அது சம்பவித்துக் கொண்டிருந்தது அருகிலிருந்து அவதானித்துக் கொண்டிருந்தேன் உடல் கிடத்தி வைக்கப்பட்டு உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிடியை இழக்க அது சம்பவித்துக் கொண்டிருந்தது அது சம்பவித்து முடிவதில் ஏதோ ஓர் எதிர்ப்பு இருப்பதாக என்னால் உணர முடிந்தது எனினும் அது கால்களின் விரல்களில் துவங்கி மேல்நோக்கி கைப்பற்றிக்கொண்டே செல்வதற்கான அடையாளங்களைக் காண முடிந்தது அது கடந்து சென்ற வழியெல்லாம் நரம்பு நெகிழ்ந்து அசைவிழக்க உஷ்ணம் குறையத் தொடங்குவதைக் குறிக்கத் தவறவில்லை நான். மரணப் படுக்கையில் பார்வை பிரத்தியேகமானது […]
பவள சங்கரி. உடலோடும் உணர்வோடும் விளையாடுவதே வாடிக்கையாகப் போய்விட்டது. சூடுபட்ட பூனையானாலும் சொரணை கெட்டுத்தான் போய்விடுகிறது. மடிமீதும் மார்மீதும் கையணைப்பினுள்ளும் தஞ்சம் புகுவதே வாடிக்கை.ஆகிவிடுகிறது. வெட்கமுமின்றி துக்கமுமின்றி தேடித்திரிதலே அன்றாடப் பிழைப்பாய் இருக்கிறது. எவர் கொடுத்தாலும் மறுக்க இயலாத ஏழ்மையாகிவிடுகிறது. உண்ணும்போதும் உறங்கும் போதும் கூட பிரிய மனம் மறுக்கிறது. நம்மையே நையப்புடைத்தாலும் விட்டு அகல முடியாமல் தவிக்கிறது உள்ளம். ஓங்கி ஒலித்தாலும் இதமாக வருடினாலும் தாங்கிப் பிடிக்கிறது தன்னையே. வண்ணங்களும் எண்ணங்களும் வேறுவேறாய் ஆனாலும் அகல […]
தாகூரின் கீதப் பாமாலை – 2 புண்பட்ட பெருமை மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வசந்த காலம் நழுவிச் சென்ற அந்த நாட்களில் எந்தப் பாட்டும் பாட வில்லை. பகற் பொழுதுப் பூக்கள் உதிர்வுடன் போகுல்* மரங்களின் பூமி விரிந்த போது பூக்கள் மலர்ச்சிக்கு இறுதிக் காலம் வருவ தென்று ? இந்த வசந்த காலத்தில் மல்லிகை விழித்தெழ வில்லையா ? தேன் அமுது உறிஞ்சித் தேனீக்கள் ரீங்கார […]
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா முல்லை முஸ்ரிபா என்ற தனித்துவக் கவிஞரின் இரண்டாவது தொகுதியாக அவாவுறும் நிலம் எனும் தொகுதி வெளிவந்திருக்கிறது. 2003 இல் தேசிய, மாகாண சாகித்திய விருதுகளைப் பெற்ற இவரது முதல் கவிதை நூல் இருத்தலுக்கான அழைப்பு என்பதாகும். அதனைத் தொடந்து தனது இரண்டாவது நூலை 103 பக்கங்களில் வெள்ளாப்பு வெளியினூடாக வெளிக் கொணர்ந்திருக்கின்றார். மொழித்துறை விரிவுரையாளராக, முதன்மை ஆசிரியராக, இலங்கை வானொலியின் ஒலிபரப்பாளராக தனது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் இக்கவிஞரின் முதல் தொகுதியிலுள்ள மீதம் […]
நானொன்றும் இசை நிபுணன் இல்லை. எனக்கு சில ராகங்களின் பெயர்கள் தெரியும் அதுவும் பாப்புலரான சினிமாப்பாட்டுகளை வைத்து, பத்திரிக்கை செய்திகளின் அடிப் படையில், அவற்றைத் தெரிந்து வைத்திருக்கிறேன். ‘ மன்னவன் வந்தானடி ‘ கல்யாணி என்று படித்ததாக ஞாபகம். பூபாளம் உதயத்திற்கும், முகாரி சோகத்திற்குமான ராகங் கள் என்கிற அளவில் இருக்கிறது எனது இசை அறிவு. சின்ன வயதில் ஒற்றைத் தந்தியில் கொட்டாங்கச்சி பிடிலில் ‘ அன்று ஊமைப் பெண்ணல்லோ ‘ வைத் திரும்பத்திரும்ப வாசித்த ரோட்டோர […]
