டாக்டர்……என் அம்மாவுக்கு என்னாச்சு? இன்னியோட நாலு நாட்கள் போயாச்சு…இன்னும் .ட்ரிப்ஸ்ல தான் இருக்காங்க..எம்.ஆர்.ஐ. ரிசுல்ட் கூட வந்தாச்சு…எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு டாக்டர்….ப்ளீஸ் டாக்டர் எங்கம்மாவை காப்பாத்திடுங்கோ என்று கண்களில் கண்ணீர் ததும்ப சொல்கிறான் பிரசாத். அவங்களுக்கு டைப் 2 டயாபடிஸ் , இரத்தக் கொதிப்பு, தைராயிட் எல்லாமே இருக்கறதா டெஸ்ட்ல தெரியுது. இப்போ ப்ளட் கிளாட் வேற…சுகர் லெவல் கொஞ்சம் கன்ட்ரோல் வந்து இப்போ தரும் இந்த ட்ரீட்மென்ட்ல அவங்களுக்கு குணமாகலைன்னா ஒரு அறுவை சிகிச்சை […]
“எலெ சொள்ள மாடா என்னத்தலெ சொல்லுதது? ஓம் மாடு ஏ(ம்) வயப்பக்கம் தாம்லெ வாய வைய்க்கிது. பெரவு ஏங்கிட்ட எதும் சொல்லப்டாதுலெ. ஓம் மாடே கசாப்புக்கு போட்டுரலாமா? இல்ல ஓம் கால ஒடிச்சுடலாமா?” அவர் உறுமி விட்டு சென்றார். சொள்ளமாடனுக்கு என்னண்ணே வெளங்கலெ. அவன் மாடு பின்னெ வாலப் புடிக்காத கொரயாத்தான் மேச்சுகிட்டு வாரான். “மெனக்கிட்டு வந்து ஏசிட்டு போராரே. ஏ(ன்) வாய்ல என்னத்த வெச்சிருந்த? ஒண்ணுமே கேக்கல?” தாத்தனின் பேரன் சீறினான். “எல ஓஞ்சோலியப்பாருல” […]
இந்த வெய்யில் காலம் வந்துவிட்டால் எங்கிருந்தோ வந்துவிடுகின்றன மைனாக்கள். கூடவே சில குயில்களும் , அவ்வப்போது இன்னெதென்று அறியாத பறவைகளும் வந்து அமர்ந்து கொள்கின்றன. என் வீட்டின் பின்னால் நந்தினி பால் கழகத்தின் ( நம்ம ஊர் ஆவின் போல இங்கே பெங்களூரில் நந்தினி ) பெரிய காலி இடம் இருக்கிறது. பயன்படுத்தாது விட்டதால் செடி கொடிகளும் கொஞ்சம் பெரிய மரங்களுமாக சின்னக் காடு போலவே தோற்றமளிக்கும். அதற்குப்பிறகு ஒரு சர்ச்சும் அதனுள்ளேயும் பிரார்த்திக்க வருபவர்களுக்கென […]
படைப்பாளிக்கு ஆழ்ந்த ரசனை மிக முக்கியம். ஆழ்ந்த ரசனை என்பது மற்ற சாதாரணர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதும், அவர்களால் எண்ணிப் பார்க்க முடியாததாயும் இருத்தல் வேண்டும். அப்படியானால்தான் அந்த ரசனை எழுத்தாக, படைப்பாக வெளிப்படும்போது தனித்துவமாக மிளிர்ந்து நிற்கும். இந்தச் சமுதாயத்தின் அவலங்களை ஆழமாக உள்வாங்கி, மனதுக்குள்ளேயே பொருமி, அழுது, தாள முடியாத வேதனையோடு அவற்றை வெளிப்படுத்தும்போது, அது சத்தியமான படைப்பாகத் தானே முன்வந்து நிற்கும். அப்படிப்பட்டதொரு அருமையான படைப்புதான் மே 2013 உயிர்மை இதழில் […]
அக்ரஹாரத்தில் கழுதை – வெ.சா – < கோவிந்த் கருப் > வெங்கட் சாமிநாதன் – இவரது எழுத்துக்கள், பின்னோட்டம் பற்றி இங்கு பலரும் எழுதும் போது ஒருவிதமான சாதி ரீதியான தாக்குதலைப் பார்க்கிறேன். ஆனால், தமிழகத்தில் இரண்டு பேர் தான் ஒரு துறையில் உச்ச நிலையை தொட்டு பின் அதே துறை பற்றி விமர்சனங்களையும் தரமாக வைக்கின்றனர். ஒருவர் – ஜெயகாந்தன். மற்றொருவர் – வெங்கட் சாமிநாதன். நூறு வருட இந்திய சினிமாவின் நூறு தலைசிறந்த […]
