ஆணவம்

This entry is part 22 of 42 in the series 25 மார்ச் 2012

‘மின்னலுக்கும் கால்கள் பின்னும் என் வேகம் பார்த்து வேகத்தில் என்னை வெல்பவன் எவன்?’ சூளுரைத்தார் முயலார் சிரம் தாழ்த்தின சில்லரை மிருகங்கள் சிரம் உயர்த்திச் சொன்னார் ஆமையார் ‘நான் வெல்வேன்’ ‘கவிழ்த்துப் போட்ட கொட்டாங்கச்சியே போட்டி எறும்போடல்ல என்னோடு.’ ‘தெரியும் நாளையே நடக்கட்டும் போட்டி ஆனால் ஆனால் போட்டி நிலத்திலல்ல நீரில்’ ‘ஆ! நீரிலா?’ ‘ஆம் நிலமென்று நீர் சொல்லவில்லை நீர் என்று நான் சொல்கிறேன்’ கரவொலித்தன மிருகங்கள் ஆமோதித்தனர் ஆமையாரை ‘தயாராகு. இல்லையேல் தவிடாவாய்.’ மொத்த […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 16

This entry is part 21 of 42 in the series 25 மார்ச் 2012

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 16 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா உன் சல்வேசன் அணியில் வேலை கிடைக்காமல் ஆத்மா நோகும் ஒருவனைக் கொண்டுவா !  நான் அவனுக்கு ஊழியம் அளித்து வாரத்துக்கு 40 ஷில்லிங் ஊதியம் தருகிறேன். சுத்தமான ஒரு வீதியில் புது வீடும் கொடுக்கிறேன்.  அவனுக்கு உன்னைப் போல் நான் […]

சிந்தனைக்கூடமா ? காசாப்புக்கடையா ?

This entry is part 20 of 42 in the series 25 மார்ச் 2012

சிந்தானாவாதிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் சமீப காலமாக அடிக்கடி தாக்கப்படுவதும், அவர்களது சுந்தரத்தில் தலையிடுவதும் ஒரு சுதந்திரம் அடைந்த நாட்டில் நடை பெருவது மிகுந்த வேதனையைத்தருகின்றது. அதற்காக அரசங்கம் எந்தவித , சட்டரீதியான நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை. நீதிபதி கட்சுதான் இது குறித்து அறிக்கை தயாரித்து எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளதாக அறிய வந்தோம். ரூஷ்டிக்கும், தஸ்லீமாவுக்கும் ஏற்ப்பட்ட அவமானங்களும், தலைக்குனிவும், ஒரு கும்பலால் ஏற்ப்பட்டது. அவர்களது புத்தகங்களும் வெளியிட தடை செய்வதும், விற்க முடியமால் மிரட்டல் விடுவதும், […]

காரைக்குடியில் கம்பன் விழா

This entry is part 19 of 42 in the series 25 மார்ச் 2012

காரைக்குடியில் கம்பன் விழா சிறப்புடன் நடைபெற உள்ளது். ஏப்ரல் மாதம் 3,4,5 ஆகிய நாள்களில் காரைக்குடி கம்பன் மணி மண்டபத்திலும் 6 ஆம் தேதி நாட்டரசன் கோட்டையிலும் நடைபெற உள்ளது.   கலந்து கொள்வோர் 3.4.2012 – செவ்வாய்- 5.30 மணி திரு நாஞ்சில் நாடன், முனைவர் பழ. முத்துவீரப்பன், பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் மற்றும் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை நூல் வெளியீடு- தெ. ஞான சுந்தரம் அவர்கள் படைத்த கம்பர் போற்றிய கவிஞர்   4.4.2012 […]

அணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வரும் தவறான கருத்துக்கள்

This entry is part 18 of 42 in the series 25 மார்ச் 2012

    கல்பாக்கம் இந்திரா காந்தி அணுவியல் ஆய்வுக் கூடம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னுரை:  1945 இல் ஜப்பானில் அணுகுண்டுகள் வீழ்ந்து ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள் தரை மட்டமாகி லட்சக் கணக்கான ஜப்பானியர் கதிரியக்த்தால் பேரளவு பாதிக்கப் பட்ட பிறகும், அமெரிக்காவில் 1979 இல் திரிமைல் தீவு அணுமின் உலை விபத்து நேர்ந்து அணுவியல் எருக்கோல்கள் உருகிய போதினும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் செர்நோபில் அணுமின் உலை வெடித்துப் பலர் […]

குளவி கொட்டிய புழு

This entry is part 17 of 42 in the series 25 மார்ச் 2012

வசந்த காலத்தை வரவேற்று, சரம், சரமாக மங்கலமான மஞ்சள் வண்ணத்தில் , மெல்லிய நறுமணமும் பரப்பிக் கொண்டு, குடையாய் விரிந்த கொன்றை மரம். விடியற்காலை வேளை. ஆதவன் தன் வெப்ப கிரணங்களை அள்ளி வீசும் முன் குளிர்ந்த தென்றல் வீசும் இதமான காலம். மயில் போல தோகையும் செம்போத்து பறவை போன்ற தோற்றமும் கொண்ட பறவை ஒன்று விர்ரென்று பறந்து வந்து கிளை ஒன்றில் அமர்ந்து தம் சிறு தோகையை விரித்து அழகு காட்டிக் கொண்டே, குகுக்….. […]

பஞ்சதந்திரம் தொடர் 36 – இரந்துண்ணும் நிலை எப்படி?

