சல்மா- ஆவணப்படத் திரையிடலும் கலந்துரையாடலும்…

This entry is part 9 of 21 in the series 2 ஜூன் 2013

ஆளுமைமிகு ஒரு கவிஞராக அறியப்பட்ட ஒரு பெண்ணின் கதை. ஆயிரமாயிரம் பெண்களின் அவலச் சூழலின்மீது கதைகதையாய் விரியும் ஒரு ஆவணத் திரைப்படம் காலம்- 18 ஜுன் 2013 (புதன்) TRINITY CENTRE,EAST AVENUE EASTHAM- E12 6SG மாலை 6 மணி எழுத்தாளர் சல்மா இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்.குறும்பட இயக்குனர்களான நெல்சன்,குவேரா சிவலிங்கம் ஆகியோர் நிகழ்வினை வழிப்படுத்துகிறார்கள். வேலை தினமாதலால், உங்கள் நேரத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். மேலதிக விபரங்களுக்கு […]

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -4

This entry is part 8 of 21 in the series 2 ஜூன் 2013

    மூன்று அங்க நாடகம்   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம்  அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி.   பிரிட்டீஷ் காலனி […]

வாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்

This entry is part 7 of 21 in the series 2 ஜூன் 2013

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு பல் முளைத்தது. ஒரு வயதில் முளைக்கும் பாற்பல்லல்ல. பதின்ம வயதில் முளைக்கும் ஞானப்பல். தாமதமாக முளைக்க நேர்ந்த கோபத்திலோ என்னவோ அந்தப் பல் நேராக முளைக்காமல், வாயின் கீழ்த் தாடை எலும்புக்குள் முளைத்து, வெளியே வராமல் மறைந்து கொண்டது. அதற்குள்ளும் சும்மா இருக்காமல், எலும்பை அரித்து அரித்து, முட்டைக் கோது போல ஆகும் வரை எந்தவித வலியையும் கூடக் காட்டவில்லை. பிறகு, அவருக்கு வலிக்க ஆரம்பித்த பிறகுதான் தாங்க முடியாமல் பல் […]

காலம் கடத்தல்

This entry is part 6 of 21 in the series 2 ஜூன் 2013

மனோகரன் காலையில் ஏதோ அலுவலாக அவசரமாக வெளியே கிளம்பிக்கொண்டிருந்த அண்ணாவிடம் “காலம் கடத்தாம போன வேலைய கெதியா முடிச்சிட்டு வீட்ட வா” என்று அம்மா வாசற்படிவரை சென்று கூறியது, முன் வராண்டாவில் நாற்காலியில் உட்கார்ந்து தேனீர் அருந்திக்கொண்டிருந்த என் காதில் விழுந்தது. அம்மா கூறியதில், ‘காலம் கடத்தாம’ என்ற வார்த்தைகள் மட்டும் மீண்டும் மீண்டும் என் காதில் ஒலித்து ஒரு புது சிந்தனை ஒட்டத்தை தூண்டுவதாய் இருந்தது. அந்த வார்த்தைகளில் ஏதோவொரு இனம்புரியாத அந்நியத்தன்மை புதிதாய் கலந்திருப்பதாக […]

எதிர்பாராதது

This entry is part 5 of 21 in the series 2 ஜூன் 2013

டாக்டர் ஜி.ஜான்சன் வாழ்க்கையில் பல சம்பவங்கள் தானாக நிகழ்ந்து நம்மை துக்கத்தில் ஆழ்த்துகின்றன, இவை நிகழாமல் தடை செய்ய நம்மால் இயலாது. இவற்றை நாம் விபத்துகள் என்று கூறி ஆறுதல் அடைகிறோம். இதற்கு ஒரு நல்ல உதாரணம் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஏ.எம். ராஜாவின் அகால மரணம். திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் வண்டி நகர்ந்தபோது ஏறிய அவர் தவறி வண்டிக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் வீழ்ந்து கோர மரணமுற்றார்! காலத்தால் அழியாத இனிய குரலுக்குச் சொந்தக்காரர் ஏ.எம். ராஜா […]

மருத்துவக் கட்டுரை பெண்களுக்கு இடது புற நெஞ்சு வலி

This entry is part 4 of 21 in the series 2 ஜூன் 2013

டாக்டர் ஜி.ஜான்சன் பெண்களுக்கு இடது புற நெஞ்சு வலி நெஞ்சு வலி என்றதுமே அது மாரடைப்பாக இருக்குமோ என்ற பீதி உண்டாவது இயல்பே. காரணம் இருதயம் இடது பக்கம் உள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் எல்லா இடது பக்க நெஞ்சு வலியும் இருதயம் தொடர்புடையது என்று கூற இயலாது. அதிலும் பெண்களுக்கு மெனோபாஸ் எய்தும் முன் மாரடைப்பு உண்டாவது குறைவு. காரணம் மெனோபாஸ் வரை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் நல்ல கொலஸ்ட்டராலைக் கூட்டுவதுடன், தமனிகளில் கொழுப்பு படிந்து அடைப்பை […]

