சத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு

This entry is part 6 of 46 in the series 5 ஜூன் 2011

வணக்கம். திண்ணை இணையத்தில் தொடராக வந்த “ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி” மற்றும் சத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு tamilwritersathyanandhan.wordpress.comவலைப்பூத்தளத்தில் கொடுக்கப் பட்டுள்ளது. நன்றி. அன்புடன் சத்யானந்தன்.

கருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா?

This entry is part 5 of 46 in the series 5 ஜூன் 2011

திருக்குவளை தீயசக்தி கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம், புதிய கட்டுமானங்கள் என்ற போர்வையில் தமிழகம் முழுவதும் நூற்றுக் கணக்கான இந்துக் கோயில்கள் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட வரலாறு பலருக்கும் தெரிந்ததே. இத்தகைய பாதகச் செயலைச் செய்ய, கருணாநிதியின் வஞ்சக மனம் விக்கிரக வெறுப்பாளர்களான தீவிர இஸ்லாமியர்களையும், புராடெஸ்டெண்ட் தீவிர கிறிஸ்தவர்களையுமே தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியம் இல்லை. ஆக்கிரமிப்பாக இருந்தாலுமே, கோயில்களிலுள்ள விக்கிரகங்களைப் பாதுகாப்பான வேறு இடத்துக்கு மாற்றிய பின்னரே அக்கோயில்கள் அகற்றப்படலாம் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை […]

இடைசெவல்

This entry is part 4 of 46 in the series 5 ஜூன் 2011

சில வருடங்களுக்கு முன்னர் இந்தியா சென்றபோது வாங்கிவந்த குறுந்தகடு. எல்லா டிவிடி ப்ளேயர்களிலும் ஓடும் என்று விற்பனையாளர் சொன்னதை நம்பி வாங்கினேன். ஒளிப்பதிவு வடிவம் என்னுடைய டிவிடி ப்ளேயருக்கு ஏற்புடையது இல்லை என்று இங்கே வந்தவுடன் தெரிந்தது. பின்னர் கணினியில் பார்த்துக் கொள்ளலாம் என மறந்து போனது. வீட்டின் மூலைமுடுக்குகளின் புத்தக ரகசியங்களுக்குள் குறுந்தகடு எங்கேயோ ஒளிந்து கொண்டது. சமீபத்தில் வீட்டுக்கு வண்ணமடிக்கும் வேளை வந்தது. என் வீட்டிலுள்ள கி.ரா எழுத்துகளைப் பிடித்த இன்னொரு வாசகரால் இக்குறுந்தகடு […]

எதிரொலி

This entry is part 3 of 46 in the series 5 ஜூன் 2011

  என் இரவின் கழுத்தைக் கவ்விச் செல்கிறது பூனை. நெஞ்சை யழுத்து மந்த இரவினோசை திசையறியாச் சிறகுகளின் படபடப்பு. இருளின் முடியாத சுரங்கக் குழாயினுள் தலையற்ற தேவதை அசைத்துச் செல்லும் வெள்ளை யிறக்கைகளாய் தோட்டத்திலிருந்த  வளர்ப்புப் புறாவின் போராட்டம். இறுக்கமாய்ப் பற்றி மரணத்திற்கு அழைத்துப் போகும் சிறு வேட்டை மிருகத்தின் எச்சில் நூல் காற்றில் நீண்டு அறுந்த போது என்னில் ஏதோ ஒன்று தொடர்பிழக்கும். சில நினைவுகளை எட்டி உதைத்துப் புறந்தள்ளி நடக்கும் காலத்தின் பாதங்கள் ஒரு […]

ஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி

This entry is part 2 of 46 in the series 5 ஜூன் 2011

போதைக்காக அல்லாமல் பொழுதைக் கழிக்கவே புகைக்கிறான் மதுவின் துளிரசம் அருந்தியதில்லை இதுவரைக்கும் போதையில் உளறும் தந்தையாலே குடியை வெறுத்தான் என்றபோதிலும் புகைக்கும் அவரது தோரணையே அவனது சிகரெட் ஈர்ப்புக்கும் காரணம் என்ற செய்தி ரசிப்பிற்குரியதாய் இல்லை அவருக்கு அன்றிலிருந்து அப்பா சிகரெட்டை ஒழித்தார் என்ற ஒற்றை வரியோடு டைரியை மூடிவிட்டு தொடர்ந்து புகைத்துக் கொண்டிருக்கிறான் ஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் இருக்கிறது ஒரு தீக்குச்சி இருக்கட்டும் அதுவல்ல இக்கவிதையின் கருப்பொருள் அவன் புகைத்து அணைத்த முதல் சிகரெட் இப்பொழுது கண்விழித்து […]

அம்மாவின் மனசு

This entry is part 1 of 46 in the series 5 ஜூன் 2011

அம்மாவிடம் கதைகள் கேட்பதென்றால் அலாதி விருப்பம்.       அந்த மாதிரி ஒரு அப+ர்வ சந்தர்ப்பம் எப்பொழுது வாய்க்கும் என்று காத்துக் கொண்டிருப்பான். வேறு யாரும் உடன் இருக்கக் கூடாது அப்போது. சொல்லப்படும் கதைகள் முழுவதும் இவனுக்காகவே. அத்தனையையும் இவனே கேட்டு மகிழ வேண்டும். மகிழ வேண்டுமா? அப்படியா சொன்னேன்…தவறு…தவறு. அம்மாவின் கதைகளில்தான் எங்கிருந்தது மகிழ்ச்சி? சந்தோஷமான வாழ்க்கையில் அங்கங்கே சோகமும், துக்கமும், இழையாடுவது உண்டு. ஆனால் வாழ்க்கையே சோகமென்றால்? கதையைச் சொல்லிக் கொண்டிருக்கையில் எங்காவது அம்மா சிரித்தாளா? எந்த […]