ஸிந்துஜா பல புத்தகங்களை எடுத்து நாம் படிக்கிறோம், அந்த நேரத்தைக் கழிக்கவென்று. சிலசமயம் சுவாரஸ்யம் மேலிட்டும். படித்து முடித்தபின் அவை புத்தக அலமாரிகளில் போய் மீதி வாழ்வைக் கழிக்கின்றன. அல்லது பேப்பர்காரரின் தராசை அடைகின்றன. ஆனால், சில புத்தகங்கள் ! அவற்றை நாம் மறுபடியும் படிக்கின்றோம். மறுபடியும். மறுபடியும். அவற்றின் அர்த்தம் நிரம்பிய வார்த்தைகளில் நமது தேடல் நிகழும் போது ஒவ்வொரு முறையும் வாசிப்பு அனுபவம் முற்றிலும் புதியதாக, ஆச்சரியத்தை உண்டாக்குவதாக, நேசிக்கத் தக்கதாக மாறி மாறி […]
பறக்கும் பலூன்! சிறுமி அத்தனை ஆர்வமாய் அத்தனை ஆனந்தமாய் அத்தனை அன்பாய் அத்தனை அழகாய் ஒரு பலூனை ஊதுகிறாள். முழுமுனைப்போடு மூச்சைப் பிடித்துக்கொண்டு ஊதி ஒரு கால்பந்து அளவுக்கு அதை உப்பவைத்து ஒரு கையின் இருவிரல்களால் பலூனின் திறப்பை இறுகப் பிடித்தபடி வாயிலிருந்து வெகு கவனமாய் வெளியே எடுக்கிறாள். அதற்கென்றே காத்துக்கொண்டிருந்தவர் கையிலிருந்த குண்டூசியால் பலூனில் குத்த ஒரு நொடியில் உருக்குலைந்து சுருங்கித் தொங்குகிறது பலூன். சிறுமி அழுவாள் என்று எதிர்ப்பார்க்கிறார் அந்த மனிதர். சிறுமி அழவில்லை. […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ் இன்று (28 ஜூன் 2020) வெளியாகியுள்ளது. இந்த இதழ் எங்கள் 12 ஆம் ஆண்டின் துவக்கத்தையும் கொண்டாடுகிற ஒரு சிறப்பிதழ். இதை ஸ்பானிய மொழி எழுத்தாளர், ரொபெர்டோ பொலான்யோவை மையமாகக் கொண்ட ஒரு இதழ். இதழை சிறப்புப் பதிப்பாசிரியராக நம்பி கிருஷ்ணன் அவர்களை அழைத்து வழி நடத்தச் சொன்னோம். நிறைய கதைகளும், கட்டுரைகளும் கொண்ட கனமான ஒரு இதழாக இது அமைந்திருக்கிறது. இந்த இதழ் கிட்டும் வலை […]
கோ. மன்றவாணன் “ஆயிரம் பொய்சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணி வை” என்று அறிவுரை சொல்கிறார்கள். மொய் இல்லாமல் திருமணம் நடக்கலாம் பொய் இல்லாமல் திருமணம் நடக்காது என்று ஆகிவிட்டது.. ஆயிரம் தடவைகள் “போய்ச்சொல்லி” ஒரு திருமணத்தை நடத்தி வை என்று சொன்னதாகச் சிலர் சொல்கிறார்கள். இப்படி விளக்கம் அளிப்பவர்களின் நோக்கமும் பொய்சொல்லித் திருமணம் செய்யாதீர்கள் என்பதாகத்தான் இருக்கும். ஒரு திருமணம் நடக்க ஆயிரம் பொய்சொல்லலாம் என்று எந்தச் சான்றோரும் சொல்லி இருக்க முடியாது. […]
கடல்புத்திரன் ஐந்து புதிய தோழர், அந்த இடத்திற்கும் தனக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பிரபாவிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தான். “இவன், மானிப்பாய் எ.ஜி.எ. பிரிவைச் சேர்ந்தவன். எங்கட பிரிவிலே இயங்க வந்திருக்கிறான்” அவனைப் பார்த்து “உனக்கும் அந்தப் பகுதி பிரச்சனையாயிராது” என்ற பிரபா. எல்லாரையும் பார்த்து “தெற்கராலியில், பலர் பேர் பதிந்து வேலை செய்யவில்லை. ஆதரவாளர் என்ற முறையிலே இயங்குகிறார்கள். அதனாலே நாங்கள் இவனை தற்போது நியமிக்கிறோம்.” எனப் பகிடியாகச் சொன்னான். தொடர்ந்தான். “அவ்விடத்து கடல் துறை முக்கிய […]
