பி.கே.சிவகுமாரின் ‘அறிவா உள்ளுணர்வா ‘ கட்டுரையில் எழுப்பப் பட்டிருக்கும் விஷயம் —இறந்து போன எழுத்தாளனைப் “போட்டுப்” பார்க்கும் தமிழ்க் குணாதிசயம் —- சில சிந்தனைகளை எழுப்புகிறது. கனிமொழியின் கைது விவகாரத்தில் பெருந்தன்மையுடன் எழுதும் அதே ஜெய மோகனின் பேனாதான் அடுத்த சில நாட்களிலேயே, மறைந்து விட்ட குத்தூசியைக் குத்திக் கிழிக்கிறது. கருணாநிதி பற்றிய கட்டுரையின் எதிர் வினை ஆக்கங்களினால் குத்தூசி மீது ஏற்பட்ட மனக் கசப்பு இன்று குத்தூசியின் மறைவுக்குப் பின் ஜெயமோகனை அம்மாதிரி எழுதத் தூண்டியதோ […]
இருளை உள்ளடக்கியே பரவிக்கொண்டிருக்கின்றன வெளிச்சக் கீற்றுக்கள் எங்கும் துளை போட இயலாமல் காற்றுவெளியில் இறுகி கோளங்களாய் உருண்டு வீசப்படாத எரிபந்துகளாய் அந்தக் கோள்கள்… வழி எனும் விடை தெரிந்தோ தெரியாமலோ திசை எங்கிலும் விரவிக் கொண்டே தனித்தொரு பாதையமைத்து எதிலும் படாமல் விலகியே செல்லும் என்றும் விடை தெரிவதே இல்லை சில கேள்விகளுக்கு மட்டும் ஷம்மி முத்துவேல்
சனி மூலை என்று தன் கன்னி எழுத்து முயற்சியை அடையாளப் படுத்துவார்களா? பொதுவாக நம் தமிழர்களுக்கு இதைக் கேலி செய்யத் தோன்றலாம். ஆனால் அப்படி ஒருவர் கிடைத் திருப்பதும், சனி மூலை ஒரு புத்தகமாக உருவாவதும் நல்ல விஷயங்கள் தான். நமக்கு வேண்டிய விஷயங்கள் தான். இது சம்பிரதாயமான பாராட்டு அல்ல. பாசாங்குகளும் பாவனைகளும் அற்ற தனக்கு நேர்மையும் உண்மையுமான மனப் பதிவுகள் ஒன்று சொல்ல வேண்டும். ஏற்கனவே போட்டிருக்கும் பாதையில் செல்லாமல் தனக்கென வழி ஒன்று […]
சீனுவாசன் மாத்திரமில்லை.எனக்கு ஒரு பரந்த உலகம் வெளியே விரிந்து கிடப்பதைக் காட்டியவர்கள். மற்றவர்களைப் பற்றி அவ்வப்போது சொல்கிறேன். சீனுவாசன் என் அறையில் வசித்த காலத்தில். வெளியூரில் வேலை பார்த்திருந்த காலத்திலும் அவர் அவ்வப்போது வந்து போவார். அவருடைய பாதிப்பு என்னை மாத்திரமல்ல. என்னோடு அறையில் இருந்த நண்பரகள் அனைவரையும், அவர் தன் அன்பாலும் அக்கறையினாலும் பாதித்தார். வெளித் தோற்றத்தில் அவர் கொஞ்சம் பேச்சில் கடுமை காட்டுபவராக, கிண்டல் நிறைந்தவராக, கட்டுப்பாடுகள் மிகுந்தவராக, ஒரு அலட்சிய மனோபாவம் மிகுந்தவராகத் […]
தலையால் நடந்து கொண்டிருக்கும் ஒரு வினோத பட்சியின் பின்னே துரத்தப்பட்டு அலைக்கழிக்கப் படுகிறேன் கைகால் முளைத்த மரங்கள் ரத்தம் சிதறும் நரம்புகளின் வேதனையை பூமியில் வரைந்து செல்கிறது எனக்கென தென்பட்ட திசையெங்கும் வருடிப் புணர்ந்த கனவின் துளிகள் ஒன்றின் மேல் மற்றொன்றாகி சமாதிகளில் புதைக்கப்பட்ட உடல்களின் பெருங்கூட்டம் எங்கும் அலையடித்து கிளம்பும் பரவெளியில் மூங்கில் காடெங்கும் சாய்ந்தலைந்து அறுபட்ட காதுகள் தொங்க விழிகளற்ற கொடிமர வேலிகள் உமிழ்நீர் துப்பல் சிதறல்களில் துருப்பிடித்து கருகி சாம்பலாகின. பேராறுதல் சொல்ல […]
