நம்பிக்கை !

This entry is part 11 of 16 in the series 6 மே 2018

  என் முன்னால் கிடக்கும் பரப்பு சிறியதாகவே இருக்கிறது பின்னால் திரும்பிப் பார்க்கையில் நான் நடந்து வந்த பாதையில் முட்கள் அப்படியே இருக்கின்றன என் அழுகையொலி எங்கோ கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது என்னைப் பிரிந்து போனவர்களின் காலடிச் சுவடுகள் தெளிவாகத் தெரிகின்றன என் இழப்புகள் இன்னும் மக்கிப்போகவில்லை என் முன்னாலுள்ள ஒளி எல்லைக்கு அப்பால் இருண்மையின் இழைப்பின்னல்கள் வலுவாக இருக்குமோ ? — அதை மறந்து என் கோப்பையில் நம்பிக்கையை மட்டும் நிரப்பிக்கொண்டிருக்கிறேன் !

சமையலும் பெண்களும்

This entry is part 12 of 16 in the series 6 மே 2018

மீனாள் தேவராஜன்   கோடை விடுமுறையைப் பயனுள்ளதாகக் கழிப்பது எப்படி என்று நடிகர் வழங்கிய அறிவுரை சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அவர் ட்விட்டரில் தெரிவித்து என்னவென்றால் “ அன்புள்ள மாணவர்களே, குழந்தைகளே! கோடை வெயிலாக இருந்தாலும் உங்கள் விடுமுறையை மகிழ்ச்சியாகக்கொண்டாடவும், விளையாடி முடித்தபிறகு நிறைய தண்ணீர் குடிக்கவும். மாணவிகள் தங்கள் அம்மாக்களுக்குச் சமையலறையில் உதவுங்கள். கூடவே, சமையலையும் கற்றுக்கொள்ளுங்கள். மாணவர்கள், தங்களுடைய அப்பாவின் அலுவலகத்திற்குச் சென்று, அவர் குடும்பத்திற்காக எப்படியெல்லாம் பாடுபடுகிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள். என்பதுதான். இதற்குப் […]

தொடுவானம் 220. அதிர்ச்சி

This entry is part 13 of 16 in the series 6 மே 2018

          பன்னீர் சொன்னது என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. அது என்ன அதிர்ச்சியாக இருக்கும் என்ற எண்ணத்துடன் அவர்கள் கொண்டுவந்திருந்த வாடகை ஊர்தியில் அமர்ந்தோம். கோவிந்தசாமி முன் இருக்கையில் அமர்ந்துகொண்டான். நாங்கள் மூவரும் பின் இருக்கையில்.           நலம் விசாரித்தான் பன்னீர். அவன் தமிழகம் வந்ததில்லை. நான் திருப்பத்தூர் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.ஆனால் கோவிந்தசாமியோ மெளனம் காத்தான். அவனுக்கு திருப்பத்தூர் தெரியும்.           […]

கண்ணகி தேசம்

This entry is part 14 of 16 in the series 6 மே 2018

குமரன் சில விஷயங்களை கண்ணோடு கண் பார்த்து பேச நமக்கு சற்று கூச்சமாக இருக்கும். சில விஷயங்களை எழுதுவதற்குக் கூட வெட்கமாக இருக்கும். இன்னும் சில விஷயங்கள் எழுதுவதற்கு வெட்கக்கேடாக கூட இருக்கும்…இது மூன்றாவது வகை. சமீபத்தில் தன் பெயருக்கும் பார்க்கும் வேலைக்கும் சற்றும் பொருந்தாத இழிசெயல் புரிந்த ஆசிரியயை பற்றி பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் “திறனாய்வு” போல் செய்திகள் வந்த வண்ணம் உள்ளதே…அந்த அசிங்கம் பற்றிய ஆனால் அசுத்தமில்லாத கட்டுரை இது. “தர்மம்” என்ற சொல் கேலிக்குரியதாகி […]

மருத்துவக் கட்டுரை – மூளைக் கட்டி

This entry is part 15 of 16 in the series 6 மே 2018

 உடல் உறுப்புகளில் மூளை மிகவும் முக்கியமானது. நாம் சிந்திப்பதற்கும், செயல்படுவதற்கும் மூளை அவசியமாகிறது.மூலையில் ஏற்படும் பல்வேறு நோய்களில் மூளைக் கட்டிகளும் அடங்கும். கட்டி என்றதும் நமக்கு புற்று நோய் பயம் உண்டாவது இயல்பே!              புற்று நோய்களில் மூளையில் தோன்றும் கட்டிகள் 10 சதவிகிதம் எனலாம். மூளைக் கட்டிகளில் பாதி உடலின் வேறு பகுதியிலுள்ள புற்று நோய்  இரத்தம் மூலமாக மூளைக்குப் பரவியது எனவும் கூறலாம். தனியாக மூளையில் தோன்றும் […]

மேடம் மெடானா !

This entry is part 16 of 16 in the series 6 மே 2018

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++   பாடகி மெடானாவின் பாதத்தில் தொழுது கிடக்கும் பாலர்களே ! சிந்திக்கும் என் மனது ! உமது அனுதின உணவு சமைப்ப தெப்படி ? வீட்டு வாடகைப் பணம் கொடுக்க வேலை செய்வது யார் ? மேலே வானி லிருந்து காசு மழை பெய்கிறதா ?   வெள்ளிக் கிழமை இரவு   பெட்டி படுக்கை எரிந்து போகுது ! ஞாயிற்றுக் கிழமை […]