வேடிக்கையாகத் தான் இருக்கிறது. இன்று செல்லப்பா காலமாகி பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, அவரைப் பற்றி நினைப்பவர்கள் – நினைப்பவர்கள் இருக்க மாட்டார்களா என்ன? எட்டு கோடி தமிழரில் அவரிடம் பழகிய அவருக்கு பத்திருபது வயது இளையவர்கள், அந்த தலைமுறையில் அவர் பெயரைக் கேள்விப்பட்டவர்கள் சிலராவது இருக்க மாட்டார்களா என்ன?, இருப்பார்கள் தான் – அவர்கள் முதலில் அவரை விமர்சகராகத் தான் நினைவு கூறுவார்கள். அவர் சுதந்திரப் போராட்ட உணர்வு கொண்டதும் சிறை சென்றதும் கடைசி வரை […]
ஜயலக்ஷ்மி ”திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்” என்ற இனிமையான பாடலை நாம் நிறையவே கேட்டிருக்கிறோம். ஆம் திருப்புகழைப் பாடினால் வாய் மணக்கும் கேட்டாலோ மனத்தை உருக்கும். காரணம் அவற் றின் சந்தம். பாடுவதற்குக் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் கூட அவற்றின் தாளமும் ஓசையும் மிகவும் இனிமை யானவை. முருகனின் புகழ் பாடும் இப் பாடல்களை இயற்றியவர் அருணகிரிநாதர். இன்றைக்குச் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அருணகிரி நாதர் ஒரு நிலையில் வாழ்க்கையில் வெறுப்புற்றுத் […]
டாக்டர் ஜி.ஜான்சன் நான் தொடர் வண்டியில் ஏறிய போது து இரவு பத்து மணி. அது மாயவரம் சந்திப்பு. முன்பதிவு செய்யாததால் விரைவாக நுழைந்து சன்னலோரம் காலியாக இருந்த இடத்தைப் பிடித்துக்கொண்டேன். அந்த இடம் கிடைத்தது அதிசயம்தான்.நல்ல வேளையாக அதில் அமர்ந்து வந்தவர் மாயவரத்தில் இறங்கினார். அது ரேணிகுண்டா துரித பிரயாணி தொடர் வண்டி ( fast passenger ). . நான் வேலூர் சென்று கொண்டிருந்தேன். மருத்துவக் கல்லூரி விடுமுறை முடிந்து திரும்பி […]
டாக்டர் ஜி. ஜான்சன் கொழுப்பு என்று தமிழில் சொல்வது பல பொருள்களைக் குறிக்கிறது. உணவில் கொழுப்பு நிறைந்தது என்று சிலவற்றைக் கூறுகிறோம். அதிக கொழுப்பு உட்கொண்டால் உடல் பருமன் கூடிவிடும் என்கிறோம். ஒருவன் வீண் வம்புக்குப் போனாலும் அவனுக்கு கொழுப்பு அதிகம் என்கிறோம். இதை ஆங்கிலத்தில் FATS என்கிறோம். ஆனால் மருத்துவத்தில் பொதுவாக கொழுப்புச் சத்து அதிகம் என்று கூறினாலும், கொழுப்பை பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவற்றுக்கு தமிழில் இன்னும் பொருத்தமான கலைச் சொற்கள் […]
சமீபத்தில் பெய்த கோடை மழையில் (பருவமழை என்பது இல்லாமல் போய் விட்டது. குறைந்த காற்றழுத்த மண்டலங்களாலேயே மழை என்றாகி விட்டது) கொங்கு மண்டலத்தின் நகரங்களில் மழை அளவு அதிகமாக இருந்தது. நகரங்களைச் சுற்றியுள்ள பல ஆயிரம் அடிகளுக்கு ஆழ்குழாய்கள் போட்ட விவசாயம் செய்து வரும் நகரங்களைச் சுற்றியுள்ள விவசாயப் பகுதிகளில் மழை அளவு குறைவாக இருந்தது. நிலத்தடி நீர் அதிகம் இருக்கும் பகுதிகளில் மழையின் அளவும் அதிகமாக இருக்கிறது. நகரப் பகுதிகளில் மழை […]