எஸ்.ஜெயஸ்ரீ இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன், கட்டுரைத் தொகுப்போ என்றே தோன்றும். ஆனால், இது அசோகமித்திரன் 2017ல் எழுதிய நாவல். பொதுவாக, அசோகமித்திரனின் கதைகளின் பாத்திரப் படைப்புகள் எவ்வித ஆர்ப்பாட்டமுமில்லாமல், மேல்ப் பூச்சுமில்லாமல், மிகவும் எளிய, அமைதியான மனிதர்களாக இருப்பார்கள். நம்மோடு, தினசரி வாழ்க்கையில் பார்க்கும், பழகும் மனிதர்களின் சாயலில், சாயலில் என்று கூட சொல்ல முடியாது, அப்படியே இருப்பார்கள். நமக்கு அருகிலேயே இருப்பவர் போல அந்தப் பாத்திரங்களை நாம் உணர […]
விநாயகம் ‘சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்” என்ற முனைவர் பீ பெரியசாமி அவர்கள் திண்ணையில் (22 ஜீன்) எழுதிய கட்டுரையில் முன்வைக்கப்பட்ட சில கருத்துக்களையொட்டி கீழ்க்காணும் கட்டுரை எழதப்படுகிறது. கட்டுரையாசிரியர் தொடக்கத்திலேயே கட்டுரைத் தலைப்பை (‘சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்’ ) மறந்து விடுகிறார். சங்க இலக்கிய காலம், பொதுவாக, கி மு 3 லிருந்து கி பி 2 வரை கொள்ளப்படுகிறது. கி மு வே அன்று. கி பி தான் என்பாரும் உளர். இக்காலத்தைப் பற்றித்தான் தலைப்பு. […]
அலைமகன் எனது மேலதிகாரி கொழும்பில் இருந்து அனுப்பியிருந்த மின்னஞ்சலை மீண்டும் மீண்டும் வாசித்தேன். கொழும்பிலிருந்து வரும் அந்த பெண்ணை வரவேற்று தேவையான எல்லா வசதிகளையும் குறைவில்லாமல் செய்து கொடுக்கும்படி எழுதியிருந்தது. எவ்வளவு முயன்றும் என்ன காரியமாக வருகிறாள் என்ற விடயத்தை என்னால் ஊகிக்க முடியவில்லை. பொதுவாகவே எனது நிறுவனம் சம்பந்தப்பட்ட பணிகள் என்றால் நிச்சயம் எல்லா விடயங்களையும் துல்லியமாக எழுதிவிடுவது அவரின் வழக்கம். தொலைபேசி மூலம் விடயங்களை கேட்டறிவது அவருக்கு பிடிக்காத ஒன்று. அவருக்கு தமிழ் பேச […]
கரோனா வைரஸ் பிராணிகள், பறவைகளை அதிகம் தாக்குவது பற்றித் தகவல்கள் அதிகமில்லை. ஆனால் கார்ப்பரேட் வைரஸ் பறவைகளையும் , பறவைகள் சரணாலயத்தையும் தாக்கும் செய்திகள் வந்து விட்டன. உதாரணம் வேடந்தாங்கல்.. இந்தியாவிற்கு பருவ நிலை மாற்றத்தால் பறவை களின் வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் வேடந்தாங்கல் போன்ற சரணாலயத்தின் பரப்பளவைச் சுருக்கும் முடிவு இயற்கைக்கு விரோதமானது. வேடந்தாங்கல் பறவை கள் சரணாலயத்தின் சுற்ற ளவை சுருக்கும் மத்திய, மாநில அரசுகளின் முடிவு மோசமானது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் […]
எஸ். ஜயலக்ஷ்மி எம்பெருமானுக்கே பல்லாண்டு பாடியவர் பெரியாழ்வார். அவருக்கும் ஒருசமயம் யமதூதரைப்பற்றிய பயம் ஏற்பட்டது போலும்! அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை? என்று எண்ணி திருவரங்கம் பெரிய பெருமாளிடம் சென்று தன் அச்சத்தையும் கவலைகளையும் சொல்வோம் என்று தீர்மானித்து அரங்கன் பள்ளி கொள்ளும் திருவரங்கம் செல்கிறார். திருவரங்கம் பூலோக வைகுண்டம் என்னும் பெருமையுடையது. கங்கையில் புனிதமாய காவிரி நடுவில் இருப்பது. நூற்றெட்டுத் திருப்பதிகளில் முதன்மையானது. “தென்னாடும் வடநாடும் தொழநின்ற […]