ஆர். அம்பலவாணன் திருவள்ளுவர் பல காலம் சிந்தித்துணர்ந்து தான் வாழ்ந்த காலத்தின் சமூக வழிகாட்டு நெறிகளை பல குறட்பாக்களாக எழுதி இருப்பார். அவர் மாணாக்கர்களோ அல்லது அவருக்குப் பின் வந்த அறிஞர் பெருமக்களோ இக்குறட்பாக்களை அதிகாரங்களாகப் பிரித்துத் தொகுத்து திருக்குறள் என்று நாம் தற்போது அறிகிற நூலாக்கினர் என்பது ஆன்றோர் கருத்து. அதிகாரத்திற்கு பத்து குறட்பாக்கள் என்று சீர் படுத்திய பொழுது இடைச்செருகல்கள் நிகழ்ந்திருக்கலாம் என்ற கூறுவாரும் உண்டு. திருக்குறள் புதிய உரை என்னும் நூலில் சுஜாதா […]
ஏற்கனவே அறிவித்த இரு உரையாடல் + பேச்சுக்களோடு, (http://www.jeyamohan.in/76172 ) இன்னும் சில உறுதியாகியுள்ளது. அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் இன்னும் மூன்று சந்திப்புகள் நடக்க இருக்கின்றன.: a) டொலீடோ/டெட்ராய்ட் பகுதி வாசகர் சந்திப்பு தேதி: ஜூலை 5, ஞாயிறு நேரம்: மாலை 3:30 மணி இடம்: 634 Rosewood Dr, Bowling Green, OH தொடர்புக்கு: சிவா சக்திவேல் – sivagnanam1957@yahoo.com b] நியு யார்க் & நியூ ஜெர்சி சந்திப்பு & ஜெயமோகன் பேச்சு […]
சிறகு இரவிச்சந்திரன் 0 கடத்தல் கூட்டத்தில் ஊடுருவி, அவர்களை கூண்டோடு சிறைக்குத் தள்ளும் காமெடி எலி! 0 எலிச்சாமி சில்லறைத் திருடன். அவனுடைய சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி, சர்வதேச சிகரெட் கடத்தல்காரன் நாகராஜனை வளைத்துப் பிடிக்க நினைக்கிறது காவல்துறை. எலியின் சாமர்த்தியம் செல்லுபடியாகிறதா என்பதைக் காமிக் புத்தகமாகச் சொல்கிறது படம். வடிவேலுவின் அத்தனை பரிமாணங்களையும் பிழிந்து எடுத்து எலியின் பாத்திரத்தில் சேர்த்திருக்கிறார் இயக்குனர் யுவராஜ் தயாளன். அவர் மேல் உள்ள நம்பிக்கையில் அதிக ஈடுபாட்டோடு நடித்திருக்கிறார் வைகைப் புயல். […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ரமாகாந்த் சித்தார்தாவுக்காக தேடிவிட்டு அலைந்து திரிந்து வந்தார். “அவன் எங்கேயும் தென்படவில்லை. நீ வீட்டுக்கு போம்மா. அவனே வந்து விடுவான்” என்றார். மைதிலி தலையை குறுக்காக அசைத்தாள். “ஊஹும். அவனை ஒருமுறை பார்க்காமல், ஒருவார்த்தை பேசாமல் என்னால் போக முடியாது. நானும் வந்து தேடுகிறேன்” என்றாள் மைதிலி. “வேண்டாம் வேண்டாம்” என்றார் ரமாகாந்த். அரைமணி முன்னால் வீட்டுக்காரம்மாள் வந்து, “இந்த ரகளை எல்லாம் எங்களுக்கு வேண்டாம். வீட்டை […]
மதிய உணவு நேரத்தில் மீண்டும் நாங்கள் தேர்ந்தெடுத்திருந்த மரங்களின் நிழலில் விரிப்புகள் விரித்து அமர்ந்துகொண்டோம். நல்ல பசி. கொண்டுவந்திருந்த சுவையான கோழி பிரியாணி உண்டு மகிழ்ந்தோம். பின்பு அங்கேயே கிடைத்த இடத்தில படுத்து ஓய்வெடுத்தோம். நல்ல வேளையாக அன்று வெயில் அதிகமில்லை. குளிர்த் தென்றல் ஜிலுஜிலுவென்று வீசியது. சுமார் மூன்று மணிபோல் சில விளையாட்டுப் போட்டிகள் நடத்தினோம். பாடங்களை மறந்து உல்லாசமாக நேரம் கழிந்தது. மாலையில் திரும்பும் வழியில் திருவண்ணாமலையில் சிற்றுண்டியும் தேநீரும் பருகினோம். திரும்பும் வழி […]