உடம்பு பூராவும் ரத்தத்துக்குப் பதிலாக அந்த விஷச் சொற்கள் ஓடுவது போல ரத்னாவுக்குத் தோன்றியது. என்ன ஒரு கேடு கெட்ட நிலைமை. அவளுக்கு அருவருப்பாக இருந்தது. மனம் குன்றுவது போலிருந்தது. இந்த உணர்ச்சிகள் எல்லாம் ஒரு சேர எழுந்து அவளைக் கவ்வி , கோபத்தை உண்டாக்கின. எதிரே பலேகர் என்கிற அவள் கணவன் என்கிற புழு இருந்திருந்தால் நசுக்கி விடக் கூடிய கோப வெறி மனத்தில் பீரிட்டு எழுந்தது.சற்று முன்பு நடந்த நிகழ்ச்சியும் அதன் விளைவான அதிர்ச்சியும் […]
என்றுமே தோன்றிடாத பல புன்னகையை இன்று இக்கணம் சுமக்கிறேன் . இது எவ்வளவு மிகைமை உடையவையாக இருந்தும் இன்னுமும் சிரிக்கப்படுகிறது. மீண்டுமொரு தடவை இந்த நிகழ்வு வராமல் போகவும் கூடும் அதன் பொருட்டே ஏற்று கொள்கிறது புறமுகம். புன்னகையின் சிதறல் வெளியே செல்லாமல் இருக்குமாறு கவனமாக்குகிறது. அவையும் மீறிய சிதறிய துளி வெள்ளமென பாய்கிறது எந்நிலை உடையவர்கள் பிரதியை போல பொய்மை கொண்டு மேலும் மேலும் பொழிவை கூட்டுகின்றனர். -வளத்தூர் .தி.ராஜேஷ் .
பிடிகள் தேடி கைகளும் ஆதாரங்கள் தேடி கால்களும் அலையும். உயிர்வளிக்காய் பிதற்றும் நுரையீரல்கள்… வெள்ளி மறைந்து நாளை குறித்த ஐயங்கள் முளைக்கையில் எங்கோ தூரத்தில் ஓர் ஊர் குருவி தனக்கான கூட்டை கட்டி முடித்திருக்கும். பெருவேதனைக்குப் பின்னே பிரசவித்த மகவு கண்டு வலி மறந்து புன்முறுவல் பூப்பாள் சில நொடிகளுக்கு முன் பிறந்த அன்னை. – வருணன்.
வானெங்கும் கருந்திரள்கள் நிறைத்திடும் இரவொன்றின் நேர்க்கோட்டில் அசையும் வளைவுகளென நெளிகின்றன இதயத்துடிப்புகள்.. நெற்றி வகிடின் இறுக்கத்தினில் செவ்வானம் ஒன்றை எழுதிடச் சொல்லி நிற்கையிலே அறைமுழுதும் வெளிர்மஞ்சள் ஒளியில் சிறகு விரிக்கின்றன வண்ணத்துப்பூச்சிகள் சில.. வானவில்லின் நீளத்தில் பேசி தீர்க்க ஆயிரம் இருப்பினும் ஒற்றை வெட்கம் சூடும் உன்னழகினை யாதென்று எழுதி வார்க்க? ஒவ்வொரு வார்த்தையையும் கோர்த்தெடுத்து உறக்கத்திற்கு பதில் உரைக்கிறேன் நான்.. நிலாக்களைச் சிதறடித்து விளக்குகளைத் தனிமையின் இருப்பில் விட்டு அருகருகே அமர்ந்திருக்கிறோம், இரு இணை விழிகளில் […]
ஆழ்ந்த உறக்கத்தினிடையே அடித்த காற்றில் வெளியே பறந்த தெருத்தூசுகளோடு அடித்து கொண்டிருந்த சன்னல் கதவின் அகண்ட வெளிகளோடு தொலைந்து போயிற்று தூக்கமும். விழிகளை அடைத்து இருண்ட வெளியில் புரண்டு புரண்டு காற்றோடு மிதந்து போன தூக்கத்தை இமைகளின் முடிகளால் கட்டி இழுக்க எத்தனித்தேன்… என்னையே இழுக்கிற காற்றில் எதுவுமே நடக்கவில்லை. சுழலும் காற்று சூழ்ந்த இரவில் பற்பல பகற் கனவுகளோடு புரளும் நான்… குமரி எஸ். நீலகண்டன்