அன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களே, வணக்கம். தமிழ் இலக்கிய உலகில் அமைதியாக தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிற அன்பு நண்பர் எழுத்தாளர் பாவண்ணன். பாட்டையா பாரதிமணி சொல்வதுபோல், பாவண்ணன் “ எத்தனையோ எழுத்தாளர்களின் சப்பரத்தைத் தன் தோளில் சுமந்தவர். நிறைகுடம். இலக்கியத்தின் ‘ஒளிவட்டம்’ தன்மேல் விழாமல் கவனமாக இருப்பவர்.” சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழியாக்கம், கவிதை, புத்தக விமர்சனம் என்று எல்லா தளங்களிலும் அயராமல் இயங்கி வருபவர் பாவண்ணன். மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர். […]
ரா.ராஜசேகர் மழைக்கூடு நெய்து தரும் மனசு மழலைக்கு மட்டும்தான் நரைநுரைத்தப் பின்னும் நம் நடைப்பயணத்தில் கோத்திருந்த இருகைகளிலும் குழந்தை விரல்கள் நம் சிறுமழைக்கூட்டைத் திறந்தால் ஏக்கம் ததும்ப நம்மைப் பார்க்கிறது இப்பெருவுலகம் மழைக்கூடு நெய்தலென்பது கடவுளைப் படைப்பதினும் கடினம் போனால் போகிறது நிறைய நிரந்தர மழைக்கூடுகள் நெய்து தருவோம் நிலமாந்தர்க்கெல்லாம் புவியெங்கும் மழலை வழிய மனக்கூடையெங்கும் நிறமழியாப் பூக்கள் நிரம்பும் நிலநாசியில் தேங்கும் நிஜவாசம்
அம்மா ! உன் எழுபது வயது பிள்ளையைப் பார்த்தாயா ? என் இரண்டு கைகளையும் உன் இடது கையால் பிடித்துக்கொண்டு என் இரண்டு கால்களையும் உன் ஒரு காலால் அமுக்கிக்கொண்டு அழகான வெண்கலப் பாலாடையில் பாலில் மிதக்கும் விளக்கெண்ணையைப் ” முழுங்கு … முழுங்கு …’ என அதட்டிப் புகட்டினாயே அதே பிள்ளை இப்போது தாடி – மீசை நரைத்துத் தலைமுடி கொட்டி முதுமையின் கரடுமுரடான பாதையில் போய்க்கொண்டிருக்கிறேன் என் இளமைக்கால வறுமையை அடித்து விரட்டினேன் […]
சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா +++++++++++++ சூரியத் தீக்கோளம் சுற்றிக் கட்டிய சிலந்தி வலைப் பின்னலில் சிக்கிச் செக்கு போல் சுற்றுபவை ஒன்பது கோள்கள் ! எல்லைக் கோடு தாண்டி, இப்புறமோ அப்புறமோ நகன்று, தப்பிக்க முடியாது ! திசைமாற இயலாது ! வேகம் சிறிதும் மாற முடியாது ! சாகாது, எல்லை மீறாது ! மோதாது ஒன்றோ டொன்று ! சூரிய எரிவாயு தீர்ந்து போய் சூனிய மானால் […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி இதுவரை; நீலகிரியின் மலையின மக்களில் படகர்களின் வாழ்வியல் மாற்றங்களைச் சொல்லோவியமாக்கிய நூல் இது. ஜோகி தன் பெரியப்பன் மகன் ரங்கனுடனும் மற்ற சிறுவர்களுடனும் மலைச் சாரலில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.அப்போது அங்கு வந்த மாமன் மகள் பாருவின் வெள்ளிக் காப்பு கழன்று விழுகிறது.அதனை எடுத்த ரங்கன் மேற்கொண்ட ஒத்தைக்குச் செல்லும் முயற்சி கைகூடாது காவற் பரணில் படுக்கிறான்.அங்கு வந்த அவனின் சிற்றப்பன் பரிவோடு அவனை அழைத்துச் சென்று உணவூட்டி உறங்க வைக்கிறான். காப்பைக் கீழே கண்டெடுத்ததாக […]
