ஜூன்20 : உலக அகதிகள் தினம் ‘சென்ற நூற்றாண்டின் இறுதி உலகம் முழுவதும் அகதிகளை பரப்பிவிட்டிருக்கிறது. இலங்கை தேசிய இனப் பிரச்சனைகள் காரணமாக ஈழத் தமிழர்கள் உலகம் பூராவும் நிறைந்திருக்கிறார்கள். வெவ்வேறு நாடுகளுக்கான போர் மனப்பான்மை, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகள், தேசிய இனப் பிரச்சனைகள், உள்நாட்டுக் கலகங்கள் ஆகியவை மக்களை இடம் பெயரச் செய்து அகதிகளாக்கிவிட்டன. உலகமயமாக்கலும் அதன் தொடர்பான தொழிற் சிதைவுகளும் அகதிகளாய் மக்களை வெளித்துப்பிக் கொண்டிருக்கச் செய்கின்றன. அந்நிய முதலீடுகள் பெரிய தொழிற்சாலைகளைத் தோற்றுவித்துக் […]
சமீபத்தில் நாளிதழில் ஒரு செய்தியைப் படித்தேன். எழுத்தாளர் விவேக் ஷான்பாக் தலைமையேற்ற ஒரு குழு எழுத்தாளர்களைப்பற்றிய ஆவணப்படங்களை எடுப்பதற்கான கருத்துருக்களை ஓர் அமைப்பின் சார்பில் பரிசீலனை செய்து, அவற்றை அனுப்பியவர்களை நேர்காணல் செய்து, இறுதிச்சுற்றில் தகுதி பெற்ற நான்கு பேர் கொண்ட பட்டியலை அறிவித்திருந்தது. இந்த அமைப்பைப்போலவே அரசு சார்ந்ததும் சாராததுமான பல அமைப்புகள் கன்னடத்தில் ஆவணப்பட ஆக்கத்தில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றன. படங்கள் முடிவடைந்ததும் பொதுமக்களுக்காக அவை திரையிடப்படுகின்றன. நான் பத்து படங்களுக்கும் […]
ப.கண்ணன்சேகர் ஜூன் 24. கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளுக்கு அந்தாதி வடிவில் கவிதை. தென்றலை நடத்திய தென்னவன் திரையினை ஆண்ட மன்னவன் கோபுரத் தமிழைப் பாடியவன் ! பாடியவன் கவிஞர் கண்ணதாசன் பாமரன் போற்றும் எண்ணதாசன் பாடலில் சொன்னான் தத்துவம் ! தத்துவம் புதைந்த சுரங்கமவன் தமிழ்ச்சுவை நிரம்பிய அரங்கமவன் வித்தகம் எழுத்தில் காட்டியவன் ! காட்டியவன் வரைந்த காவியமே! கருத்தென நிலைக்கும் பாநயமே காலத்தில் மறையா சூத்திரமே! சூத்திரமே சொன்ன திரைஞானி சுற்றிடும் இலக்கிய மலர்த்தேனீ! […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com மக்கள் தங்கள் வேலைகளைச் செய்த பின்னர் எஞ்சிய நேரத்தை இனிமையான பொழுதுகளாக்கப் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஏற்படுத்திக் கொண்டனர். பொழுபோக்கு நிகழ்ச்சிகள் மனதிற்கு மகிழ்ச்சியையும் உடலுக்கு வலிமையையும் சேர்க்க வல்லவையாகும். சீவகசிந்தாமணியில் நீர்விளையாட்டு, பந்தடித்தல், ஆழி இழைத்தல், கழங்காடல், கூடல் இழைத்தல் ஆகிய பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் இடம்பெற்றுள்ளன. நீர் விளையாட்டு கோடைக்காலத்தில் வெயிலின் வெம்மையைத் தணித்துக் கொள்வதற்கு நீர்நிலைகளுக்குச் சென்று […]
கலவை வெங்கட் ஜனவரி 30, 1948. “மஹாத்மா காந்தி வாழ்க!” என்ற பெரும் கோஷம் யமபுரியில் சித்ரகுப்தன் வீற்றிருந்த அவையின் வெளியே கேட்டது. இவ்வாறான கோஷத்தை அதுவரை சித்ரகுப்தன் கேட்டதே இல்லை. பல்லாயிரம் ஆண்டுகள் முன், யமராஜன் யமபுரியின் ஆளுநராக இருந்தார். புவியில் மனிதர்கள் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்களை கவனமாகக் கண்காணித்து கணக்கெழுதுவது அவர் வேலையாக இருந்தது. ஒருவர் செய்கின்ற நல்ல மற்றும் தீய செயல்களுக்கு ஏற்றார்போல வினைப்பயன் கூடும். அவரவர் […]
