கவிதை பிறக்குமுன் தாளில்‘ஒன்றுமில்லை’ காதலைச் சொல்ல சொற்கள் ‘ஒன்றுமில்லை’ மதிப்பைக் கூட்டும் பூஜ்யங்கள் ‘ஒன்றுமில்லை’ அம்மா இன்று இல்லை அந்த ‘ஒன்றுமில்லை’ யில் அவர் வாழ்கிறார் வாழ்க்கை வரவு செலவில் மீதம் ‘ஒன்றுமில்லை’ சமநிலையில் தராசு தட்டுக்களில் ‘ஒன்றுமில்லை’ இமய யாத்திரைகள் இலக்கு ‘ஒன்றுமில்லை’ மரணத்தில் புரிகிறது ‘ஒன்றுமில்லை’ ‘ஒன்றுமில்லை’ புரிந்தது மனிதன் புத்தனானான் ஆகாயம் என்பது ‘ஒன்றுமில்லை’ யே புயல்களின் கர்ப்பம் ‘ஒன்றுமில்லை’ உலகம் பிறந்தது ‘ஒன்றுமில்லை’ யில் விதையின் விதை ‘ஒன்றுமில்லை’ அவர் இப்போது […]
ஏழு கடல் ஏழு மலை தாண்டி யொரு குகைக்குள்ளிருந்த இறக்கைகள் வெட்டப்பட்ட கிளியின் குடலுக்குள் இருந்த ரகசியத்தின் பாதுகாப்பைப் பற்றி எனக்கென்ன கவலை யென்றிருந்தான் எத்தனாதி யெத்தனொருவன்_ என்னென்னமோ தகிடுதித்தங்களைத் தொடர்ந்து செய்தபடி. மனுஷ ரூபத்தில் வந்த தெய்வம் கிளிக்கு ஒரு லாப்-டாப்பை மட்டும் கொடுக்க_ கூகிள்-சர்ச்சில் தேடி தன் குடலுக்கு பாதிப்பில்லாமல் கிழித்து ரகசியத்தை வெளியே எடுத்த கிளி _ அதை குகைக்கு அருகாமையில் ஓடிகொண்டிருந்த நதியின் பளிங்குநீரில் காட்ட_ ஆறு அதன் பிரதிபலிப்பைத் தன்னோடு […]
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ சொல்லத்தான் நினைக்கிறேன் மண்டைக் குள்ளே நிரம்பி யுள்ளதை ! ஆயினும் என்னருகில் நீயிங்கு உள்ள போது, சொல்ல வரும் வார்த்தைகள் எல்லாம் எந்தன் வாய் நழுவிச் செல்லும் ! உன்னை நான் நெருங்கும் போது, என்னைத் தாழ்ச்சி செய்துன் , திருவிளை யாடல் துவங்கும் ! பொறுத்துக் கொள்வேன். அடுத்த முறை வரும் போது, கொடுப்பேன் உனக்கோர் பரிசு ! உன்மேல் பரிவின்றி நான் நடமாடி வந்தால் , […]
சுப்ரபாரதிமணியனின் நாவல் “ கோமணம் “ மலையாளத்தில் ‘ஹரா ஹரோ ஹரா “ என்ற தலைப்பில் வெள்ளியன்று கொல்லம் ( கேரளா) பிரஸ் கிளப்பில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்படடது. மற்றும் நான்கு மலையாள நூல்களும் வெளியிடப்பட்டன. சுப்ரபாரதிமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கலை, இலக்கியம் , நடனம் போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார். அவரின் “ சாயத்திரை “, சுடுமணல் ‘ ஆகிய நாவல்கள் முன்பே மலையாளத்தில் வெளியாகி உள்ளன. ( […]
டாக்டர் ஜி. ஜான்சன் நெஞ்சுப் பகுதியில் மார்புகளுக்கு அடியில் நெஞ்சு தசைகள்,நெஞ்சு எலும்புகள், நரம்புகள், இரத்தக்குழாய்கள், நுரையீரல்கள், உணவுக் குழாய், இருதயம் ஆகிய உறுப்புகள் உள்ளன. இவற்றில் எதில் குறைபாடு உண்டானாலும் நெஞ்சு வலி வரலாம் . .நாம் பெரும்பாலும் நெஞ்சு வலி என்றாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று சந்தேகம் கொள்கிறோம். அது நல்லதுதான்.அனால் வேறு உறுப்புகளில் உள்ள குறைபாடுகள் காரணமாகவும் நெஞ்சு வலி உண்டாகலாம். இத்தகைய உறுப்புகளில் உண்டாகும் பிரச்னைகளை வைத்து நெஞ்சு வலியை […]
