டாக்டர் ஜி. ஜான்சன் படிப்பவை யாவும் காற்றோடு கலந்துவிடக் கூடாது. அவை மனதின் ஆழத்தில் பதிய வேண்டும். அப்படி பதியவைக்க நாட்குறிப்பு உதவியது.அதில் பதிவு செய்துவிட்டால் அதை வாழ் நாள் முழுதுமே மறக்க இயலாது. அதோடு நான் ஓர் எழுத்தாளனாக, பேச்சாளனாக வர விரும்பியதால் இத்தகையக் குறிப்புகள் பின்னாட்களில் பயன்படும் என்றும் எண்ணினேன். அவற்றில் சில குறிப்புகள். இவையும் அல்லி நாவலில்தான் எழுதப்பட்டிருந்தன. ” இன்பத்திற்கு துணையாக யாராலும் முடியும்.- ஈ இரும்பாலும் முடியும். நம் உடம்பில் […]
வில்லவன் கோதை அடுத்தநாள் அதிகாலை ஆவிபறக்கும் காபியோடு எழுப்பினார்கள் விடுதிப்பணியாளர்கள். படுக்கையிலிருந்து எழுந்த நாங்கள் காலைக் கடன்களை ஒருவாறு முடித்து மிதமான உணவு உட்கொண்டோம். தயாராக நின்றிருந்த இரண்டு கார்களும் பயணத்தை துவக்கின. இடையில் குறுக்கிட்ட ஏற்காடு பேரூந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. சேலத்துக்கும் இரு வேறு திசைகளுக்கும் அடுத்தடுத்து பேரூந்துகள் இயக்கப்படுவதாக சொன்னார்கள். பகோடா முனைக்கு முன்னாலேயே இரண்டு புகழ்வாய்ந்த கிருத்துவ உறைவிட பள்ளிகளைக்காண முடிந்தன. எவரும் எளிதில் நெருங்கமுடியாத கம்பீரம். 1894 ல் துவக்கப்பெற்ற […]
அத்தியாயம்…8 புதியமாதவி, மும்பை திராவிட இயக்கம் பெண்ணிய தளத்தில் ஏற்படுத்திய சமூகப்புரட்சி மிகவும் போற்றுதலுக்குரியது. அந்தப் புள்ளியில் பெரியார் ஒருவர் மட்டுமே இந்த நூற்றாண்டின் தன்னிகறற்ற போராளியாக திகழ்கிறார். இன்றைய நிலை என்ன பெரியாரை நான் வாசித்ததில்லை என்று சொல்லிக்கொண்ட தமிழகத்து பெண்ணியவாதிகள் கூட தற்போதெல்லாம் பெரியாரைப் பற்றி பேசிக்கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது, என்றாலும் ஏதோ பேஷன் மாதிரி ஊறுகாய் மாதிரி தொட்டுக்கொள்கிறார்களோ என்ற சந்தேகம் என்போன்றவர்களுக்கு ஏற்படுகிறது. ஏனேனில், பெரியார் பெண் பிள்ளைபெறும் எந்திரமல்ல என்று […]
ஜோதிர்லதா கிரிஜா 4. சேதுரத்தினம் அவனை வியப்புடன் பார்த்தான். ‘என்ன பேசப் போகிறான் இந்த ராமரத்தினம்? ஒருவேளை கடன் கிடன் கேட்கப்போகிறானோ? சேச்சே! அப்படி இருக்காது..’ ”சொல்லுங்க. எதுவாயிருந்தாலும் தயங்காம கேளுங்க, ராமரத்தினம்!” ”நான் ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சிருக்கேன்.” “அட! ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சுட்டா ஓட்ட்ல்லே செர்வெரா இருக்கீங்க? ஏன்? வேற வேலை கிடைக்கல்லையா?” “ஓட்டல்ல வேலை பண்றது கேவலம்னு நினைக்கிறீங்களா, சார்?” “சேச்சே! நான் அப்படி நினைப்பேனா? படிக்கிறவங்க யாரும் ஓட்டல்ல வேலை […]
ஜோதிர்லதா கிரிஜா நான் பெரியவர்களுக்கான எழுத்தாளராக அறிமுகம் ஆன புதிதில் எழுத்தாளர் தொடர்புள்ள கூட்டங்களுக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கும் மிகுந்த ஆர்வத்துடன் போவதை வழக்கமாய்க் கொள்ளலானேன். ஆனால் சில கூட்டங்களுக்குப் போனதன் பின் அலுத்துப்போகத் தொடங்கிவிட்டது. காரணம் உருப்படியாக இலக்கியம் பற்றி எதுவும் பேசாமல் பேச்சாளர்கள் – பெரும்பாலும் எழுத்தாளர்கள் – தங்களுக்குப் பிடிக்காத எழுத்தாளர்களை மட்டந்தட்டிப் பேசுவதையோ அல்லது கேலிசெய்வதையோ, தாக்குவதையோ பொறாமையின் விளைவாகச் செய்துகொண்டிருந்ததுதான். அப்போதே எழுத்தாளர்களில் “கோஷ்டிகள்” இருந்தன. (இப்போது அவை இன்னும் அதிக […]
