தாழ்த்தப்பட்ட இந்துக்கள் ஏன் மதம் மாறுகிறார்கள் என்பதை மட்டுமல்லாது, ஆசைகாட்டியோ கட்டாயப்படுத்தியோ பிறரை மதமாற்றம் செய்யும் பிறமதத்தினர் மீதுள்ள தவற்றைச் சுட்டிக்காட்டியும் “குற்றவாளிகள் யார்?” எனும் தலைப்பில், எனது கட்டுரை யொன்று “திண்ணை”யில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது. அக்கட்டுரையில், மதமாற்றம் என்பது – தானாக விரும்பியே ஒருவர் பிற மதத்துக்கு மாறினாலும் – தேவையே அற்ற ஒன்று என்பதை விளக்கி ‘மகா பெரியவர்’ என்று கொண்டாடப்பட்ட அமரர் காஞ்சி சங்கராசாரியர் அருள்மிகு சந்திரசேகர சரஸ்வதி […]
(1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா கூட்டத்தின் மத்தியில் எழுந்ததோர் விளிப்புக் குரல் ! என் கூக்குரல் தான் அது; ஆரவார மாய் முடிவாக எழும் அலைபோல் மீறி அடித்துக் கொண்டு ! வாரீர் என் குழந்தைகளே ! வாரீர் என் புதல்வரே ! என் புதல்வியரே ! எனது பெண்டீர்களே ! என் இல்லத் தோரே ! என் அந்தரங்கத் தோழரே ! […]
டாக்டர் ஜி.ஜான்சன் புருநோவுக்கு வயது பத்து . எங்கள் வீட்டில் பிறந்தது. அதன் தாய் ஸ்நோவி..சமீபத்தில்தான் காணாமல் போனது.இரண்டுமே ஒரு அடிக்குக் குறைவான உயரம் உடையவை. ஸ்பிட்ஸ் ( spitz ) ரகத்தைச் சேர்ந்தவை.வெண் பனி நிறத்தில் தாயும் , சாம்பல் நிறத்தில் மகனும் விளையாடுவதும், சண்டைப் போடுவதும் எங்களுக்கு நல்ல பொழுது போக்காகும். பால் மறந்த புருநோவுக்கு அதன் தாயும் மறந்துபோனது.இது பற்றி நான் தீர பல நாட்கள் யோசித்து முடிவு தெரியாமல் […]
மூன்று அங்க நாடகம் ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1. [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி. பிரிட்டீஷ் […]
அண்டத் தொகுதியின் எந்த ஒரு கோளின் கோடியிலிருந்தோ ஓர் அதீத ஜீவி கண்ணிமைக்கும் மின்னல் இயக்கத்தில் கட்டமைத்த விண்கலத்தில் உ(ரு)ண்டை பூமியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும். எத்தனை சூரியரோ? சூரிய வெளிச்சக் கீற்றுகளின் சூக்குமப் படிக்கட்டுகளில் சும்மா மாறி மாறித்தாவி சீறி சீறிப் பாய்வது போல் பயணிக்கும். கால முள் பின்னகர இந்த ஸ்திதியிலிருந்து இன்னொரு ஸ்திதியில் மாறி இனிப் பயணம் தொடரும். பூமி சேருமுன் எந்த ஸ்திதியில் எப்படிச் சேரும் என்பதைக் […]
வைத்த கண் வாங்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சித்ராவிடம் “ஏன்மா….அப்படிப் பார்க்கறே?” அந்தப் பார்வையில் பல அர்த்தங்களை புரிந்து கொண்ட கௌரி நிதானமாகக் கேட்கிறாள். நீ ஏதோ சொல்ல வந்து வார்த்தையை முழுங்கின மாதிரி இருந்தது….அதான். அது….அது…அது வந்து, வேற ஒண்ணுமில்லை…இப்பத்தான் நேக்கு பொருளோட அருமையே புரிஞ்சுது. அப்பப்பா….முதல் தடவையா டெல்லில எல்லாத்தையும் தொலைச்சுட்டு நின்னதும்…நான் பட்ட பாடு…எப்படியாவது கிடைச்சுடாதான்னு தவிச்சுப் போயிட்டேன்மா. தேடி…தேடி..தேடி…தேடி…நான் தோத்தேன். கண்டிப்பா என் அஜாக்கிரதைக்கு கிடைச்ச அடியாக்கும் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ********************** http://www.youtube.com/watch?feature=player_embedded&v=c9qKIVlhXpQ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=sF_Gbs1yj6w http://www.youtube.com/watch?feature=player_embedded&v=CMwdhEKoBdw 2012 செப்டம்பர் முதல் தேதி வான் ஆலன் கதிர்வீச்சு வளையங்களை [Van Allen Radiation Belts] ஆராய நாசா ஏவிய இரட்டை விண்ணுளவிகள் [Van Allen Probes] ஏற்கனவே அறிந்த சக்தி மிக்க மின்கொடைத் துகள்கள் [High Energy Charged Particles] நிரம்பிய இரண்டு உள், வெளி வளையங்களைப் [Inner & […]
தேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும் யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும் விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு. கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள். பன்னிரெண்டு நாடுகளிலிருந்து எழுதப்பட்ட எழுபத்தைந்துக்கும் அதிகமான பனுவல்கள். இலக்கியச் சந்திப்பின் மரபுவழி கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கான களம். நிலாந்தன் சோலைக்கிளி யோ. கர்ணன் அ.முத்துலிங்கம் தமிழ்க்கவி மு. நித்தியானந்தன் சண்முகம் சிவலிங்கம் ந.இரவீந்திரன் ஸர்மிளா ஸெய்யித் தேவகாந்தன் பொ.கருணாகரமூர்த்தி ஏ.பி.எம். இத்ரீஸ் […]
தமிழ்த்துறைத்தலைவர், அரசு கலைக்கல்லூரி, முதுகுளத்தூர் கவிதை எழுதுபவர் கவிஞர். கட்டுரை எழுதுபவர் கட்டுரையாளர். கட்டுரையைக் கவிதையாக எழுதுபவருக்கு என்ன பெயர் தருவது? கவிதைகளைத் திறனாய்வாளர்கள் திறனாய்ந்தால் அதன் வாயிலாகக் கவிநுட்பம் வெளிப்படும். சான்றோர் கவிதைகளைக் கவிஞர் ஆராய்ந்தால் என்ன வெளிப்படும்? கவிதைகளில் சொற்கள் இருக்கும். பொருள், அணி, யாப்பு இருக்கும். இவற்றைத் தாண்டி, கவிதைகளில் தத்துவம், யோகம், மறைபொருள் விளக்கம் போன்ற பல அறியப்படாதன புதைந்திருக்கலாம். இவற்றை எல்லாம் வெளிப்படுத்தி நிற்கும் எழுத்திற்கு […]
ஒரு மலைப் பள்ளத்தாக்கில் பெரிய மான் கூட்டம் வாழ்ந்து வந்தது. அந்த மான்களில் தலைவனான ஒரு மான் அவர்களை ஒற்றுமையாக வைத்து பயங்கர விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளக் கற்றுத் தந்து மான் இனத்தைப் பேணித் தலைமை வகித்து நடத்தியது. நன்கு வளர்ந்து நீண்டும் உயரமாகவும் இருந்த அந்தத் தலைவன் மான் மற்ற மான்களுக்கு வலிமையின் சின்னமாக இருந்தது. பக்கத்து மலையிலிருந்து ஒரு சிங்கக் கூட்டம் இந்த மான்களிருந்த மலையை நோக்கி வந்து கொண்டிருப்பதைத் தலைவன் ஒரு நாள் […]