This entry is part 16 of 42 in the series 25 மார்ச் 2012

அது துரதிர்ஷ்டத்துக்குக் கட்டிய கோயில்; அது மனத்தைப் பறிக்கும் திருடன்; கண்ணீருக்குப் புகலிடமாயும், மானத்துக்குச் சாவு மாதிரியும், வாய்த்திருப்பது; அது பிறரின் ஏளனத்துக்கு இருப்பிடம்; அது பயத்தின் களஞ்சியம்; சந்தேகத்தின் விளைநிலம்; ஆபத்தின் உறைவிடம்; மானமுள்ளவர்களின் தேசுவைப் பறிக்கும் காலன்; அது ஒரு வகைச் சாவு. தன்மானமுள்ளவனுக்குப் பிச்சையெடுப்பது என்பது ஒரு நரகமே தவிர வேறில்லை. பிச்சைக்காரன் மானமழிகிறான். மானம் போனதால் கர்வத்தை விடுகிறான். கர்வம் போனதால் சிறுமையடைகிறான். சிறுமை யடைவதால் வேதனைப்படுகிறான். வேதனைப்படுவதால் துயரம் அடைகிறான். […]

வெறும் தோற்ற மயக்கங்களோ?

This entry is part 15 of 42 in the series 25 மார்ச் 2012

அதற்கப்புறம் ஆறேழு மாதங்களாகியும் அம்மாவுக்கு அப்பாவின் மறைவு குறித்து தீர்மானமாக ஏதும் புரிந்துவிடவில்லை அன்றாட வாழ்க்கையில் அதிகப்படியான உரையாடல்களை அம்மா அப்பாவிடம் சொல்லிக் கொண்டுதானிருந்தாள் அப்பா வாழ்ந்த வீட்டின் அத்தனை இடங்களிலும் நின்றதுவும் நடந்ததுவும் மொத்த நேரமும் கூடவே இருந்ததுவும் சில்லறைக் காரியங்களைச் செய்து தந்ததுவும் மாடியில் தண்ணீர்தொட்டி நிரம்பி அருவியாய் கொட்டும்போதெல்லாம் மோட்டாரை நிறுத்தச்சொல்வதும் காய்கறிக் கடையில் மறக்காமல் புதினா மல்லியோடு கறிவேப்பிலைக் கொத்தும் கிள்ளிப்போட்டு வாங்கிவரச்சொல்வதும் அடமான நகைக்கு வங்கியில் கெடு முடிவடையப்போவதை நினைவுறுத்துவதும் […]

சோவின் ‘ என்று தணியும் இந்த சுதந்திர தாகம் _ மேடை நாடகம் (நகலச்சு)

This entry is part 14 of 42 in the series 25 மார்ச் 2012

அட(ய்)யும் சக்கை பிரதமனும் கழிக்கா(த்)த கேரளக்காரன் உண்டோ? சோவின் நாடகமும் நையாண்டியும் களிக்காத தமிழ்ப் பாமரன் உண்டோ? டி.வி. வரதராஜனின் யுனைட்டெட் விஷ¤வல்ஸ் குழு மீண்டும் மேடையேற்றிய நாடகம். கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்குப் பிறகு ( 1971 ) மீண்டும் மேடையேற்றுவதால், தற்கால அரசியல் கிண்டல்கள் ஏதும் இருக்குமோ என்கிற நப்பாசையில், வந்த கூட்டம், கடைசியில் ஏமாந்து திரும்பியது. சோ எதையும் மாற்றவில்லை. மாற்றவும் விடவில்லை. வந்தவர்கள் எல்லாம் பெரும்பான்மை ஐம்பது ப்ளஸ். அதனால் பலமுறை கேட்டது […]

தில்லையில் கள்ள உள்ளம்…

This entry is part 13 of 42 in the series 25 மார்ச் 2012

(இதைப் படித்தபின் எவரது மனமாவது புண்படுமாயின் தயைகூர்ந்து மன்னிக்கவும்..) மனசு பூரா…எதிர்பார்ப்போடு அம்மாவின் வருகைக்காகக் காத்திருந்தேன். நீண்ட மாதங்கள் கழித்து இப்போது தான் மிகவும் பிரயத்தனப்பட்டு ஒரு வழியா….என் தொல்லை தாங்காமல் என் வீட்டுக்கு வர அம்மாவை பெங்களூரில் இருந்து சிதம்பரத்திற்கு பஸ் ஏற்றி விட்டு..ஜெயா..நீ வந்து அம்மாவை அழைச்சுக்கோ.. ன்னு சொன்னான்.. என் தம்பி. அதுவும் அம்மாவுக்கோ….என்னைப் பார்க்கும் சந்தோஷத்தை விட சிதம்பரத்தில் சபாநாயக்கர் கோவிலில் நடராஜ தரிசனம் காணும் ஒரே ஆவலும் …ஆசையும்… தான் […]