1938 டிசம்பர் 18 வெகுதான்ய மார்கழி 3 ஞாயிற்றுக்கிழமை நீலகண்டன் கண் முழித்தபோதே அசதியாக இருந்தது. எழுந்து குளித்து சாப்பிட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓட வேண்டும். கொஞ்ச நேரம் அங்கே இருந்து டாக்டர் வார்டு வார்டாக வரும்போது அவரை எதிர்கொள்ள வேண்டும். நாயுடுவின் படுக்கைக்குப் பக்கத்தில் இருந்தாலே அது சாத்தியம். வெள்ளைக்கார டாக்டர் என்பதால் அவர் கேட்பதற்கு எல்லாம் இங்கிலீஷில் பதில் சொல்லி, அவரிடமிருந்து நாயுடு தேக நிலை பற்றி புதுசாகத் தகவலும், மருந்து மாத்திரை சம்பந்தமான விஷயங்களும் […]
(எஸ் சுவாமிநாதன்) அர்த்தம் என்பதை எப்படி அர்த்தப் படுத்திக் கொள்வது என்பது மொழியியலும், சமூக வரலாறும், அன்றாட வழக்காடலும் இணைந்து நிற்கும் ஒரு களத்தில் எழுகிற கேள்வி. இதற்கான பதில் சுலபமானதோ எளிய ஸூத்திரங்களுக்குள் அடங்குவதோ அல்லது இதற்கு இது தான் அர்த்தம் என்று சட்டாம்பிள்ளைத்தனம் செய்வதிலோ இல்லை. அர்த்தத்தின் பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்வது எனபது ஒரு சமூகததின் பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்வதும் ஆகும். ஆங்கிலத்தில் புகழ் பெற்ற விமர்சகர்கள் ஐ ஏ ரிச்சர்ட்சும் […]
ஜோனா லெஹ்ரர் ஒரு சின்ன கணக்கு.. ஒரு கிரிக்கெட் மட்டையும் பந்தும் ஒரு ரூபாய், பத்து பைசாக்கள் என்று வைத்துகொள்வோம். கிரிக்கெட் மட்டை பந்தை விட ஒரு ரூபாய் விலை அதிகம் என்றால், பந்தின் விலை என்ன? பெரும்பாலான மக்கள் உடனே மிக தைரியமாக பந்தின் விலை 10 பைசாக்கள் என்று சொல்வார்கள். பதில் தவறு. (சரியான பதில் பந்தின் விலை 5 பைசா. மட்டையின் விலை ஒருரூபாய் ஐந்து பைசா) கடந்த […]
இன்று நாம் பல புரட்சிகளைக் கண்டுள்ளோம். விவசாயப் புரட்சி, விஞ்ஞான புரட்சி, தொழிற் புரட்சி, கடைசியில், கைக்குள் உலகையே கொண்டு வரும் கனணி புரட்சியிலும் புகுந்து விட்டோம். ஆனாலும், உறவு, பாசம், குடும்பம், கணவன் – மனைவி பந்தம்-பாசமெல்லாம் நம் மண்ணின் பெருமையென சொல்லிக்கொண்டுதான் திரிகின்றோம். ஆனால், இன்றைய இளம் தலைமுறையின் ஆண்- பெண் உறவு முறைகளில், மேலை நாட்டு கலாச்சார மோகம் கண்டுள்ளதாக தெரிகின்றது. இதுவரை, நாம் ஆண்- பெண் உடலுறவை, திருமணத்திற்கு பின் தான், […]
1.முன்னுரை: திருக்குறளின் அறம் நடைமுறை வாழ்க்கையின் உன்னதத்தின் அடிப்படையாகும். இரு வரிகளில் அமைந்ததால் மட்டும் குறளல்ல. அணுவைத் துளைத்து ஆழ்கடலைப் புகட்டியதால் மட்டும் குறளல்ல. ஒவ்வொரு அதிகாரத்திலும் பேசப்படும் கருத்தின் முழுமையைப் பத்துக் குறட்பாக்களில் பேசிக்காட்டும் அசாத்தியத்தில் தான் அது குறள். அந்தப் பத்துக் குறட்பாக்களில், பேசப்படும் அறக் கருத்து வரையறுக்கப்படும்; அதன் அவசியம் விளக்கப்படும்; விளைவுகள் சொல்லப்படும். அதாவது அறங் கடைப்பிடிப்பதின் மேன்மையும், அறத்தைக் கடைப்பிடிக்காததின் கீழ்மையும் குறிக்கப்படும். கூர்ந்து நோக்கினால் சில கருத்துக்களை நிறுவுவதற்காகக் […]
