவரும் கேட்டனர்.நான் நடந்தவற்றைக் .கூறினேன். அவர்கள் இருவரும் சிங்கப்பூரில்தான் இருந்தனர். ஆனால் அவர்களுக்கே அது தெரியவில்லை. ” அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்ததும் உனக்கு அதிர்ச்சியாக இருந்ததா? ” கோவிந்த் கேட்ட முதல் கேள்வி. அவன் […]
திண்ணை வாசக நண்பர்களே, திண்ணையில் தொடர்ந்து வெளியான எனது காதல் நாற்பது கவிதைகள் நூல் வடிவில் தாரிணி பதிப்பகமாக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சி. ஜெயபாரதன்.
World’s Largest Lithium Ion Battery Banks சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++ சூரிய மின்சக்தி சேமிக்க, நூறு மெகாவாட் பேராற்றல் உடைய ஓரரும் பெரும் மின்கலம் தாரணியில் உருவாகி விட்டது வாணிபப் படைப்புச் சாதனமாய் ! தட்டாம்பூச்சி போல் பறக்க வானூர்திக்குப் பயன்படப் போகுது ! பரிதியின் சக்தியால் பறக்கும் ! எரி வாயு இல்லாமல் பறக்கும் ! பகலிலும் இரவிலும் பறக்கும் ! பசுமைப் புரட்சியில் உதித்தது ! பாதுகாப்பாய் […]
தி. சுதேஸ்வரி முன்னுரை பெண்கள் அன்று முதல் இன்றுவரை ஆணாதிக்கத்தில் சிக்குண்டு துன்புறுத்தப்படுகின்றனர். இதனை ஈழப்பெண் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் ஆணாதிக்கம் மற்றும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை எதிர்த்து போh;க்குரல் கொடுப்பதையும் இதழ்களின் பங்களிப்பு பற்றியும் இக்கட்டுரையில் பின்வறுமாறு காணலாம் ஆதிகாலம் முதல் இன்றைய காலம் வரை மதம், சாதி, இன கலாச்சார பண்பாடுகள் அனைத்துமே பெண்களுக்கு எதிரான நிலையைத் தோற்றுவிக்கின்றன. உடல், உளம், உணர்வு நிலை, மொழி வயப்பட்ட அதன் கருத்தியல், இருப்பு […]
மீனாட்சிசுந்தரமூர்த்தி மூன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்து அகமென்றும், புறமென்றும் பகுத்து வாழ்க்கை என்னும் உரைகல்லில் தரம் பார்த்து வாழ்ந்தவர் தமிழர். முன்னர் இவர் கண்டது குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை,கைக்கிளை, பெருந்திணை எனஅகத்திற்குஏழுதிணையும்,வெட்சி,வஞ்சி உழிஞை,தும்பை,(நிலம் உள்ள முதல் நான்கனுக்கு) வாகை(பாலைக்கு, நிலமற்றது,மழையின்றி வறட்சியால் குறிஞ்சியும் முல்லையுமே பாலையாகும்) பாடாண்(கைக்கிளை என்னும் ஒருதலைக் காமத்திற்கு) காஞ்சி(பெருந்திணை என்னும் பொருந்தாக் காமத்திற்கு) எனப் புறத்திற்கு ஏழு திணையுமாகும் என்பார் தொல்காப்பியர். இனக்குழுக்கள் முடியாட்சியாக உலகெங்கும் மலர்ச்சி பெற்றிருந்த காலமது.மக்கள்தம் வாழ்வும் காதல்(அகம்) வீரம்(புறம்)எனக் […]
காலச்சுவடு வெளியீட்டில், தமிழ் வாசகர்வெளியில் பரவலாக அறியப்பட்ட பேராசிரியர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகரின் மொழிபெயர்ப்பில் வந்துள இரு குறுநாவல்களின் தொகுப்பு சூறாவளி. மொழிபெயர்ப்பாளர் மட்டுமல்ல நூலின் மூல ஆசிரியர் லெ கிளேஸியோவும் தமிழுக்குப் புதியவரல்ல. பிரெஞ்சுமொழியின் முதன்மை எழுத்தாளர், நோபெல் பரிசினை அண்மைக்காலத்தில் வென்றவர் என்பதால் உலகின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரென்ற அடையாளத்தையும் பெற்றிருக்கிறார். இச்சூழலில், இலக்கிய உலகின் எதிர்பார்ப்பென்ன ? தம்முடைய வாசகர்கள் யார் ? போன்ற கேள்விகளுக்கும் முன்னுரிமைக் கொடுக்கவேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு. லெ […]