சி.வேல்முருகன், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி திருச்சிராப்பள்ளி -02 முன்னுரை இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக புலம்பெயர்வு என்பது நடந்து கொண்டிருக்கிறது. புலம்பெயர்வு என்பது ஆதிகாலம் தொட்டு இன்று வரைக்கும் நிகழ்கால நிகழ்வாகவே இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது. இவ்வாறான புலம்பெயர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதனால் மனித இனம் பல்வேறு மாற்றங்களைப் பெற்றுவருகின்றது. ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் இன்று உலகமெங்கும் பரந்து வாழந்து வருகின்றனர். அவ்வாறு புலம் பெயர்ந்தவர்கள் சமூக அரசியல்,பண்பாட்டு சூழ்நிலைகளால் பொpதும் பாதிக்கப்பட்டு […]
சு. இராமகோபால் நகராத மேகம் நகைக்காத பல் புகாத புகை பொருந்தாத நேரம் ஆடாத இலை அணைக்காத பிறவி கூடாத கூந்தல் கத்தாத ஆந்தை அருகாத பூ அப்பாத மை வருந்தாத நா வருடாத கை விரியாத சிறகு வியாசனின் சிந்தை வரிக்காத தேசம் வசந்தாவின் மோகம் அசையாத நாணல் சிலிர்க்காத ஆணவம் வசையாத தலை வாய்க்காத எல்லை முளைக்காத விதை முதிராத காய் மலைக்காத மன்னன் மருளாத எறும்பு அலையாத பட்டம் அடுக்காத சட்டம் […]
தமிழ் உதயா, லண்டன் துருவங்களைப் பிணைக்கும் கடல் மேல் மடித்து வைக்கிறேன் மிதக்கும் சிறகுகளை, ஏற்கனவே அவை பறந்திருக்கின்றன, கைகளை பின்னியபடி இரவு என்னோடு உறங்கிக் கிடந்தது, சதுப்பு நிலத்தில் சில ஆட்காட்டி முட்டைகள் தவழ எத்தனிக்கும் கணங்களை நிர்வாணமாய் நிகழ்த்திக் கொண்டிருந்தன, மௌனத்தின் நாக்குகளால் சொற்களை பிசைகிறது வார்த்தைகளின் விரல்கள், பால் நிறத்து மணலில் பொய்த்துக் கரையும் வரைபடத்தில் நண்டுக் குஞ்சுகளுக்கு வாழ்க்கைக்கான பாதை வரையவில்லை பகலின் முகமெங்கும் வடியும் இரவின் நிழலைப் புசிக்கிறான் கடற்சூரியன் ஆக புலர்தல் பூக்களுக்கு தொடக்கமா முடிவா? […]
பன்னீர் அங்கர் பீர் கொண்டுவரச் சொன்னான். இளம் சீன மங்கை அதைக்கொண்டுவந்து மூடியைத் திறந்து எங்கள் இருவருக்கும் பரிமாறினாள்.ஐஸ் குளிரில் இருந்த பீர் வெந்துபோன மனதுக்கு இதமாக இருந்தது.கோவிந்தசாமி என்னை நோட்டமிட்டான்.பன்னீர் சொல்லியிருப்பானா என்ற சந்தேகம் அவனுக்கு. நான் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. பன்னீர் எங்களை திசை திருப்பும் வகையில் மருத்துவத் தேர்வு பற்றி பேசினான். என்ன பாடங்கள்கள் தேர்வில் கேட்பார்கள் என்றான். […]
தொண்டை வலி, கரகரப்பு, தொண்டை வீக்கம் போன்ற அனைத்தையுமே தொண்டைப் புண் என்று பொதுவாகக் கூறலாம். உண்மையில் இது தொண்டைப் பகுதியில் உண்டாகும் அழற்சியாகும். சாதாரணமாக இது வைரஸ் தொற்றால் உண்டாவது. பெரும்பாலும் சாதாரண சளியை உண்டுபண்ணும் வைரஸ் கிருமியால்தான் அதிகமான தொண்டைப் புண் உண்டாகிறது. சில வேளைகளில் பேக்டீரியா கிருமிகளாலும் இது உண்டாகலாம். தொண்டைப் புண் சிறு பிள்ளைகளுக்கு எளிதில் ஏற்படும் ஒரு நோயாகும். ஆனால் […]