‘இராவணாதி கும்ப கருணர்களைவ தம்செய்யவளைமதில்அயோத்தியில் தயரதன் மதலையாய்த் தாரணி வருகுதும்’என்று தேவர்களுக்கு வரமளித்த வண்ணம் திருமால் ஸ்ரீஇராமபிரானாக அவதரித்தார். விஸ்வாமித்திரருடன் கானகம்சென்று தாடகைவதம் செய்து தவமுனியின் வேள்விகாத்து அகலிகைக்கு சாபவிமோசனம் கொடுத்து, மிதிலை சென்று வில்முறித்து ஜானகியை மணம் புரிந்தார். அயோத்தி வந்தபின் தயரதன் தன்மகன் இராமபிரானுக்கு முடிசூட்ட எண்ணி பட்டாபிஷேகத்திற்கு நாள் குறித்தார். ஆனால்மந்தரையின் போதனையால் மனம் மாறிய கைகேயியின் வரங்கள் மூலம் இராமன் வனம் ஏகினார். தண்டகாராணியம் வந்த தசமுக இராவணன் சீதாபிராட்டியைச் சிறை […]
(1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Salute Au Monde !) [Salute to World] வையகமே வந்தனம் உனக்கு ! மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வால்ட் விட்மன் ! நீ வரவேற் பாய் என் கரம் குலுக்கி ! எத்தகை விந்தைகள் சருக்கிடும் ! எத்தகை இனிய காட்சிகள் ! எழுந்திடும் ஒலி நயங்கள் ! அடுத்தடுத்து தொடுக்கப் […]
அலுவலகத்தில் கொஞ்சம் வேலை பாக்கி யிருந்தது. காலையில் வந்துகூட முடித்துக் கொள்ளலாம், என்றாலும் என்னவோ ஒரு யோசனை. முடிச்சி ஒழிச்சிட்டுத்தான் போகலாமே. என்றிருந்தது சிதம்பரத்துக்கு. தொட்டுத் தொட்டு வேலை அவனை இழுத்துக்கொண்டது. அடிக்கடி கைக் கடிகாரத்தில் மணி பார்த்துக் கொண்டான். நேரம் போகிற மாதிரியே இல்லை. ஆச்சர்யம். அத்தனை சுறுசுறுப்பாக, ஆவேசமாக வேலை செய்கிறோமா என்ன?… ஒரு கட்டத்தில் அலுத்துப் போய் பேனாவைப் போட்டுவிட்டு எழுந்து சோம்பல் முறித்தான். தலை நிமிர்ந்து பார்க்கவே தூக்கிவாரிப் […]
ஜெயந்தி சங்கர் எழுதிய ‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ என்கிற முழுத் தொகுப்பு நூலுக்கு சிறந்த சிறுகதை நூலுக்கான ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது 2013’ வழங்கப்பட்டுள்ளது. மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’ வழங்கி வருகிறது. 2013ஆம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நாவலாக திரு நிஜந்தன் எழுதிய ‘என் பெயர்’ நாவல், திரு ஏக்நாத் எழுதிய ‘கெடை காடு’ நாவல், […]
நகைச்சுவை வரலாற்றில், உடல் மொழி, வசனம், சம்பவம் என பல கூறுகள் உண்டு. அதின் எல்லாக் கூறுகளையும் அலசி, ஒரு நாடகமாக வந்திருக்கிறது சிருஷ்டி நாடகக் குழுவின் புதிய நாடகம் “ தெனாலி ராகவன்” மூத்த மேடைக் கலைஞர் கரூர் ரங்கராஜனைத் தவிர மேடையில் எல்லோருமே புதுமுகங்கள். நாடக இயக்குனர் பரவலாக அறியப்பட்ட கிரேசி மோகன் குழுவினரின் ‘அப்பா’ ரமேஷ். கதை வசனம் எழுதிய சிருஷ்டி பாஸ்கர் மற்றும் நிர்வாகத்தை கவனிக்கும் பிரியா வாசுதேவனின் தலைமையில் […]
