நிர்மல் சிறு வயதிலிருந்தே தொடர்ந்து வரும் சுபாவமாதலால் காரணமெல்லாம் தெரியாது. எப்போதாவது பொது இடத்தில், பின்னிருந்து யாராவது தன் பெயரைச் சொல்லி அழைத்தால், திக்கென்றிருக்கும் அவனுக்கு. யாரென்று திரும்பிப் பார்த்தால் யாராவது நண்பர்களாகத் தானிருக்கும். அவ்வளவு ஏன், தெருவில் யாரோ யாரையோ ‘ஏய்!’ என்று ஒரு குரல் கொடுத்தால் போதும். தன்னைத் தான் கூப்பிடுகிறார்களோ என்று பயம் சூழ்ந்து கொள்ளும். பின்னால் திரும்பிப் பார்க்கவே அச்சப்படுவான். அன்று அப்படி யாரும் அவனை அழைக்கவில்லை. ஆனாலும் நடப்பவை வழமைக்கு […]
சுப்ரமணியபுரத்திற்குப் பிறகு, சமுத்திரக்கனியும் சசிகுமாரும் ‘ நாடோடிகள் ‘ படம் எடுக்க முனைந்த போது, அவர்கள் மீது நம்பிக்கை வைத்து, வாய்ப்பு கொடுத்தவர் மைக்கேல் ராயப்பன். அதே நம்பிக்கையுடன், ஷண்முகராஜை படமெடுக்க அழைத்திருக்கிறார். 174 நாட்கள் நடிப்புப் பயிற்சி, 71 புதுமுகங்கள், முகமே இல்லாத பாட்டு என்று ஏகத்துக்கு விளம்பரம். முத்தங்கள் என்ற தலைப்பு இருப்பதால், கமல் பாராட்டியதாக, படமெடுத்து போஸ்டரில் போட்டுவிட்டார்கள். எல்லாமே உதடு ஒட்டாத, பறக்கும் முத்தங்கள் ஆகும் என்று ராயப்பன், கனவு கூட […]
++++++++++++++++++++ எல்லாம் அழிபவை ++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் […]
இணைப்பேராசிரியர், மா. மன்னர்கல்லூரி(த), புதுக்கோட்டை. ஒற்றுமை என்பது உலக ஒற்றுமை, நாட்டின் ஒற்றுமை, இனத்தின் ஒற்றுமை, குழுவின் ஒற்றுமை என்று பகுக்கப் பகுக்க சிறுபிரிவாய் குறுகும் தன்மையை உடையது. இச்சிறு சிறு பிரிவுகள் ஒன்றாக்கப் பெற்றால் மட்டுமே உலக ஒற்றுமை என்பது பெறப்படும். ஆனால் இனத்தால், மொழியால், நிறத்தால் பாகுபட்டு நிற்கும் சமுகத்தை எவ்வளவுதான் ஒன்றிணைத்தாலும் அது தன்னுடைய இயல்பான பிரிதலை நோக்கியே செல்லும். இந்தப் பிரிதலைத் தடுத்து ஒற்றுமையை நிலைநாட்ட இந்தியத் தத்துவங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிதான் […]
20. சாளரத்தின் வழியே பகற்பொழுதின் ஒரு துண்டு பிமெண்ட்டா அறையிலும் கிடந்தது. குளிர்ந்த காற்று சலசலவென்று காதருகே சலங்கைபோல ஒலித்துக் கடந்தது. அக்காற்றுடன் மைனாக்களின் கீச்சு கீச்சும், ஒன்றிரண்டு காகங்களின் கரைதலும், இரட்டை வால் குருவியின் கிக் -கிக்கும், குயிலொன்றின் குக்கூ அக்கோவும் கலந்திருந்தன. மீட்பரின் குரல்போல அவை பேசின. அறையில் தளும்பிக்கொண்டிருந்த குளிர்காற்றில் சிறிது நேரம் அசையாமற் கிடந்தார். எத்தனை சுகமான அனுபவம். எட்டுமணி நேரத்திற்கு முன்பு எரிமலைக்கருகில் கிடத்தியதுப்போலவிருந்தது. இப்போதோ நேற்றைய மனநிலை இல்லை. […]