தமிழ்நாட்டின் கிராமீய நாட்டார் நாடகக்கலையும் இன்று தர்மபுரி, வட,தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் என்று தொணடைமண்டலம் சார்ந்த அண்மைப்பகுதிகளுக்குள் உட்பட்டுள்ள கலையான தெருக்கூத்து தனித்தன்மை வாய்ந்த ஒன்று, இதற்கு இணையானது நம் உபகண்டத்தில் வேறெங்கிலும் இல்லை. அப்படி இன்னொன்று இருந்தாலும், அதைப்பற்றி நாம் கேள்விப்படவில்லை. இப்படிச் சொல்வது தமிழ் மீதுள்ள அதீத பற்றின் வெளிப்பாடு எனத் தோன்றக்கூடும். இதை நம்புவது கடினமாக இருப்பதற்கு சில காரணங்கள் உண்டு. இக்கலையின் பல பரிமாண விஸ்தாரமும், அந்த விஸ்தாரம் […]
சுப்ரபாரதிமணியன் எட்டாவது நிறுவனத்திலிருந்து அம்மினி நேற்றுதான் விலகினாள். விலகினாள் என்றால் அந்தக் கணினி நிறுவனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டாள். நேற்று ஒரு மோசமான நாளாக இருக்கும் என்று அம்மினி காலையிலேயே நினைத்திருந்தாள். அது எப்படி மோசம் என்று அவளுக்குத் தெரியவில்லை. சமிக்ஞை சொல்லும் எந்தக்கனவும் அவள் காணவில்லை.பள்ளிக்குடம் ஏதோ கனவில் வந்து போயிருந்த்து. காலையில் எழுந்தபோது முன்வாசலுக்கு வந்த போது அப்படியெதுவும் அபசகுணம் தென்படவில்லை. குறிசொல்பவன் அந்த வீதியில் அலைந்து கொண்டிருந்தான், ஆனால் அவன் ஏதாவது சொல்லி விட்டுப்போனானா […]
கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிமின் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகு தாவூத் அவர்களிடமிருந்து எழுத்தாளர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் சிறப்புப் பிரதி பெறுவதையும் அருகில் நூலாசிரியர் மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் ஆகியோர் இருப்பதையும் படத்தில் காணலாம். தகவல் – தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
வளவ. துரையன் சிறுகதை என்பது வாழ்வின் ஏதேனும் ஒரு முரணைக் காட்டிச் செல்கிறது. அந்த முரண் என்பது நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் சந்தித்திருப்பதே. அந்த முரணுக்குத் தீர்வு கண்டு வாழ்வை அமைத்துக் கொள்வதும் அல்லது அந்த முரணோடு இணைந்து போய் வாழ்வைச் சீராக்கிக் கொள்வதும் அவரவர் தேர்ந்தெடுக்கும் முறைகள். தான் கண்ட அல்லது கேட்ட நிகழ்வுகளைப் படைப்பாக்கும்போது படைப்பாளன் அந்த நிகழ்வில் உள்ள முரணை நேரடியாகவோ மறைமுகமாகவோ சுட்டிக் காட்டுகிறான். அதே நேரத்தில் அந்த முடிச்சை […]
சேயோன் யாழ்வேந்தன் இலக்கியத்துக்கான மிக உயரிய விருது எனக்கு வழங்கப்பட்ட இரவில் பெய்த மழை நிற்கவே இல்லை முழு உலகமும் அழிந்து அப்போதுதான் உருவாகின இன்றைய பெருங்கடல்கள் நோவாவின் தெப்பக்கட்டையில் ஏறித் தப்பிய என்னிடம் இப்போது சான்றுகள் இல்லை கனவா நனவா என்றென்னை எல்லோரும் கிள்ளிப் பார்த்த தழும்புகள் மட்டும் இன்னும் உள்ளன seyonyazhvaendhan@gmail.com