வாழ்க்கை எல்லாரையும் புரட்டித்தான் போடுகிறது. சிலநேரங்களில் காரணமே தெரியவில்லை. உலகில் நாமே கண் கூடாகப் பார்க்கிறோம். நல்லவராய் இருப்பவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். வாழ்வில் வெற்றி காண முடியாமல் திணறுகிறார்கள். அதே நேரத்தில் பல வழிகளில் எல்லார்க்கும் துன்பங்கள் செய்யும் தீயவர்கள் நல்லபடியாய்க் காட்சி தருகிறார்கள். இதற்கு என்ன விடை என்று பலரும் தேடினால் இறுதியில் விதி எனும் ஒற்றைச் சொல்லில் முடித்து விடுவார்கள் இது சான்றோர் பெருமக்களால் இன்னும் ஆராயப்படவேண்டும் என்றுதான் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் […]
மீண்டும் தேர்வுகள் நெருங்கி வந்தன. இரண்டே பாடங்கள்தான். உடற்கூறும் உடலியலும். இரண்டுமே மருத்துவம் பயில மிகவும் இன்றியமையாதவை. அதனால்தான் தேர்வு சற்று கடினமாக இருந்தது. இந்தத் தேர்வைத் தாண்டினால்தான் மூன்றாம் ஆண்டு வகுப்புகளுக்குச் செல்ல முடியும். பலர் இதைத் தாண்ட முடியாமல் பல வருடங்கள் மருத்துவக் கல்லூரியில் தஞ்சம் புகுவதுண்டு. நான் மீண்டும் இந்த இரண்டு பாட நூல்களையும் படித்து முடித்தேன். வரக்கூடிய கேள்விகளுக்கு பதில் எழுதியும் பார்த்தேன். பிரேத அறுவையிலும் அதிகம் கவனம் செலுத்தினேன். […]
REVIEW OF AMMA KANAKKU 0 நீல் பாட்டே சனாட்டா எனும் இந்திப் படம் தமிழ் பேசியிருக்கிறது. கொஞ்சம் கொச்சையாக இருந்தாலும் கோர்வையாக இருக்கீறது. இயக்குனர் அஸ்வினி ஐயர் திவாரியின் வரவு நல்வரவு. சாந்தியெனும் எனும் அமலா பால் விஜய்யின் ஒரே மகள் பத்தாவது படிக்கும் அபிநயா. படிப்பில் நாட்டமில்லாமல், முக்கியமாக கணக்கில் கோட்ட்டிக்கும் மகளை உசுப்பேற்றி படிக்க வைக்க சாந்தி எடுக்கும் முடிவுதான் மீண்டும் பள்ளியில் சேர்வது. முதலில் ரங்கநாதன் எனும் சமுத்திரக்கனிக்கு இஷ்டமில்லை. […]
ஒரு குறிப்பிட்ட துறையில் காலம் முழுதும் அர்ப்பணிப்புணர்வோடு செயலாற்றுகிறவர்களும் அந்த ஈடுபாட்டுக்காக எல்லா விதமான இழப்புகளுக்கும் தயாரான மனநிலையில் இருப்பவர்களும் தம் இருப்பின் வழியாக மெல்ல மெல்ல திசைகாட்டிகளாக பேசப்படுபவர்களும் ஒரு சூழலில் பெரிய ஆளுமைகளாக அறியப்படுகிறார்கள். ஒரு பண்பாட்டுச்சூழலில் துறைதோறும் வாழும் அனைத்து ஆளுமைகளுக்கும் முதல் மரியாதை கிடைத்தல் வேண்டும். ஆனால் எதார்த்த வாழ்க்கையில் அப்படி நிகழ்வதில்லை. எனினும் அந்த அமைதியை அல்லது புறக்கணிப்பை ஆளுமைகள் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. அவர்களுடைய கவனம் எல்லாத் தருணங்களிலும் […]
அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் இரண்டாவது நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக குறுநாவல் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது. போட்டிகள் பற்றிய பொது விதிகள் உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும்இப்போட்டியில் பங்கு பற்றலாம். ஒருவர் ஒரேயொரு குறுநாவலை மட்டுமே அனுப்பிவைக்க முடியும். குறுநாவல் யுனிகோட் (Unicode) எழுத்துருவில் – மின்னஞ்சல் இணைப்பாக Microsoft Word வடிவத்தில் அனுப்பப்படல் […]