விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனடா எழுத்தாளர் இணையத்தின் பாராட்டு

This entry is part 41 of 51 in the series 3 ஜூலை 2011

(மாலினி) எழுத்தாளர் எஸ்.பொ, எழுத்தாளர் குரு அரவிந்தன், எழுத்தாளர் அகில் ஆகியோருக்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் பாராட்டு விழா ஒன்றை 26-06-2011 ஞாயிற்றுக் கிழமை மாலை 7:00 மணியளவில் ரொறன்ரோ பேர்ச்மவுண்ட வீதியில் உள்ள பார்வையாளர் அரங்கத்தில் நடத்தினர். அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த கனடிய தமிழ் இலக்கியத்தோட்டத்தில் விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை, தமிழகத்தில் இருந்து வெளிவரும் மூத்த சஞ்சிகைகளில் ஒன்றான கலைமகள் சஞ்சிகை நடத்திய சர்வதேச குறுநாவல் போட்டி – 2011ல் விருது […]

மௌனத்தின் முகம்

This entry is part 39 of 51 in the series 3 ஜூலை 2011

எப்போதும் மௌனமாய் இருப்பதே உசிதமென இருந்து விட்டேன். யாரிடமும் பேசுவதில்லை. தவிர்க்க முடியாத தருணங்களில் ஓரிரு வார்த்தைகளை தானமாய் விட்டெறிவேன்.. என் கண்களைக் கூட பேசவிடாது குனிந்து விடுவேன். வெளியே எல்லோரும் நானிருக்குமிடம் அமைதியின் உறைவிடமென உற்சாகமாய் சொல்லிச் சென்றார்கள். நாட்கள் செல்ல செல்ல என் மௌன முகத்தின் அகத்துள் உச்சமாய் கூச்சல்.. சதா சலசலப்பும் உச்சந்தலையை குத்தும் உட்கலவரம். காதுகளற்ற அகத்தின் முகத்துள் கலவரக் காயங்கள். இரக்கமின்றி இன்னும் இறுகி இருக்கிறது வெளியே மௌனம்.

தடாகம்’ கலை- இலக்கிய வட்டத்தின் அகஸ்தியர் விருது.

This entry is part 38 of 51 in the series 3 ஜூலை 2011

இலங்கை ‘தடாகம்’ கலை, இலக்கிய வட்டத்தினால் கலை, இலக்கிய துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் படைப்பாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது அல்ஹிலால் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.எழுத்தாளர் ‘கலைமகள்’ ஹிதாயா ரிஸ்வியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.அப்துல் றஸாக், ஏ.எம். ஜெமீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில் ‘அகஸ்தியர்’ விருதுதினையும், ‘கலைத்தீபம்’ பட்டத்தினையும் பெற்றுக்கொண்ட கவிஞர் யாழ் அஸீம், கவிஞர் மன்னார் அமுதன், ‘தமிழ் தென்றல்’ அலி அக்பர்,கவிஞர் நஜ்முல் […]

நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்….

This entry is part 37 of 51 in the series 3 ஜூலை 2011

திரிபு வார்த்தைகளும் தத்துவார்த்த பிழைகளும் தின்மச் சொற்களும் தந்த ரணங்களை சுமந்து இடர் சூழ்ந்த இவ்வுலகில் பொருள் தேடி அலைகிறேன்…. துயரம் சொல்லொணாத் தவிப்புடன் உடல் நிறைக்க இறுகிப்போன சக்கையாய் மனம்…. நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால் தன்னந்தனியாய் தவிக்கும் அழுகையின் நிறம் மீளாத்துயருடன் பின் தொடரும் நிழலாய் நினைவுதிர்த்து போகின்றது……

மனபிறழ்வு

This entry is part 36 of 51 in the series 3 ஜூலை 2011

அங்குலட்சுமிக்கு குறிஞ்சி நகரில் வீடு, அலுவலகமோ அவனாசி ரோட்டில் தினமும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சிக்னல் சிக்னலாக தாண்டி அலுவலகம் செல்லுவாள். வண்டி ஓட்டுகின்ற போது மனது பாதையில் இருக்கும், சிக்னலில் நிற்கும் போது அது சற்று அடம் பிடிக்கும் அன்றைக்கு அவளுக்கு நல்ல வரன் அமைந்துள்ளதாக அவளின் பெற்றோர்கள் நிரம்ப சந்தோசமாக இருந்தனர். இவள் இடைப்பட்ட பெண், அக்காவுக்கு திருமணமாகி விட்டது. இவளுக்கு கீழே ஒரு தங்கை படித்துக் கொண்டு இருக்கிறாள். நடுத்தர குடும்பத்திற்கே […]