டாக்டர் ஜி. ஜான்சன் 213. நண்பனின் கடிதம். நண்பன் சென்ற பின்பு சில நாட்கள் அவன் நினைவாகவே இருந்தது. வேலையில் மீண்டும் கவனம் செலுத்தினேன். அவன் பெண் பார்க்கவே தமிழகம் வந்திருந்தான். அத்தை மகளையும் பார்த்துவிட்டான். ஆனால் அவர்களுக்கு முடிவைத் தெரிவிக்காமல் கடிதம் போடுவதாகச் சொல்லியுள்ளார். என்னிடமோ பெண் குண்டாக இருப்பதாகவும் தனக்கு ஒல்லியான பெண் வேண்டும் என்றும் சொன்னான். இரண்டு வாரங்கள் கழிந்தன. சிங்கப்பூரிலிருந்து ஓர் ஏர் மெயில் கடிதம் வந்தது. அதை கோவிந்தசாமிதான் எழுதியிருந்தான்.ஆவலோடு […]
ஆதியோகி சிறகிலிருந்து பிரிந்து காற்றில் அலைந்த இறகொன்று பறவையின்றித் தானே தனித்துப் பறப்பதாய் மமதையோடு எண்ணி மகிழ்ந்தது, தரையில் வீழ்ந்து குப்பையோடு குப்பையாகிப் போகும்வரை..! – ஆதியோகி
ரன்யா மர்யம் பக்கம் பக்கமாக சொற்கள் பரந்து கிடக்கும் புத்தகத்தில் அடைப்புக்குறிக்குள் பாதுகாக்கப்படும் அவ்வொற்றை வார்த்தைபோல கவனம் பெறுகிறாய் நீ..!
ரன்யா மர்யம் பேராழியின் மென்சலன மையத்தில் மிதக்கிறது ஆளற்ற மரக்கலமொன்று. சில அலுமினிய பாத்திரங்கள் மீன் வலை சூழ கிடந்தாடுகிறது அதை செலுத்தியவனின் உடற்கூறுகளை சுறாக்கள் ஆராய்ந்து செரித்திருக்ககூடும். ஒருவேளை அடியாழத்தில் பிணமரித்து போய் எலும்புகள் மிச்சமாய் கிடக்கக்கூடும். கனவாய் மீன்களுக்காய் கடல் வந்தவன் கடலுக்கு உடல் தந்தானென ஆழிப்புறாக்களின் கூட்டமொன்று அம்மரக்கலத்திலமர்ந்தவாறு காணாமல் போனவனைப்பற்றி தங்களின் பாஷையில் தர்க்கித்து கொண்டிருக்கிறது.
[ 1942 – 2018 ] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.biography.com/people/stephen-hawking-9331710 http://www.ted.com/talks/stephen_hawking_asks_big_questions_about_the_universe https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=OPV3D7f3bHY “என்னைப் போல் நீயும் விஞ்ஞானத்தை நம்பினால், எப்போதும் பின்பற்றப்படும் ஏதோ சில பிரபஞ்ச விதிகள் இருந்தன என்பதை நீ ஏற்றுக் கொள்ளலாம். அவற்றைக் கடவுளின் வேலையென்று நீ விரும்பினால் சொல்லிக் கொள்ளலாம். அது கடவுளின் விளக்கத்தைக் கூறுகிறதே தவிர அவரது இருப்பை நிரூபிக்க வில்லை.” ஸ்டீஃபன் ஹாக்கிங் “பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதைத் தீர்மானிக்க விஞ்ஞான விதிகள் […]