மருதாணிப்பூக்கள் – சு.மு.அகமது மருதாணிப்பொடியை பொட்டலத்திலிருந்து கிண்ணத்தில் கொட்டி சிறிது தண்ணீர் விட்டு குழைய குழைய கலந்து அரை எலுமிச்சம்பழ சாற்றையும் யூகலிப்டஸ் தைலத்தில் பத்து சொட்டுக்களும் தேயிலைத்தூள் ஒரு தேக்கரண்டியும் குழைத்திருந்த மருதாணிக்குழம்பில் போட்டு வலது கையின் விரல் நுனிகளாலேயே நன்றாக பிசைந்துவிட்டு கையை கழுவிக்கொண்டு வந்த ஜஹானுக்கு விரல் நுனிகளில் மருதாணியின் நிறம் தொற்றிக்கொண்டதில் சற்று வருத்தம் தான்.அழகான ஒரு டிசைன் போட முடியாதபடி வண்ணம் அப்பிக்கொண்டிருந்தது.மருதாணி கலப்பவர்களுக்கு சற்று […]
மீனாள் தேவராஜன் நான் ஒரு பேரிளமங்கை. எனக்குள் ஏற்பட்ட பாதிப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். எனது ஊர் சிங்கப்பூர்.. பேருந்தில் பயணிக்கும் என்னைச் சுற்றி நடப்பவற்றைக் கவனிப்பேன். அப்படித்தான் ஒரு நாள் நான் பேருந்தில் ஏறிவிட்டேன். காலை நேரம். கூட்டம் நிரம்பி வழிந்தது. பரவாயில்லை. அடுத்த பேருந்துக்குக் காத்திருந்தால் நேரம் ஆகிவிடும். வேலைக்குத் தாமதமாகிவிடும் என்று நினைத்தேன். பலருக்கு அமர்வதற்கு இடமில்லை. ஆனால் ஒரு நவ நாகரீகப் பெண் தன் இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் தன்னுடைய கைப்பை […]
என்.செல்வராஜ் நான் 1999 ல் நாவல் படிக்க வேண்டும் என்று எண்ணிய போது எதைப் படிப்பது என்றே தெரியவில்லை.2000 குமுதம் தீபாவளி மலரில் டாப் டென் நாவல் தலைப்பில் சிறந்த எழுத்தாளர்கள் சிலரிடம் கேட்டுவெளியிட்டு இருந்தார்கள். அனைத்து எழுத்தாளர்களின் பார்வை வேறு வேறாக இருந்தன. எனவே நல்லநாவல்எதுஎனதேடினேன்.ஆனந்தவிகடன்படித்ததில்டாப் டென்என்றதலைப்பில் 2006 ல்பலஎழுத்தாளர்களின்கருத்துக்களைவெளியிட்டுள்ளது. குமுதம் டாப் 10 ல் சி. மோகன், வெங்கட் சாமினாதன், ராஜமார்த்தாண்டன், சா.கந்தசாமி, கந்தர்வன் ஆகியோர் தங்களின் கருத்தை வெளியிட்டனர். […]
கீதா சங்கர் Lagos Nigeria அம்மாவிற்கு பிடித்த அலங்காரம் அப்பாவிற்கு பிடித்த அடையாளம் பொருளாதாரத்திற்கு ஏற்ற படிப்பு…வேட்டை நாயாய் வெறி கொண்டும் கடிக்கும் வந்த அரணை வந்த வேலை மறப்பதாய வாழ் நினைத்த வாழ்க்கை பேச நினைத்த வார்த்தை ரசிக்க நினைத்த கலைகளின் காற்றில்அடித்துப் போனதே உண்மை் வாழ்க்கை என்பது வெறும் மாயை.. விரித்த படுக்கை என்னை உரசிப் போன தனிமை எல்லாம் மறக்க மீண்டும் எனை மறந்தேனே நானும். தீப்பெட்டியாய் தினம்தினம் உரசி உரசி பிரிவோம் […]
வாழ்க்கையின் தேடல்களும் மனம் போகிற போக்கும் அலாதியானது. காரணமற்ற மன அழுத்தம் எங்கிருந்து வருகிறது என்பதும், எதற்காக வருகிறதென்பதும் புரியாத புதிர்கள். அப்படியான ஒரு நாள் பொழுதில், அலுவலகம் நோக்கிய எனதான பயணத்தில், காலை புலர்ந்து பனி வாடாத மலர்போல் இருந்தது. எங்கோ ஓர் காகம் கரைய, காகக் கூட்டத்திலாவது பிறந்திருக்கலாமோ என்றெண்ணிக் கொண்டேன். இறக்கைகளைச் சட்டென்று விரித்து நினைத்த இடத்திற்கு சென்றுவிடலாம் என்றெண்ணியபடி கடந்த போது தான் பொத்தென்று ஒரு […]
