அப்பாசாமியின் கண்களுக்கு முன் கிழித்து எறியப்பட்ட விதமாய் வெள்ளைத்தாள்கள் பறந்தன. வானத்திலிருந்து எறியப்பட்ட்து போலிருந்தது. இது என்ன ஆசீர்வாதமா.. குழந்தைகள் விளையாட்டு போல் தாளைக்கிழித்துக் கொண்டு வீசியெறிந்து கொண்டிருக்கிறார்களா என்றிருந்தது அப்பாசாமிக்கு. இப்போதைக்கு ஒரு வெள்ளைத்தாள் என்பது எவ்வளவு முக்கியம் என்பதும் ஞாபகம் வந்த்து. மூடியிருந்த கண்களைத்திறந்து கொண்டார். அந்த வயதின் வனப்பு அவள் முகத்தில் தேங்கியிருந்தது. அணிந்திருந்தக் குட்டைப் பாவாடையும், மேலாடையில் அவளின் கனத்த மார்புகளும் எந்த ஒரு இளைஞனையும் அவளை தேவதை […]
கலைச்செல்வி சுமார் அறுபதை கடந்த நகுலன் குளிர்ப்பெட்டியில் காலை நீட்டிப் படுத்திருந்தார். உயிரோடிருந்த நாளில் .குளிர்சாதனப்பெட்டியின்; வாசத்தையே அறியாதவர். ஆங்காங்கே படிப்பு வாசம் முளை விட்டுக் கொண்டிருந்த கிராமம் அது. இந்துக்களும் கிறித்துவர்களும் அடர்வாக சம அளவில் இருந்தனர். “வேதகாரங்க வூட்டு ஸ்டெல்லா பெரிய ஸ்கூல்ல படிக்க போவுது.. என்னையும் அனுப்பி வுடு..” ரெண்டு மூணு பொம்பளப்புள்ளங்க பன்னெண்டாம் கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்காங்க. அதுங்களுக்கு மாப்பிள்ளை தேடும்போது ஏற்பட்ட சின்ன தேக்கநிலை நம்ப புள்ளங்களுக்கும் வந்துடக்கூடாதுங்கிற நினைப்பு […]
அந்த சுவற்றின் நெற்றியைப்பார்க்கும் போதெல்லாம் என் மனசுரங்கத்தில் நீர் கசியும். கண்கள் இன்றி இமைகள் நனையாமல் கண்ணீரின் விழுதுகள் பாம்பு நாக்குகள் போல் கீழிறங்கும். ஆனால் அது அழுகை அல்ல. அவலம் இல்லை புலம்பலின் ஊதுவத்திப்புகை சுருள்கள் இல்லை. ஆனாலும் அந்த குகைக்குள் சுரந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த சுவற்றை கவிந்திருக்கும் நிழல் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது. திகு திகு என்று சுவாலைகள் சுழற்றியடிக்கிறது. அங்கணாக்குழியை அடுத்து அடுக்களையை அணைவாய்ப் பொத்தியிருக்கும் சுவர் அது. ஒவ்வொரு பொங்கலுக்கும் வீடு […]
“சபேசா, இன்னைக்கு பொண்ணு பாக்க வறோம்னு சொல்லியிருக்கு, சாயங்காலம் 5 மணிக்கு போகணும். மணி மூனு ஆவுதுப்பா. சீக்கிரம் தயாராகிடுப்பா..” “அம்மா.. ஏம்மா.. இப்படி சொன்னா புரிஞ்சிக்காம அடம் புடிக்கறீங்க. என் வாழ்க்கைய என்னை வாழவிடுங்க. எனக்கு பிடிச்சப் பொண்ணை, கல்யாணம் செய்துக்க உடமாட்டேன்னு நீங்கதான் அடம் புடிக்கறீங்க. முன்ன பின்ன தெரியாத ஒரு பெண்ணை, அதுவும் கிராமத்துப் பொண்ணை கட்டிக்கிட்டு அமெரிக்காவுல போய் எப்படி குடும்பம் நடத்த முடியும். நாலு வார்த்தை சேர்ந்தா மாதிரி இங்கிலீஷ் […]
இத்தோடு இணைத்து அனுப்பப்படும் நூல் வெளியீட்டு செய்தியை தயவுசெய்து பத்திரிகையில் பிரசுரித்து உதவவும். வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை’ நூல் வெளியீடும் இலக்கிய, ஊடக மூத்த பெண் ஆளுமைகள் இருவருக்கான கௌரவிப்பும் வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை’ நூல் வெளியீடும் இலக்கிய, ஊடக மூத்த பெண் ஆளுமைகள் இருவருக்கான கௌரவிப்பும் எதிர்வரும் 2013 ஜூலை 07 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை […]