ஜூன் மாதம் பள்ளிக்கூடம் தொடங்கிய முதல் வாரத்தில் புத்தகம் நோட்டு எல்லாம் இல்லாமல் ஜாலியாகக் கழிந்தபின் அடுத்த வாரத்தில் என்ன நோட்டு எத்தனை பக்கங்களில் இருக்கவேண்டும் என்று எழுதிப்போட்டதை என் பெரியண்ணாவிடம் நானும் என் தம்பியும் கலெக்டரிடம் மனுகொடுத்தபின் காத்திருப்பது போலக் காத்திருந்தோம். போன வருடத்தைய நோட்டுகளில் மிச்சமிருந்த பேப்பர்களைக் கிழித்துத் தைக்கச்சொன்னதில் என் பழைய நோட்டுகளில்தான் அதிகம் எழுதாமல் வெள்ளைத் தாள்கள் மிச்சமிருந்ததால், அவற்றைக் கொண்டு தைத்த நோட்டுகளை எனக்கு மட்டுமே கொடுக்கவேண்டும் என்றும் புதிதாக […]
சில விருதுகள்: ————— 1.ஜெயந்தன் படைப்பிலக்கியப்பரிசு 2012 ================================= பெற்றபடைப்புகள்: நாவல்கள்: ”நீர்த்துளி “ சுப்ரபாரதிமணியன்( உயிர்மை பதிப்பகம்) “நிழலின் தனிமை” :தேவி பாரதி (காலச்சுவடு) சிறுகதைகள்: ’’ அப்பத்தா’ பாரதி கிருஸ்ணகுமார் ( வேர்கள்) “சிவபாலனின் இடப்பெயர்ச்சி குறிப்புகள்” அழகிய பெரியவன் ( நற்றிணை) கவிதைகள்: “இறக்கி வைக்க முடியாத சுமை” எஸ்.பாபு ”அந்த நான் இல்லை நான்” பிச்சினிக்காடு இளங்கோ (ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது குழு, மணப்பாறை தமிழ்ச்சங்கம்) ============================================================================== 2. திருப்பூர் அரிமா […]
« . நீ தெரிவிப்பது உண்மையெனில் வெங்கடாம்பாள் தமது மகனென்று விஜயநகர பேரரசுக்கு வாரிசாக அறிவித்திருக்க்கிற சிக்கம நாயக்கன் என்பவன், உண்மையில் அந்தணர் குழந்தையல்ல, செண்பகத்தின் மகன் » 33. சித்ராங்கி கண்விழித்தபோது பொழுது நன்றாக புலர்ந்திருந்தது. விடிந்து இருநாழிகை கழிந்தபிறகும் உறங்கியதை நினைக்க வெட்கமாக இருந்தது. அலுப்பாக உணர்ந்தாள் இருபதுவயதை இன்னும் முழுதாகக்கூடக் கடக்கவில்லை, வாழ்க்கை கசந்துவிட்டது. புறக்கடைக்குச்சென்று பல் துலக்கி காலைக்கடன்களை முடித்து உள்ளே வந்தாள். எண்ணெய் குப்பி¨யை எடுத்தாள். உள்ளே ஒன்றுமில்லை. கவிழ்த்து […]
முனைவர் நா.இளங்கோ இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி. மனிதகுல வரலாற்றைச் சிந்தனைகளின் வரலாறு என்றும் சிந்தனையாளர்களின் வரலாறு என்றும் வருணிக்கலாம். ஏனெனில் மனிதகுல முன்னேற்றம் காலந்தோறும் பல்வகைப்பட்ட சிந்தனையாளர்களின் தத்துவச் சிந்தனைகளின் ஊடாகவே கோர்க்கப்படுகின்றது. இதில் பொருள்முதல் வாதத்தின் முற்போக்கான பங்களிப்பு அரசியல் அரங்கிலும் பொருளியல் அரங்கிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதகுல வரலாற்றில், உலகின் பெரும்பான்மை மக்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் கருத்துமுதல் வாதம் சார்ந்த ஆன்மீகத்தின் பங்களிப்பு என்ன? சமூக மாற்றத்திற்கும் சமத்துவத்திற்கும் ஆன்மீகத்தில் […]
(1) நடப்பு நிலவரம் +2 வரை எப்போது பார்த்தாலும் ஊடகங்களின் பொறுப்பின்மையையும், வெகு ஜனங்களின் விழிப்பின்மையையும் குறிப்பிட்டு அவர்களை கரித்துப் கொட்டி, சபித்துத் தீர்ப்பது சரியா? அவர்களிடம் நல்ல அம்சம் எதுவுமே கிடையாதா? கட்டாயமாக இருக்கிறது. கல்வி (குறிப்பாகத் தமிழகத்தில்) பெறும் கவனம் ஊடகம், வெகு ஜனம் இருவர் தரப்பிலுமே பாராட்டுக்குரியது. மூன்றாமவராக அரசாங்கத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆட்சிகள் மாறினாலும் கல்வித்துறை அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாக இருப்பது நல்ல அம்சம். குழந்தைகளின் கல்வி என்றதும் சினிமாவிலாகட்டும், தனிப்பட்ட […]