மு.ரமேஷ் பறவை ஒன்றை கைவிட்ட துயரத்தில் புகையின் காதை திரிகி இழுத்து கொண்டு வானிலேறும் காற்று ஊரை எரித்தவனின் முகத்துக்கு முன்னால் தனது மயிற் கற்றையிலிருந்து ஒன்றை உதிற்த்துவிட்டு கீழிரங்கும் சிறகு எனது நிழலும் நீக்கப்பட்ட வண்ணமும் வனப்பும் இழந்த பழுப்பேறிய கவிதையை ப் பரிசலித்தது நீ என்பதை யாரிடம் சொல்ல எல்லாம் நீங்களாக இருக்கிறபோது ஆமாம் இப்போதும் பார்த்துகொண்டேயிருக்கிறேன் அந்தத் தொலைகாட்சி விளம்பரத்தை அடர்நிறம் கொண்ட அது குறித்து வெளுத்துக்கட்டுகிறாய் என் உயிரினும் […]
“ ஸ்ரீ: “ மழைக்கால நாளொன்றின் இரவு நேரம் – கண்ணாடி ஜன்னலின் வெளியே அவ்வப்போது தீக்குச்சி கிழிக்கும் மின்னல் வெட்டு ; பணி முடித்துச் செல்லும் வேலையாட்களின் சன்னமான பேச்சொலியாய் இடியோசை ஒன்றிரண்டு ; நின்றுவிட்ட பெருமழையின் நினைவேந்தல் நிகழ்ச்சியென சன்னமாய்த் தொடரும் தூறல் ; வெண்டிலேட்டர் இடைவெளியில் சில்வண்டுகள் ஒலிபரப்பும் புல்லாங்குழல் ; வயதான வித்வானின் குரலைப் பிரதியெடுக்கும் தவளைகளின் இசை ஒத்திகை ; வந்துபோகும் மின்சாரம் வழக்கம் போலவே ; […]
மலாய்-தமிழ் கவிஞர்கள் சந்திப்பு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா அரங்கில் ஜூன் 10, 11 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்வு -லதா ராமகிருஷ்ணன் சொல்லவேண்டிய சில….. வாழ்க்கைக்குக் கவிதை தேவையா? வாழ்க்கைக்குக் கவிதையால் என்ன பயன்? வாழ்க்கைக்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு? கவிதையைப் படிப்ப தால் என்ன கிடைக்கிறது? கவிதை எழுதுவதால் என்ன கிடைக்கிறது _ இவற்றிற்கும் இவையொத்த பிறவேறு கேள்விகளுக்கும் நம்மிடம் உள்ள ஒரே பதில் […]
நாடகம் வெற்றிகரமாக நடந்தேறிய மகிழ்ச்சியில் ஒரு நாள் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்து பங்குபெற்ற அனைவரும் கூடினோம். அப்போது சிங்கப்பூர் ஆசிரியர் கழகம் நான்கு மொழி நாடகப் போட்டிக்கு ஏற்பாடு செய்தது.அதன் விளம்பரம் தமிழ் முரசில் வெளிவந்திருந்தது. அந்தப் போட்டியில் நாங்கள் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்தேன். அது கேட்டு அனைவரும் உற்சாகமானார்கள். நாடகத்தின் கதை […]
இன்று கார்கில் வெற்றி தினம். இந்த நாளை கொன்டாடுகையில் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்து தம் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம் யோகேந்திர சிங் யாதவ், பரம்வீர் சக்ரா விருது கிரெனெட் வீரர் யோகேந்திர யாதவ் டைகர் ஹில்ஸ் எனும் மலைபகுதியை கைப்பற்ற சென்ற காடக் ப்ளாடூனில் ஜூலை 3- 4, 1999 ஆண்டு பங்கு பெற்றார். மலைபகுதி மிகவும் சரிவாகவும், பனிபடர்ந்ததாகவும் இருந்தது. அத்தகைய பாதையில் தன் படையினருக்காக கயிறுகளை கட்டும் பணியை […]