குழந்தைப் பாட்டு

This entry is part 35 of 51 in the series 3 ஜூலை 2011

எழும்பூரிலிருந்து ரயில் புறப்பட்டதும் எதிர் சீட் குழந்தை பாடத் தொடங்கினாள் `இரும்பிலே இருதயம் முளைக்குதோ’ செங்கல்பட்டு நெருங்கும்போது பாட்டு மாறத் தொடங்கியது `அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா’ என்று என் விருப்பமாகக் கேட்டேன் `ஏ பார் ஆப்பிள் ‘ பாடச்சொல்லி. ஒரு நிமிடம் யோசித்து விட்டு `அந்தப் பாட்டு மிஸ் வீட்டு அலமாரிக்குள் இருக்கிறது ‘என்றது குழந்தை குலுங்கி குலுங்கி சிரித்தது ரயில். – நிஷாந்தன்

கறை

This entry is part 34 of 51 in the series 3 ஜூலை 2011

நேற்று உன்னை சந்தித்துவிட்டு வந்த பிறகு வேலை ஓடவில்லை பார்க்கப்படவேண்டிய கோப்புகளெல்லாம் என்னைப் பார்த்துச் சிரித்தன சதா வண்டு ஒன்று மனதைக் குடைந்து கொண்டிருந்தது வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் இடையே எப்படிப் பயணிக்கிறேன் எனக்கே தெரியவில்லை மைதானத்தில் உதைபடும் பந்தாய் ஏன் நானிருக்கிறேன் நேற்று வசந்தத்தைப் பரிசளித்த காதல் தான் இன்று வாழ்க்கையைப் பறித்துக் கொண்டது என்னை நானே வெறுக்கிறேன் எல்லாவற்றையும் மறக்கத்தான் போதையிலே மிதக்கிறேன் பணக்கட்டுகளை வீசி பெண்களை வாய் பிளக்க வைக்கிறேன் புனிதத்தின் மீது காறி […]

மூன்றாமவர்

This entry is part 33 of 51 in the series 3 ஜூலை 2011

புத்தி செய்திகள் படிக்கிறது மனம் அங்கலாயிக்கிறது கேட்டபடி.. எனது வரவேற்பு அறையில். நான் இருவரையும் பார்த்தபடி, தேநீருக்கும் வழியில்லாத விருந்தாளி போல கண்கள் மூடினால் ஓய்கிறார்கள் திறந்தால் மறுபடியும் கூச்சல் ஏதொரு செய்தியுடன் ,விடாமல் !! தெரிந்தவர்களிடம் கேட்டேன்,சொன்னார்கள் – இருவரையும் கவனிக்கும் என்னையும் பார்த்து கொண்டிருப்பவரை கண்டு விட்டால், விருந்தே நடத்தி கொள்ளலாமென. வாயிற் கதவு திறந்துதானிருக்கிறது எப்போதெனும் வரகூடும் மூன்றாமவர். – சித்ரா (k_chithra@yahoo.com)

ஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்

This entry is part 32 of 51 in the series 3 ஜூலை 2011

மேசைமீது ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களில் ஊர்ந்தேறிக் கொண்டிருந்தது வெயில் நுகருமொரு சொற்ப மரநிழல்.. நிழல் துப்பிய குளிருணர்வில் புத்தகங்கள் ஒன்றொன்றும் காந்தப்பிணைப்புடன் இறுக்கமடைய, கிழிசல்கள் வழி எழுத்துக்கள் சில வெப்பமொழியில் ஏதேதோ பிதற்றத் துவங்கின.. என் விரல் நீவிய புத்தகமொன்று தான் தானாகவும் தானே மீதமாகவும் இருக்க, அட்டைப்படத்தில் நிறைந்திருந்தனர் சிறுமிகள் சிலர்… அழுக்குச் சீருடையுடனும் நாணயச் சிரிப்புடனும்.. – தேனு [thenuthen@gmail.com]

பறவைகளை வரைந்து பார்த்த ஒரு கார்ட்டூன் சித்திரக்காரன்

This entry is part 31 of 51 in the series 3 ஜூலை 2011

நீந்திச் செல்லும் பறவையொன்று அகால வெளியின் எல்லைகளினூடே சிறிதும் களைப்பற்று காற்று எழுதிச் செல்லும் வரிகளைக் கேட்டு மிதந்து திரும்பவும் சிறகாகும் இதயம். விரல்கள் எழுதிய ஓவியம் திரைமீறும் எதிரில்வந்து பேசியது ஓவியப் பறவை நிஜம் எதுவென அறியாத கணங்களில் குழம்பித்தவித்த மனசு ஆதிக்குழந்தையானது. நிலாமூட்டில் தோன்றி வழிதவறிய ஒற்றை நட்சத்திரம் விவாதம் தொடர்ந்தது. வெகுநேரம் ஆகியும் இரவு விடியாதது பற்றி இருளுக்குள் நீந்திச் சென்றது பறவை இரவும் இருளும் நிரந்தரமாக விவாதம் தொடர்கிறது. நேற்றின் மடி […]