தபால்-தந்தி இலாகா என்று வழங்கி வந்த இலாகாவைப் பிரித்துத் தபால் இலாகா, தொலைத் தொடர்பு இலாகா என்று சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு துறைகளாய்ப் பிரித்தார்கள் என்பது நமக்குத் தெரியும். தந்தித் துறை என்பதையே இந்தியாவில் ஒழித்துவிடப் போகிறார்களாம். இதற்கு வரவேற்பு, எதிர்ப்பு இரண்டுமே இருக்கின்றன. மின்னஞ்சல், தொலைக்குறுஞ்செய்திகள் என்று முன்னேறிய பிறகு தந்தியின் இன்றியமையாமை குறைந்து விட்டது உண்மைதான். இருப்பினும் அதை அடியோடு நீக்குவதைப் பலர் ஏற்கவில்லை. சில நாடுகள் தந்தியை ஒழித்துவிட்ட போதிலும், வேறு […]
பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. விஜிலென்ஸ் வந்து போன கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஒரு தேர்வு அறையிலிருந்து அய்யோ அம்மா என்று சத்தம் வரவும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. தலைமை ஆசிரியர் தொந்தியைத் தூக்கிக் கொண்டு அவசரமாய் அந்த அறைக்கு ஓடினார். சுந்தரத்தாய்க்கு எதுவும் புரியவில்லை. அவள் உடம்பு சுகமில்லாததால் மெடிக்கல் லீவு போட்டு வீட்டிலிருந்தவள், இன்றைக்கு அவளுடைய பாடத்திற்கு பரீட்சை என்பதால் சிரமத்துடனேயே பள்ளிக்கு வந்திருந்தாள். அவள் பள்ளிக்குள் அனுமதிக்கப் படவில்லை. மாணவர்கள் எழுதி […]
சூர்யா லட்சுமிநாராயணன் அந்த அரையிருட்டில் முழங்காலுக்கு மேல் ட்ரவுசர் போட்டு செல்லும் உருவத்தை பார்த்ததும் தான் தூக்கம் கலைந்தது. எப்பொழுதுமே அழகான பெண்கள் புத்துணர்ச்சியை கொடுக்கிறார்கள் என்றால் அதில் மிகையில்லை. அலுவலகம் ஆனாலும் சரி, செகண்ட் ஷோ சினிமாவானாலும் சரி விழிப்படைவதற்கு (அரைத்தூக்கத்திலிருந்து) உதவுவது அழகான கலகலப்பான பெண்கள் மட்டுமே. அவள் மட்டும் என் அருகில் உட்காருவாள் என்றால் ( 2 சீட் தள்ளி உட்கார்ந்தாலும் பரவாயில்லை) இன்று ஒருநாள் மட்டும் ஆத்திகனாக மாறி கடவுளுக்கு […]
எனக்குத் தெரிந்து 1948–லிருந்தே சென்னையில தண்ணீர் ஒரு கவலைப் படவேண்டிய பொருள்தான். தனித்தனி வீடுகள், கிணறுகள்; ஆனால் குடிக்கும்படி இருக்காது. ஆதலால் (அன்று கார்ப்பரேஷன்) குழாய்த் தண்ணீரை நம்பித்தான் சென்னை வாசிகள் எல்லோரும் இருந்தார்கள். தெருக் குழாய்கள் எனப் பல இருந்தன. அவற்றில் எந்நேரமும் தண்ணீர் வரும். தண்ணீருக் கென்று யாரும் தனியாகச் செலவழித்தது கிடையாது. குழாய்த் தண்ணீரை நேரடியாகப் பயன்படுத்துவார்கள். நானே சிறுவனாக இருந்தபோது குழாயடியில் உள்ளங்கையைக் குவித்துக் கொண்டு தண்ணீர் குடித்திருக்கிறேன். […]
டாக்டர் ஜி.ஜான்சன் கோத்தா திங்கி பேருந்து நிலையத்தின் எதிர்புறம் பிரதான வீதியில்தான் நான் பணிபுரியும் குவாலிட்டாஸ் ( Qualitas ) கிளினிக் உள்ளது. இது மலாய்காரர்கள் நிறைந்துள்ள பகுதி. சுற்று வட்டாரத்தில் பெல்டா செம்பனைத் தோட்டங்கள் ( FELDA oil palm estates ) நிறைய உள்ளன. நல்ல வசதியுடன் மலாய்க்காரர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் கரங்களில் பணம் புரள்வது இங்கு கண்கூடு! என் கிளினிக் இருக்கும் வரிசையில் இரண்டு உணவகங்களும், பக்கத்துக்கு வரிசையில் […]