உஷாதீபனின் கதைகளில் காணப்படும் மனிதாபிமானம் ஆசிரியரின் மன நிலையைக் காட்டுகிறது. சிறுகதைகளில் ஆளப்படும் சில சிறந்த யுக்திகளை அவர் கையாண்டிருப்பது மெச்சத்தக்கதாக உள்ளது. சுருங்கச் சொல்லித் தாம் ஸ்ருஷ்டித்திருக்கும் கதாபாத்திரங்களை படிப்பவர் மனதில் உணர்ச்சி பொங்க வைத்திருக்கிறார் என்பது உண்மை. எட்கர் ஆலன் போ சொன்ன கருத்தான “சிறுகதை என்பது அரை மணியிலிருந்து ஒரு மணி அல்லது இரண்டு மணி அவகாசத்துக்குள் ஒரே மூச்சில் படித்து முடிக்க்க் கூடியதாக இருக்க வேண்டும். அது தன்னளவில் முழுமை பெற்றிருக்க […]
தன்னில் பயணித்த நீரோடைகளின் தடயங்களோடிருக்கும் மணல்பரப்பில் திரண்டிருந்த ஆடுகளோடு உரையாடினார் சிலுவையில் அறையப்பட வேண்டியவன்தான் பாவிகளை ரட்சித்து பாவமூட்டையின் சுமைதாங்கி நின்றேன் என் வழித்தடங்கள் புனிதமாக்கப்பட தேர்ந்த மேய்ப்பாளனானேன் அப்பங்கள்களை சகலருக்கும் பகிர்ந்து தொடுதலில் சுகப்படுத்தும் சிகிச்சை நிபுணன்தான் மனக்கசப்பும் வருத்தமுமின்றியே சுமக்கிறேன் எனது ஜனன நாளில் அவதரித்து என்பொருட்டு பலியான சிசுக்களுக்காகவென்றார் மேலிருந்து உதிரத்தொடங்கின கொன்றைப் பூக்கள்…
திண்ணையில் வரும் திருமதி. சீதா லட்சுமி அவர்களின் தொடரில் குறிப்படப்பட்டிருந்த காந்திகிராம நிறுவுனர்களான, அம்மா என்று அழைக்கப்பட்ட திருமதி.சௌந்தரம் அம்மாள், ”மாமாஜி” என்று அழைக்கப்பட்ட திரு.ராமச்சந்திரன் அவர்கள் உள்ள ஃபோட்டோ இது. இருவருக்கு இடையில் தெரிபவர் என் அன்னையார். அங்கு பயின்றவர். 19 – ஜனவரி – 1956ல் எடுக்கப்பட்ட படம். சேரைப் பிடித்திருப்பவரும் , அவர் அருகே உள்ளவருமே அவர்கள். காந்திகிராமத்தினரால் பிரித்துப் பார்க்கப்பட முடியாத இடம், “தம்பித்தோட்டம்”. 1956-ல் எடுக்கப்பட்ட ஒரு படம் கீழே…
நளினி அம்மா சற்று அதிர அதிரத்தான் நடப்பாள். பெரிய சரீரம். சாரீரமும் கனம்தான். அதட்டலான குரலில் ” ஏய் சிறுக்கி ! எதையும் தொடாம சும்மா ஒக்கார்ந்திருக்க மாட்டியா ? இந்த ஆம்பிளப்புள்ள ஒக்கார்ந்த்திருக்கல ? ” என்று என்னை ஒப்பிட்டு எப்போதாவது அவள் அசந்திருக்கும்போதோ அந்தப் பக்கம் இந்தப் பக்கம் போயிருக்கும்போதோ எதையாவது எடுத்துத் தின்றுவிடும் வலது பக்க வீட்டுப் பெண் சகுந்தலாவையோ அல்லது என்னையும் சகுந்தலாவையும்விட பெரியவளான வயதில் பெரிய, என் பெரிய சகோதரிகளையொத்த […]
குருதி குடித்து பசி போக்கும் மானிட மந்தைக்கு போதனை செய்ய மனமிறங்கி தூதனான் தேவன். மந்தைக்கு ஏற்ற முகமூடி பொருத்தி சாயத் தொட்டியில் மூழ்கி எழுந்து நிர்வாணம் தொலைத்தவனென வீதியில் உலா வந்தான். சிலவீதியில் இராமனாக அடுத்தவீதியில் முல்லாவாக மறுவீதியில் கர்த்தனாக இந்தவீதியில் புத்தனாக- போதித்த வார்த்தைகளை சாயச்சாத்தான் தின்று விழுங்குயது. சாயத்தைத் துடைத்தெறிந்து மலரொன்றை கையிலேந்தி சிறுமி வேடம் தறித்து தூதனாகப் புறப்பட்டான் சாத்தானின் கோட்டைக்கு. -சோமா