சிறகு இரவிச்சந்திரன். இயக்கம் : ஸ்ரிநாத் கதை : ராஜமௌலி இசை : சித்தார்த் விபின் ஒளிப்பதிவு : சக்தி – ரிச்சர்ட் எம்.நாதன் நடிப்பு :சந்தானம், ஆஷ்னா, மிர்ச்சி செந்தில், வி.டி.வி.கணேஷ், சுப்பு பஞ்சு, ஜான் விஜய். சந்தானத்தின் நாயகப் பிரவேசம். பாதிதான் பரவசம். அளவு சாப்பாடாக, நிறைவில்லாத “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் “ ஒரு நாயகனுக்குரிய அழகுடனும் அசத்தலான உடைகளுடனும் சந்தானம் திரையில் பார்க்க லயிப்பு. அவர் வாயைத் திறந்தால், உண்மையான நாயகனைத் தேடும் […]
முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 5 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 17, 18, 19, 20. இணைக்கப்பட்டுள்ளன.
ஜெயானந்தன். இந்திய நாட்டின் ” புது அவதாரமாக ” மோடியை ஏற்று, இந்திய மக்களில் 30% மக்கள், வாக்களித்து, தங்களின் வாழ்க்கையை அர்பணித்துள்ளனர். மீதம் 70% மக்கள், ஒருவித குழப்பதோடும்,பயத்தோடும் , எட்டி நின்று வேடிக்கை பார்க்கின்றனர். நமது புதிய பிரதமர், இந்த 70% சதவிகத மக்க்ளின், நம்பிக்கை சின்னமாக் மாற வேண்டும், அதற்கு , காவி மனது , மாற வேண்டும். டீக்கடைக்காரர்எனற முத்திரை, அவருக்கு, இந்த தேர்தலில், காங்கிரஸ் கொடுத்த கொடை.இது, இவருக்கு, கோடான்கோடி […]
சுப்ரபாரதிமணியன் “எத்தனை முறை உற்றுப்பார்த்தாலும் மறுபக்கம் காட்டுவதில்லை கண்ணாடி ” கவிஞர் – கவிதையின் பின் மறைந்துள்ளதையும் மறுபக்கத்தையும் காட்டாமல் நேரடியாக அவரின் முகத்தையும், அபிப்பிராயங்களையும் இக்கவிதை போல் இத்தொகுப்பில் காட்டுகிறார். அதை அவரின் பாணியாகவும் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். காக்கிக் சட்டைக்குள் மனிதாபிமானம் இருக்கிறது.ஈர நெஞ்சம் இருக்கிறது. காக்கிக் சட்டைப்பணியில், பயிற்சியில் மனதைத் தொட்ட அனுபவங்கள் கவிதைகளாய் மிளிர்கிறது. அம்மாவின் பெயர் பொறித்த தட்டு போன்ற கவிதைகளில் இது பட்டென வெளிப்படுகிறது. இன்னும் நெகிழ்ச்சியாகவும் சொல்லியிருக்கலாம் […]
-வே.சபாநாயகம். தமிழ் மொழியின் பெருமைக்கு வளம் சேர்த்ததில் மொழி பெயர்ப்புகளுக்கு முக்கிய பங்குண்டு. ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை பேரலை போல வந்து தமிழர்களை திணற அடித்து வருகின்றன. 1940 களில் சரத்சந்திரர், பக்கிம் சந்திரர் போன்றோரின வங்காள மொழி நாவல்கள், 50களில் வி.ஸ.சாண்டேகரின் மராட்டி மொழி நாவல்கள், தொடரும் மலையாள மொழி ஆக்கங்களின் மொழி பெயர்ப்புகள் என காலம்தோறும் வந்து தமிழை மேலும் இனிமையாக்கி வருகின்றன. இன்றைய காலகட்டதில் தொடர்ச்சியாய் குறிஞ்சிவேலன் போன்றோரின் சிறப்பான மொழி பெயர்ப்புகளால் […]