வேடங்களில் மூடி வைத்த மேடை நாடகமாய் ஓடிக்கொண்டிருக்கிறது மண்ணில் மனித வாழ்க்கை ! உறவின் மடியில் உல்லாசத்தில் இருப்பவன் போதிக்கிறான் துறவின் தூய்மை பற்றி ! பாலுக்காகக் கூட பிள்ளைக்கு அவிழ்க்காத மார்பை காசுக்காக எவனுக்கோ காட்டும் காரிகை பேசுகிறாள் கற்பைப் பற்றி ! ஆடுமுதல் அனைத்து ஜந்துவையும் அடித்துத் தின்பவன்தான் அடியாராம், அவன் போதனைதான் சுத்த சைவமாம் ! சம்பளம் ரூபாய் மாசம் பத்து, சம்பாதித்தது மா சம்பத்து, மற்றவரையும் மனச்சாட்சியையும் ஏய்க்கும் அவன்தான் […]
கயிறு காதலில் பம்பரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதன் உடலெங்கும் அழுந்தத் தழுவி தன்னன்பை அந்தரங்கமாய் சொன்னது. எதுவும் சொல்லாமல் இயல்பாய் இருந்த பம்பரத்தின் கயிற்றை இழுத்துப் பிரித்த போது ஒற்றைக் காலில் பம்பரம் சுற்றிச் சுற்றி வந்தது துணையைத் தேடி. இத்து இத்து கயிறு செத்துப் போகும் நிலையிலும் முனை மழுங்கிய பம்பரம் முனைந்தது தன் காதல் சுற்றை இயன்றவரை. களித்தனர் தோழர்கள் கயிற்றோடு பம்பரம் களித்தக் காதல் விளையாட்டில். குமரி எஸ். நீலகண்டன்
அனைத்து BLOG மற்றும் NGO நண்பர்களுக்கு வணக்கம். நாங்கள் l3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளத்தை வெளி இட்டு உள்ளோம் . இந்த இணைய தளத்தின் மூலம் வானிலை அறிக்கை ,விவசாயிகளின் பேட்டிகள் , ஒட்டன்சத்திரம் சந்தையின் தினசரி காய்கறிகள், பழ வகைகள் விலை விபரத்தினையும் அதனை நடத்தும் கடை முகவர்களின் தொடர்பு முகவரியினையும் அளிக்கிறது. மேலும் வாழ்நாள் கல்வியில் விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் தகவல்களை அளிக்க மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகளை […]
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36 பிடிஎஃப் கோப்பு
தமிழ் சிற்றிதழ்களில் தற்போது புத்தக விமர்சனமும், புத்தக கவனங்களும் அருகி விட்ட நிலையே காணப்படுகிறது. எல்லாமே கோல்கேட் மற்றும் ஹமாம் நலங்கு மாவு விளம்பரம் மாதிரி ஆகி விட்டது.மற்றொரு வகையில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற முகங்களின் புத்தகங்களே கவனம் பெறுகின்றன. தற்போதைய இலக்கிய சூழல் இடைநிலை பத்திரிகைகள் மற்றும் வெகுஜன பத்திரிகைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் குப்பை மேடுகள் உருவாவதும் அதை கொண்டாடுவதும் தவிர்க்க முடியாததாகி விட்டன. எல்லாமே ஒரு விளையாட்டு தான் என்பது […]
ஸ்ரீ வெங்கட் சாமிநானின் விஜய பாஸ்கரனுக்கு அஞ்சலி ஒரு சம்பிரதாயமான அஞ்சலியாக இல்லாமல் வழக்கமான வெ.சா. முத்திரையுடன் வெளிவந்திருப்பது மிகவும் நிறைவாக இருந்தது. நண்பர் விஜய பாஸ்கரனை ஏலி, ஏலி, லாமா ஸபக்தானி என்று, மாற்றுக் கருத்தின்றி அனவராலும் கொண்டாடப்படும் தோழர் ஜீவா அவர்கள் பாடவைத்ததற்கு என்ன காரணம்? தமிழ் நாட்டில் ஈ.வே.ரா. தூவிய துவேஷம் என்கிற விஷ விதை வர்ஜா வர்ஜமின்றி எல்லார் தோட்டங்களிலும் பார்த்தீனியம் மாதிரி துளிர்த்து வளர்ந்துவிட்டதுதான் இதற்குக் காரணமா யிருக்க வேண்டும். […]
ரியாத்தில், தமிழ்க் கலை மனமகிழ் மன்றம் (TAFAREG – தஃபர்ரஜ் ) அமைப்பினர் நடத்திய கோடை விழா – தஃபர்ரஜ்ஜுடன் ஒருநாள் என்னும் பெயரில் – கடந்த 13 மே 2011 அன்று நதா, முஹம்மதியா மகிழகங்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் கலந்து சிறப்பித்த இவ்விழாவில் நீச்சல் விளையாட்டுகள், (தமிழகத் தேர்தல் முடிவுகளையொட்டி) அலசல் அரங்கம், ஊமை விளையாட்டு, சொல்லுங்கள் – வெல்லுங்கள், குறுக்கெழுத்துப் புதிர்கள், பொது அறிவு வினாடி வினா, […]
யுத்த காண்டம் – நான்காம் பகுதி “ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணம் ராமசரிதமானஸ் என மூன்று பிரதிகளை வாசிக்கிறோம். சமுதாயம் அல்லது மனித குலம் என்று நோக்கும் போது ஒரு அரசன் அல்லது அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டிய முறை அவன் ஒரு முன் உதாரணமாகப் […]