கவிதாவின் கவிதைகள்

This entry is part 3 of 21 in the series 2 ஜூன் 2013

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் 2008-ல் வெளியான ‘சந்தியாவின் முத்தம்’ கவிதைத் தொகுதியை எழுதியவர் கவிதா. எம்.ஏ., பட்டதாரியான இவர் சென்னையைச் சேர்ந்தவர். இப்புத்தகம் காலச்சுவடு அறக்கட்டளை நடத்திய பெண் கவிஞர்களுக்கான போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளது. இதில் 34 கவிதைகள் உள்ளன. இவை காதலைப் பாடுபொருளாகக் கொண்டவை! 4 கவிதைகளுக்கு மட்டுமே தலைப்பு உள்ளது. ‘ஒளியின் நிறத்திலொரு இரவு’ என்ற கவிதை காதல் பிரிவைக் கருப்பொருளாகக் கொண்டது. இது வழக்கமான காதல் கவிதை இல்லை. புதிய ஆழமான சிந்தனை […]

சீனத் தமிழ் வானொலியின் பொன்விழா

This entry is part 2 of 21 in the series 2 ஜூன் 2013

    அன்று….. முதன் முதலாக சீனாவில் 1920க்கும் 1930க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வானொலியின் குரல் ஒலிக்கத் துவங்கியது எனலாம். சீனாவின் குறிப்பிட்ட‌சில நகரங்களில் அரசியல் சூழலுக்காகவே உதயமான வானொலி ஒலிபரப்பாக இருந்தது. சீன கம்யூனிசக் கட்சி மார்ச் மாதம் 1940ல் மாஸ்கோவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒலியலைபரப்பிகளின் ஊடாக சோதனை முயற்சியைத் துவங்கியது. ஷின்ஹுவா புதிய சீன வானொலி ( Xinhua New Chinese Radio (XNCR) ) என்ற பெயரில் யான்னானிலிருந்து 1940ம் ஆண்டு, டிசம்பர்த் திங்கள்30ம் […]

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 22

This entry is part 1 of 21 in the series 2 ஜூன் 2013

குளிர்காலம் என்பதால் கதிரவன் விடிந்து வெகு நேரம் கழித்தே தென்பட்டான். அன்று புகை-பனி மூட்டம் இல்லை. கம்பளி சால்வைகளைப் போர்த்தியபடி மன்னர் சுத்தோதனர், ராணி பஜாபதி கோதமி, நந்தா, ஆன்ந்தன், தேவதத்தன், அனிருத்தன், பல்லியன் பாண்டு அனைவரும் புத்தரின் குடிலின் வாயிலில் காத்திருந்தனர். புத்தர் தியானத்தில் இருந்தார். ராகுலன் மாங்காய்களைப் பொறுக்கி விளையாடிக் கொண்டிருந்தான். சேவகர்களும் பொது மக்களும் நல்ல இடைவெளி விட்டுத் தோப்பெங்கும் நிறைந்திருந்தார்கள். புத்தர் குடிலை விட்டு சாந்தம் பூரணமாக வியாபித்திருந்த நிறைமுகத்துடன் வெளியே […]

விஸ்வ ரூபம் – எதிர்ப்பு, அடிபணிதல், சுதந்திரத்தின் கட்டுப்பாடுகள்

This entry is part 16 of 21 in the series 2 ஜூன் 2013

விஸ்வருபம் பற்றிய தொடர்ந்த விமர்சனத்தைக் காட்டிலும் இந்தத் தொடர் விஸ்வரூபம் பற்றிய விமர்சனங்களைப் பற்றி பெரிதும் பேசுவது வருக்தம் தருகிறது என்றாலும், தமிழ் விமர்சகரின் மனநிலையை , இடதுசாரிகள் என்று தம்மைச் சுட்டும் அறிவுஜீவிகளின் மனநிலையை விசாரணை செய்ய முயல்கிறது. ஆனால் இது பெரும்பாலும் நம் கண் முன்னே தோன்றி தன்னை நிலைனாட்டிக்கொண்டு விட்ட ஒரு அவலம் என்ற முறையில் மீண்டும் மீண்டும் விமர்சிக்கப்படவேண்டிய ஒன்று என்று எண்ணுகிறேன். சென்ற வாரம் எப்படி நாம் பொதுவாக சரித்திரத்தை, […]