60 ஆண்டுகால “வடக்கன்” அரிப்பு

This entry is part 13 of 13 in the series 12 மார்ச் 2023

திராவிடப்புண்ணாக்கன் வடக்கத்தியானை விரட்டப் புறப்பட்டிருப்பது ஏறக்குறைய அண்டர்வேருக்குள் நெருப்பை அள்ளிக் கொட்டிக்கொள்வதற்குச் சமமானது. இங்கே வடக்கத்தியானை விரட்டியடித்தால், வடக்கே தமிழனை விரட்டியடிப்பார்கள். அதன் மூலமாக அரசியல் லாபம் பார்க்கலாம் என்று நினைப்பது பேராபத்தில் முடியும் என்பதினை திராவிடப்புண்ணாக்கன் உணருவது நல்லது. இல்லாவிட்டால் சிக்கல்தான். தமிழகத்திற்கு வெளியே, இந்தியாவெங்கும் ஏறக்குறைய இரண்டு கோடித் தமிழர்கள் வசிக்கிறார்கள். தோராயமாக பெங்களூரில் பத்து இலட்சம், மும்பையில் முப்பது இலட்சம், தில்லியில் பதினைந்து, பீகாரில் ஐந்து எனப் பரவலாக தமிழர்கள் வசிக்காத இடமே […]

சிலிக்கான்வேலி வங்கி திவால்

This entry is part 12 of 13 in the series 12 மார்ச் 2023

சென்ற வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான்வேலி வங்கி திவாலாகியிருக்கிறது. அதில் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால் மொத்த வங்கியும் நான்கே மணி நேரங்களில் ஊற்றி மூடியதுதான். 2008-ஆம் வருடம் வாஷிங்டன் ம்யூச்சுவல் வங்கி திவாலானதுடன் அமெரிக்கப் பங்குச் சந்தை பெரும் சரிவினைச் சந்தித்தது. அதுபோன்றதொரு சரிவு திங்கட்கிழமையன்று ஆரம்பமாகலாம் என அஞ்சப்படுகிறது. 2008-ஆம் வருடச் சரிவினை டாலரை அச்சடித்துத் தள்ளிச் சரிக்கட்டினார்கள். இந்தமுறை அப்படிச் செய்வது சிரமம்தான். சிலிக்கான்வேலி வங்கியில் என்ன நடந்தது என்பதனைக் […]

ஆப்பிரிக்காவில் இந்தியா: தெற்கு-தெற்கு ஒத்துழைப்பின் மாறிவரும் முகம்

This entry is part 11 of 13 in the series 12 மார்ச் 2023

மீரா வெங்கடாசலம் மற்றும் டான் பானிக் உலக விவகாரங்களில் அதிக செல்வாக்குமிக்க பாத்திரத்தை வகிக்கும் குறிக்கோளுடன் செயல்படும் புது தில்லியின் வெளியுறவுக் கொள்கை, அதன் உத்தியாக வெளிநாடுகளில் உதவி மற்றும் முதலீட்டுக் கொள்கைகளை வகுக்கிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறுவதற்கான இந்தியாவின் நீண்டகால பிரச்சாரத்திற்கு ஆப்பிரிக்க நாடுகளின் ஆதரவு முக்கியமானது என்பதால், இந்தியாவின் திட்டங்களில் ஆப்பிரிக்க கண்டம் எப்போதும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது . அதிகமான இந்திய நிறுவனங்கள் உலகளாவிய இருப்பை நிறுவ முயல்வதால், […]

ஒரு பூச்சி மூளையின் முழுமையான வரைபடம்

This entry is part 10 of 13 in the series 12 மார்ச் 2023

வில் சல்லிவன் ஒரு பழ ஈயின் லார்வா ஒரு அங்குலத்தின் ஒரு பகுதி மட்டுமே நீளமானது, அதன் மூளை தூளான உப்பின் அளவேதான். ஆனால், அந்த சிறிய உறுப்புக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிய முழுமையான படத்தைப் பெற விஞ்ஞானிகளின் முயற்சி தற்போது வெற்றியடைந்துள்ளது. இப்போது, ​​ஆராய்ச்சியாளர்கள் ஒரு லார்வா பழ ஈவின் மூளையில் நியூரான்கள் மற்றும் அவற்றுக்கிடையேயான தொடர்புகளின் விரிவான வரைபடத்தை உருவாக்கியுள்ளனர். 3,016 நியூரான்கள் மற்றும் 548,000 இணைப்புகள், சினாப்சஸ் என்று அழைக்கப்படுகின்றன, இதன் […]

நாவல் தினை – அத்தியாயம் ஐந்து CE 5000 பொது யுகம் 5000

This entry is part 9 of 13 in the series 12 மார்ச் 2023

குயிலியும் வானம்பாடியும் அவசரமாக நடந்த  ’ஏமப் பெருந்துயில்’ Cryostasis என்று எழுதி இருந்த ஒழுங்கை, இருட்டும், அமைதியுமாக நீண்டு போனது. ஒரே போல ஐந்தடி உயரமும், ஆறடி நீளமும், இரண்டு அடி அகலமுமான தேள்கள் அங்கே நகர்ந்து கொண்டிருந்தன. அவற்றின் பழுக்கக் காய்ச்சிய சம்மட்டி போன்ற பெரிய கொடுக்குகள் எந்த வினாடியிலும் தாக்குதலை எதிர்பார்த்து, பயமுறுத்தும்படி உயர்ந்து நின்றன.  குயிலியும் வானம்பாடியும் ஓரமாக ஒதுங்கி வணக்கத்துக்குரிய ஒரு செந்தேளர், எனில் பெரும் பதவி வகிக்கும் செந்தேள் நகர்ந்துபோக […]

பிரபஞ்சத்தின் வயதென்ன ?