கணையாழியின் ஆரம்பகால வாசகர்கள், அதாவது இன்னமும் ஜீவித்திருப்பவர்கள், அந்த இதழ் திரும்பவும் வரப்போகிறது என்கிற செய்தியைக் கேட்டவுடன், மிகவும் மகிழ்ந்தார்கள். அப்படி மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் கணையாழி லேசில் எங்கள் பகுதியில் கிடைக்கவில்லை. கவிதாவுக்கு தொலைபேசியபோது, மைலாப்பூரில் மட்டும் போடுவதாகச் சொன்னார்கள். நல்லவேளை, அந்தப் பகுதியில் எனக்கு பணி இருந்ததால், ஓரிரண்டு மாதங்கள் வாங்கிக் கொண்டேன். அப்புறம் புறநகர் போருரில் தடயமே இல்லை. அதுசரி, இங்கு கணையாழியைக் கொண்டு வர ஆஞ்சநேயரா வருவார்! சாதாரண சாணித்தாள் […]
பரோட்டா சூரி, இந்தப் படத்திற்கு கதை எழுதியிருக்க வேண்டும். அவர்தானே அத்தனை பரோட்டாக்களையும், ஒரே வாய்க்குள் தள்ளுபவர். அப்படித்தான் இருக்கிறது படம். முடிச்சுகளாகப் போட்டு, அவிழ்க்க முடியாமல் திணறும் இயக்குனர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் வியாசனுக்கு முடிச்சுகளே இல்லை அவிழ்க்க. எல்லாம் அம்மன் கோயில் வேப்ப மரம்போல, ஏராளமான கயிறுகள். நேர்ந்து கொண்டு கட்டிய கயிறுகள் என்ன ஆயிற்று என்று எந்த பக்தையும் மரத்தைப் போய் பார்ப்பதில்லை. அப்படியே இயக்குனரும். சாலையில் பங்க் வைத்து, செருப்பு தைக்கும் தனசேகர் […]
போங்கடா பன்னாடை பசங்களா! ராட்சசனுமில்ல பூதமுமில்லை. அநேகமாக எந்த ராசாவாவது படையெடுத்துவரலாம். கேட்டால் கோவணத்தை அவிழ்த்துகொடுங்க அதைத் தவிர கொடுக்கறதுக்கு என்ன வைத்திருக்கிறோம். நமக்கு கோழி, பன்றி உயிரு மயிரு எல்லாமொன்றுதான் 17 சின்னான்தான் முதன்முதலாகப் பார்த்தான். காலை தகப்பன் தொப்புளான் ஆண்டைவீட்டுக்குப் புறப்பட்டு போனதும் மண்னாங்கட்டி செய்த முதல் வேலை கவிழ்த்துவைத்திருந்த கூடையைத் திறந்துவிட்டது. கோழிகள் குப்பைமேட்டை நோக்கி ஓடின. குடிசையின் பின்புறம் பூசனிக்கொடிகளைத் தாண்டிச் சென்று பன்றிகள் அடைத்துவைத்திருந்த பட்டியைத் திறந்துவிட்டுத் துரத்தினாள். இனி […]
கசட தபர வெளிவந்த காலத்தில் பெரிதும் பேசப்பட்ட இதழ் பிரக்ஞை. ஆனால் அதில் தொடர்புடையவர்கள் இன்று வயதாகி கண்டங்களில் பல மூலைகளில் இருக்கிறார்கள். சமீபத்தில் அகிலனின் மருமகனும் கவிஞருமான பாரவியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘ பிரக்ஞை இதழ் ஏதும் கைவசம் இருக்குமா? நான் அதைப் பார்த்ததே இல்லை ‘ என்றேன். ‘ இப்பதான் வீடு சுத்தம் பண்ணும்போது எல்லாத்தையும் எடுத்து காஞ்சிபுரம் அனுப்பி விட்டேன் ‘ என்றார் ரவி. ஆதிகாலத்தில் காஞ்சிபுரத்தில் இலக்கிய ஆர்வம் மிக்க […]
இணைப்பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி புதுக்கோட்டை தமிழ் இலக்கியப் பரப்பில் இளங்கோவடிகள் காப்பிய வடிவத்தையும், காப்பிய மரபுகளையும் தொடங்கி வைக்கும் முதன்மையாளராக விளங்குகின்றனார். காப்பியம் என்ற நீண்ட வடிவத்தின் இழுவைத் தன்மை குன்றாமல், சுவைத்திறன் மாறாமல் படைத்துச் செல்லும் திறன் மிக்க காப்பியப் படைப்பாளராகவும் இளங்கோவடிகள் விளங்குகின்றார். தன் காப்பியத்தை ஒரு தழுவலாகவும், வேறுமொழி இலக்கியச் சாயல் உள்ளதாகவோ அவர் படைத்துக்காட்டாமல் சுயம்புத் தன்மை மிக்கதாக தன் படைப்பினை உருவாக்கியிருப்பது கண்டுகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இலக்கிய வகைகளை முதன் […]