ஏழையின்ஏற்றத்தைக், கல்விக்கண்கொண்டுபார்த்திருக்கும்படம். சம்பவவறட்சியாலும், அதிகநீளத்தாலும், துவண்டுபோய்விட்டது. சரண்யாவும்இளவரசும்வித்தியாசநடிப்பால், ஏதோகொஞ்சம்காப்பாற்றுகிறார்கள். படத்திற்கும்பழத்திற்கும்சம்பந்தமேயில்லை. மூளையக்கசக்கி, ஏதேனும்இருக்கிறதாஎன்றுஆராய்ந்தால், ஒப்பனைகலைந்தகதைநாயகன்செந்திலின்முகம்ஞாபகம்வருகிறது. மஞ்சள்பழத்தில்பச்சைகீற்றுகள்போல, சிலகோணங்களில்செந்திலின்முகம், சிவப்பில்கரியகோடுகளுடன்காட்சியளிக்கிறது. நாயகிஇஷாரா, குறைந்தபட்ஜெட்படங்களுக்குகிடைக்கும்நடிகை! அவரிடம்அதிகம்எதிர்பார்க்கமுடியாது. கொடுத்தவேலையைகெடுக்காமல்செய்ததற்குஅவருக்குபாராட்டுக்கள். காமெடிக்காகசேர்க்கப்பட்டஜெகன், இதுஒருதிரைப்படம்என்றுஉணரவேயில்லை. காட்சியில்அவர்முகம்இல்லாதபோதும், பேசிக்கொண்டேயிருக்கிறார். இம்சை! சிங்கம்புலியும், தான்ஜெகனுக்குசளைத்தவரில்லைஎன்று, மேலும்வெறுப்பேற்றுகிறார். சரண்யாபொன்வண்ணனுக்குஇன்னொருஅம்மாவேடம். கொஞ்சம்சுதந்திரமனப்போக்குஉள்ள, காதலைஎதிர்க்காதஅம்மாபாத்திரத்தில், அவர்மிளிர்கிறார். அதேபோல்இளவரசு, செந்திலின்அப்பாவாக, ஒருதள்ளுவண்டிசாப்பாட்டுகடைக்காரரை, கண்முன்கொண்டுவருகிறார். விருதுநகர்வட்டாரமொழியில் “இஞ்சரு” என்றுஅவர்சொல்வதுதனிஅழகு. பலகாட்சிகளில், இளவரசும், சரண்யாவும், தனித்தனியாகஸ்கோர்செய்தாலும், க்ளைமேக்ஸ்காட்சியில், வசனமே பேசாமல், வெட்கிதலைகுனியும்இளவரசு, மௌனப்புரட்சிசெய்திருக்கிறார்! பலே! நாயகியின்அப்பாவாகவரும்நரேன்கச்சிதம். விஜய்எபினேசரின்இசை, மலிவுவிலைஉணவகம். ரகத்திற்குஒன்றாகபோட்டுகடையைபரப்பியிருக்கிறார். “காதல்புட்டுக்கிச்சு” ஒருடாஸ்மாக்குத்துபாடல். […]
எஸ். ஜெயஸ்ரீ இனிமையான இசையை வெளிப்படுத்தும் தந்திக் கருவியில், ஒவ்வொரு கம்பியும் ஒவ்வொரு சுரத்தை வெளிப்படுத்துகிறது. அதன் கலவையின் வெளிப்பாடு அருமையான, இனிமையான இசையாகும். அதுபோல சிறுகதை, நாவல், கட்டுரை, பக்தி இலக்கியம், நவீனகவிதை, மரபுக்கவிதை, சொற்பொழிவு என ஏழுதந்திகளால் இழுத்துக்கட்டப்பட்ட இலக்கிய இசைக்கருவியைத் தன்னகத்தே கொண்டுள்ளவர் வளவ. துரையன். தன்னுடைய பதினெட்டு வயதிலிருந்து இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டுள்ள இவர், தன்னுடைய நாற்பத்தேழாம் வயதிலிருந்து புத்தகங்கள் எழுதி வெளியிடத் தொடங்கி உள்ளார். தற்போது அறுபத்தைந்து வயது […]
1. பிரான்சில் என்ன நடக்கிறது? : கச்சைக் கட்டி நிற்கிறார்கள் ‘மார்புக் கச்சை’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு பிரெஞ்சில் ‘soutien -Gorge’. தமிழைப்போலவே இருசொற்கள் கொண்டு உருவான சொல். Soutien என்பதற்கு support என்றும் Gorge என்பதற்கு bosom என்றும் பொருள். தற்போது இச் சொல்லைப் பன்மையில் எப்படி எழுதலாம் என்பதில் பிரெஞ்சு அகராதிகளுக்குள் பெரும் பிரச்சினை. கச்சை என்ற பொருள் குறித்த வார்த்தையில் இணைந்துள்ள மார்பு என்ற சொல்குறித்து பிரச்சினை உருவாகியுள்ளது. வருடா […]