This entry is part 8 of 13 in the series 12 மார்ச் 2023

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா  பிரபஞ்சப் பெரு வெடிப்பில்பொரி உருண்டைசிதறிச் சின்னா பின்னமாகித்துண்டமாகித் துணுக்காகித் தூளாகிபிண்டமாகிப் பிளந்துஅணுவாகி,அணுவுக்குள் அணுவாகித்துண்டுக் கோள்கள் திரண்டு, திரண்டுஅண்டமாகி,அண்டத்தில் கண்டமாகித்கண்டத்தில்துண்டமாகிப் பிண்டமாகி,பிண்டத்தில் பின்னமாகிப்பிளந்து, பிளந்து தொடர்ப் பிளவில்பேரளவுச் சக்தியாகிமூலமாகி, மூலக்கூறாகிச்சீராகிச் சேர்ந்துநுண்ணிய அணுக்கருக்கள்கனப்பிழம்பில்பின்னிப்பிணைந்து, பிணைந்து பேரொளியாகிப்பிரம்மாண்டப் பிழம்பாகி,பரிதிக் கோளாகி,பம்பரமாய் ஆடும் பந்துகளை,ஈர்ப்பு வலையில் சூரியனைச் சுற்றிக்கும்பிட வைத்துஅம்மானை ஆடுகிறாள்அன்னை ! ************************* “விஞ்ஞானத்துறை போலி நியதிகளில் [Myths] முதலில் துவக்கமாகி, பிறகு அந்நியதிகள் அனைத்தும் திறனாயப்பட வேண்டும்.” டாக்டர் கார்ல் […]

எங்கேயோ கேட்ட கதை – பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு

This entry is part 7 of 13 in the series 12 மார்ச் 2023

வெங்கடேஷ் நாராயணன் இப்பொழுது அனைத்து குழந்தைகளும் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். குழந்தைகள் தங்களுடைய முயற்சியை மேற்கொண்டு நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறேன். பத்தாவது பொதுத் தேர்வு ஒரு மாணவனின் வாழ்க்கையில் மிகவும் முக்கிய பங்காற்றுகிறது. அதிலிருந்து அவன் மேற்படிப்புக்கு என்ன செய்யலாம் என்று தீர்மானிக்க கூடியது. ஒரு வீட்டில் ஒரு பிள்ளை 10,11, 12 வகுப்பு படித்துக் கொண்டிருந்தால் அவர்கள் வீட்டுக்கு வரும் […]

தேடல்

This entry is part 6 of 13 in the series 12 மார்ச் 2023

சாந்தி மாரியப்பன். ************ விழித்திருக்கும் கைக்குழந்தைக்குத் துணையாய் கொட்டக்கொட்ட தானும் விழித்திருக்கிறார் நோய்மை கிழித்துப்போட்ட ஒருவர் புறப்புலன் மங்கி  அகப்புலன் தெளிவின்றி சுய கட்டுப்பாடுமற்ற உடலர் இருவரில் வந்த பாதை நினைவில்லை ஒருவருக்கு போகும் பாதையோ  தெரியவில்லை இன்னொருவருக்கு அகமும் புலனுமற்ற ஏதோவொரு மாயவெளியில் அளவளாவும் இரு ஆன்மாக்களும் தத்தம் ரேகைகளை அங்கே பரிமாறிக்கொண்டு பிரிகின்றன ரேகையைப் பத்திரப்படுத்தும் பொருட்டு கால் கட்டைவிரலை வாயில் வைத்துக்கொள்கிறது குழந்தை கையை இறுக்கிக்கொள்கிறார் வயதானவர் ஒருவரையொருவர் அர்த்தத்துடன் நோக்கி பொக்கைச்சிரிப்பைச் […]

அகழ்நானூறு 18

This entry is part 5 of 13 in the series 12 மார்ச் 2023

சொற்கீரன் கண்பொரி கவலைய வெஞ்சுர நீளிடை நில்லா செலவின் நீடுபயில் ஆறு கடந்து உழலும் கதழ்பரி செல்வ! கூர் உளி குயின்ற பலகை நெடுங்கல் வரி ஊர்பு நவின்ற வன்படு செருவின் குருதி கொடிய நெளிகால் ஓடி காட்சிகள் காட்டும் முரசுகள் முரலும். இறந்தவை இறந்தபோல் நடந்தவை நடந்தபோல் நளி இரு துன்வெளி அழல் ஊழ்க்காற்றின் இடைபோழ்ந்து இயலிய காட்டும் ஆங்கண். மள்ளற் களியர் மணிநிறக் காட்டில் மரைகொல் அம்பின் வெறிஅயர் கூட்டும். ஆறுபடுவோர் உயிரும் பறிக்கும் […]

நனவை தின்ற கனவு.

This entry is part 4 of 13 in the series 12 மார்ச் 2023

ருத்ரா வாழ்வது போல் அல்லது வாழ்ந்தது போல் ஒன்றை வாழ்ந்து விட்டோம். மீதி? முழுவதுமே மீதி. தொடங்கவே இல்லை. மூளைச்செதில்களில் மட்டும் காலப்பரிமாணத்தின் வேகம் கூட்டி… வேகம் என்றால் சாதாரண வேகம் இல்லை சூப்பர் லுமினஸ்… ஒளியை விட கோடி மடங்கு கூட‌ இருக்கலாம். இந்த பிரபஞ்சத்தின் இந்த அடுக்கு தாண்டிய‌ இன்னொரு அடுக்கில் நீ எட்டு எடுத்து வைத்திருக்கிறாய். இன்னும் சில பத்து ஆண்டுகளில் புதிதாக பிரபஞ்சப்பூக்களை உன் கோட் பித்தான் துளைகளில் கூட‌ பதியம் […]