கடைசியாக தமிழ் சினிமா கிராமத்தையும் கிராமத்து மக்களையும் தனதாக்கத் தொடங்கியுள்ளது. சந்தோஷமான விஷயம். கவனிக்கவும், “தனதாக்கத் தொடங்கியுள்ளது” என்று தான் சொல்கிறேன். கிராமத்துப் பக்கம் பார்வை செல்லத் தொடங்கிய பெருமை பாரதி ராஜாவுக்கு நாம் தந்து வெகு வருஷங்களாயிற்று. நாம் தமிழ் சினிமாவில் பார்க்கும் எந்த ஒரு சிறு மாற்றத்தையும் கண்டு பரவசமாகிவிடுகிறோம். இவையெல்லாம் தானாக தன் இயல்பில் நம் வாழ்க்கையின் இயல்பில், நம் ஒவ்வொருவரின் வளர்ச்சியின் இயல்பில் நிகழ்வேண்டியது அனைத்தும் நம் சினிமாவில் அந்த ஒழுங்கில் […]
நெடுங்கதை:ஜெயஸ்ரீ ஷங்கர் ,புதுச்சேரி. லாவண்யாவின் கல்யாணம் கார்த்திக்கோடு நடந்து முடிந்ததைத் தன் கண்களால் ஆசை தீரக் கண்டு அட்சதையும் அள்ளித் தெளித்த ஜீவாவுக்கு மனசுக்குள் அத்தனை நாட்களாக புகைந்து கொண்டிருந்த பழிவாங்கும் வெறி வெற்றியாக முடிந்ததில் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். லாவண்யாவின் அப்பா ஜீவாவின் பொறுப்பைப் பாராட்டி அவரது கம்பெனியில் அவனுக்கு உயர்ந்த பதவி தருவதாகச் சொல்லி தோளைத் தட்டிக் கொடுத்ததும் ஜீவா பெருமையில் பறந்தான்.கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல கிடைத்த இந்த சந்தர்ப்பம் ஒரே கல்லில் ரெண்டு […]
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய திண்ணை இதழாசிரியர் அவர்களுக்கு வணக்கங்களுடன் நீலகண்டன். படி அமைப்பின் சார்பாக ஜூலை மாதம் ஏழாம் தேதியன்று ஆகஸ்ட்15 நூலின் அறிமுக நிகழ்வு கே.கே.நகர் டிஸ்கவரி பேலஸில் நடக்க இருக்கிறது. அதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். திண்ணை இதழில் அதை பிரசுரித்தால் மிக்க மகிழ்வோம். நன்றியுடன் மிக்க அன்புடன் குமரி எஸ். நீலகண்டன்
எனக்கு முதலில் தெரியவந்தது விக்னேஸ்வரா வா, ரசிகனா என்பது இப்போது நினைவுகொண்டு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. அனேகமாக ரசிகன் தான் என்று நினைக்கிறேன். 1957 லிருந்து 1966 வரை தில்லியில் கரோல் பாகில் அடிக்கடி தங்கும் அறையையும் சாப்பிடும் ஹோட்டலையும் மாற்றிக்கொண்டு வாழவேண்டி வந்த காலத்தில் ஒரு சௌகரியமும் இருந்தது. எல்லாவற்றிற்கும் எங்கு போனாலும் குறுக்கே போகும் ஒரு ரோடு உண்டு ஒரிஜினல் ரோடிலிருந்து ராமானுஜம் மெஸ்ஸைத் தாண்டி நான் இலவசமாக டைம் ந்யூஸ்வீக் பத்திரிகைகளை அவை […]
மூன்று அங்க நாடகம் ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1. [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி. பிரிட்டீஷ் காலனி அதிகாரி […]
(1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா படுக்கையில் மூச்சிழுத்துக் கிடக்கும் நோயா ளிக்கு உதவி செய்ய முன்வருவேன் நான். உறுதி யாக நிமிர்ந்து நிற்கும் மனிதருக்குத் தேவை யான பேருதவி செய்ய வருவோன் நான் ! பிரபஞ்ச விளக்கம் பற்றி பிறர் உரைத்ததைக் கேள்விப் பட்டேன்; ஆம், கேட்டேன் அதை, கேட்டேன் அதை பல்லாயிரம் ஆண்டுகளாய் ! பார்க்கப் […]
டாக்டர் ஜி.ஜான்சன் இன்று சிறு பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல் என்றாலே அது டெங்கி காய்ச்சலாக ( dengue fever ) இருக்குமோ என்ற பீதி எல்லாருக்கும் உள்ளது. இதனால் ஒருவேளை மரணம் உண்டாகுமோ என்ற பயமே இதற்குக் காரணம். ப்ளேவிவைரஸ் ( flavivirus ) என்ற பெயர் கொண்ட வைரஸ் கிருமியால் டெங்கி காய்ச்சல் ஏற்படுகிறது.இது கொசுக் கடியால் பரவிகிறது. இந்த கொசு வகையின் பெயர் ஏ .எஜிப்டி ( A .aegypti ) […]