ஸ்வரூப் மணிகண்டன் மறுகரையில் இருப்பதாகச்சொல்லி செய்தியனுப்புகிறாய். நம்மிடையே நதியோடியிருந்த காலம் போய் வெகுநாட்களாகிவிட்டது. இப்போது நான் வந்து நிற்கும் கடலுக்கு எந்தெந்தப்பக்கம் எத்தனைக்கரைகள் என்று யாருக்குத்தெரியும்?
சற்று நில். மண் பற்றிக் கொள்ளட்டும். திரிந்தலையும் மேகங்களைக் கண்டு பறந்தலையும் பறவைகள் உன்னிடம் சேருங் கால் இளைப்பாறுவாய் நீ நினைப்பொடுங்கி நிழல் பரப்பும் தருவாகி. கு.அழகர்சாமி
புதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு புதுவை முதல்வர் ந . ரங்கசாமி தொடங்கி வைக்கின்றார்! புதுச்சேரியில் 13 ஆம் உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் 2014, செப்டம்பர் 19 முதல் 21 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலிருந்தும் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்க் கணினி வல்லுநர்கள் பேராளர்களாக வருகைதர உள்ளனர். உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு உலகின் பல பாகங்களிலும் அரசுடனும் பல்கலைக்கழகத்துடனும் இணைந்து தமிழ் இணைய மாநாட்டைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது. இந்த […]
டாக்டர் ஜி. ஜான்சன் 22. வீட்டை விட்டு ஓடினேன் எதிரிகளான குரூப்பும் நானும் அதன் பின்பு அன்றாடம் பார்த்துக்கொள்வோம். அனால் முன்பு போல் முறைத்துக்கொள்வது இல்லை. சிரித்துக்கொள்வோம். அவன் அன்றிலிருந்து என்னுடைய மெய்க் காப்பாளனாகவே மாறிவிட்டான். நான் என்னுடைய அப்பாவிடம் அடி வாங்கி உடலில் காயம் பட்டால் கூட அவனை அது பாதிக்கலாம் என்ற பயம் அவனுக்கு. அதனால் அப்பாவிடமும் நல்ல விதமாகவே நடந்து கொண்டான். கொஞ்ச நாட்கள் அமைதியாகக் கழிந்தன. நான் பாடங்களில் கவனம் செலுத்தினேன். […]
ப்ரதிகள் பலநேரம் அசலைப் ப்ரதிபலிப்பதில்லை. முன்னம் கூட்டிசைந்த பலவற்றின் கூட்டுப் தொகுப்பாய் இருக்கின்றன. அசலின் முத்திரை ப்ரதிகளில் கருநிற அடையாளமாகின்றன. பல்வேறு பயணங்கள் சென்று திரும்பும் ப்ரதிகள் பெரும்பாலும் அசலை வெருட்டுகின்றன. குறுக்குக் கோடுகளோ மையெழுத்தோ முனைசிதைவோ இன்றிச் சிலவே வீடடைகின்றன. லட்சத்தில் ஒன்றின் ப்ரதி அட்சரசுத்தமாய் அச்சுஅசலாய் அசலின் ப்ரதிபிம்பமாய் அமைவதுபோல வேறு ஒன்றும் தலைகீழ்ப்ப்ரதியாய் ஆகிவிடுகின்றது. பரம்பரை சுழற்சியில் கூடுமாறும் எப்பிரதிகளையும் அசல்கள் தன்னுடையதாகவே இனம்காணுகின்றன.
”அப்பா.. அப்பா, பேப்பர் படிக்கறீங்களா. சாப்பிட்டாச்சாப்பா” ‘இல்லப்பா. உனக்காகத்தான் வெயிட்டிங். நிம்மியும் இன்னும் சாப்பிடலை. அவளோட ரூமில் படிச்சிட்டிருக்கா பாரு. சப்பாத்தியும், சன்னாவும் செய்திருக்கேன். வாங்க சாப்பிடலாம்” “சாரிப்பா, இன்னைக்கு நான் உங்களுக்கு டின்னர் தயார் பண்ண ஹெல்ப் பன்ணமுடியாமப் போச்சு. பை த வே, அப்பா ஷி ஈஸ் சுமனா, என்னோட ஃபிரண்ட். இன்னைக்கு நம்மளோட டின்னர் சாப்பிடப் போறாங்க” “வணக்கம் அப்பா” அவள் உடுத்தியிருந்த ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட், பாய் கட் முடி […]
ஜோதிர்லதா கிரிஜா 1984 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தின் 3 ஆம் நாள் இந்தியாவுக்கு மிக மோசமான நாளாகும். அந்நாளில்தான் போபால் நகரத்தில் இருந்த யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் MIC Gas எனப்படும் நச்சு வாயு கசிந்ததன் விளைவாக நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் பல்வேறு உபாதைகளுக்கும் உடற்குறைபாடுகளுக்கும் ஆளாகி மருத்துவ விடுதிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் 4-8-1985 தேதியிட்ட ஆங்கில நாளிதழ் த ஹிந்து வில் வெளியான ஒரு கட்டுரையில் கண்டிருந்தபடி, போபாலின் […]
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி சமீப காலத்தில் சிலர் வினா எழுப்பினார்கள், தினம் என் பயணங்கள் என்று ஏதோ எழுதுகிறாய். தலைப்பைப் பார்த்து பயணக் கட்டுரை என்று எண்ணி படிக்க வருபவர்கள் ஏமாறுவார்கள் என்று. உண்மையில் பக்கத்துத் தெரு வரை சென்று வருவதைப் பயணம் என்று சொல்வதற் கில்லைதான். ஆனால் இது ஒரு மாற்றுத்திறனாளியைக் குறித்தது. ஓர் உயிரினத்தின் பெயரியல், சூழியல், சிறப்பியல்புகளைப் பற்றிப் படிப்பது போல, உயிரினத்தைப் பற்றி (மனித இனம்) மற்றோர் உயிரினம் படிக்கும். ஆனால் […]
டாக்டர் கே என்று அறியப்படும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தன் வாழ்நாள் முழுவதையும் வனவிலங்குகளான யானைகளின் நலனிலும் அவற்றுக்கான மருத்துவத்திலுமே அர்ப்பணித்துள்ளார். இதை ஜெயமோகனின் கதையாகப் படிக்கும்போது மலைகளுள்ளும், காட்டிலும், யானைகளின் அருகிலும் வனாந்தரத்தின் எழிலிலும் இருப்பதை உணர முடிகிறது. அதே போல அங்கே இருக்கக்கூடிய எளிய அரிய விஷயங்களையும் மக்கள் வாழ்வியலையும் பகிர்ந்து போகிறார். வனத்துறை உயர் அதிகாரியின் பார்வையில் வனமும், யானைகளும் டாக்டரின் மருத்துவமும் சொல்லிச் செல்லப்படுகிறது. வனம் சார்ந்த வாழ்வியலையும் யானைகளையும் ( அவற்றின் […]
முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 10 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 37, 38, 39, 40 இணைக்கப்பட்டுள்ளன. +++++++++++++++