விடையை ஏற்கெனவே எழுதிவிட்டேன். http://puthu.thinnai.com/?p=38590 ஒருவர் வேலை செய்யாமலிருக்க காங்கிரஸ் தரும் 72000 ரூபாயின் விளைவுகள் //நாங்க ஊருக்கு போகணும் சார், ராகுல்காந்தி எங்களை மாதிரி ஏழைங்களுக்கெல்லாம் 72000 ரூபாய் தர்ரேன்னு சொல்லியிருக்கார் சார். அவருக்கு ஓட்டு போட ஊருக்கு போகணும் சார் என்று மக்கள் சொல்லும் வீடியோக்கள் பரவலாக இருக்கின்றன. இதனை பார்த்து ராகுல் காந்தியும், காங்கிரஸ் காரர்களும், திமுகவினரும் ஸ்டாலினும், தமிழ்நாட்டின் மிகச்சிறந்த அறிவுஜீவிகளும் பரவச நிலையை எய்துகிறார்கள். அதிமுக கூட்டணியினர் மனம் வெம்புகிறார்கள். […]
ஆ. ச .க வீட்டிலிருந்து புறப்படுகையில் அன்னை எச்சரிப்பு ; தெருவில் நடக்கையில் நண்பன் ; சாலை கடக்கையில் முகம் தெரியாத பெரியவர் ; யாவரும் உரைக்கின்றார் பார்த்துப் போ புன்னகையோடு பேருந்தில் ஏறி அமர்ந்த கொஞ்ச நேரத்தில் குலுங்கி நின்றது வண்டி ஒரு விபத்தின் பரபரப்போடு . கண்ணில் வழியும் வேர்வையைத் துடைத்து மடித்த அலுமினிய ஊன்றுகோலைத் தடவுகையில் மீண்டும் புன்னகை — நீங்களும் பார்த்துப் போகக் கூடாதா
சந்திரயான் -2 விண்சிமிழ்சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா++++++++++++++++++++ “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.” டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) [ஜனவரி 26, […]
கௌசல்யா ரங்கநாதன் —— -1- சுந்தரத்தை நான் கடைசியாய் பார்த்தது அவன் புதிதாக கட்டி குடியேறிய வீட்டின் “புது மனை புகு விழாவின்” போதுதான். அவன் இளைத்து, கறுத்திருந்தான்..முகத்தில் சோர்வும், ஒரு இனம் புரியாத கவலையுடனும் அவன் இருப்பதுபோல் எனக்கு தோன்றியது.. பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருட இடை வேளைக்கு பிறகு, ஒரு நாள், அவன் என்னை தேடி வந்தான், அதாவது நானே அவனை பார்க்க போக வேண்டுமென நினைத்துக்கொண்டிருக்கையில். […]
மஞ்சுளா பச்சை இளநீர் காய்களை விற்பவன் போல் தேடியலைகிறாய் உன் மனவோட்டங்களில் எந்தத் தடையுமின்றி பதியும் வார்த்தைகளை அவ்வப்போது தெருவோரங்களில் வீசி எறிகிறாய் புழுதி படரும் உன் சுவாசங்களை அறிந்து விலகியே நிற்கிறது சாலையோரத்து மரங்கள் பறவைக் குஞ்சுகள் கரகரத்து பாடுகின்றன பிறிதொரு நாள்… என் வாசலில் நின்றழும் பெண்ணிடமிருந்து வருகிறது உன் கண்களாலும் உடலாலும் உறிஞ்சப்பட்ட காமம்
கட்டிலின் இடது விளிம்பில் அவள் வலது விளிம்பில் அவன் முதுகு நோக்கி முதுகு உரையாடலெல்லாம் உலோகத் துண்டோடுதான் அன்று அவன் சொன்ன சேதி ‘இன்று நம் திருமண நாள்’ அவளின் பதில் ‘என்றுமே திரும்பாத நாள்’ நடுவில் கிடந்த குழந்தை கேட்டது ‘என்னெ என்ன செய்யப் போறீங்க’ அமீதாம்மாள்
பெரும்பான்மை வெற்றி பெற்று மீண்டும் இந்தியப் பிரதமராகப் பதவி்யேற்கப் போகும் திரு.மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாய் மேற்கண்ட புகைப்படத்தை நானே தயாரித்து என் டைம்-லைனில் பதிவேற்றியுள்ளேன். அதைக் குறித்து ஒட்டியும் வெட்டியும் சில கருத்துகள் வந்தவண்ணமுள்ளன. அது நல்லதுதான். எந்த மதத்தினரையும் புண்படுத்துவது யாருடைய நோக்கமாகவும் இருக்கலாகாது. எந்தவொரு மதத்தின் நம்பிக்கைகள், நடைமுறைகள் மற்றவர்களை அடக்கியாள முயலும்போது அதை எதிர்ப்பதும், கேள்வி கேட்பதும் அறிவுசால் விஷயமே. அதைக்கூட நிதானமாக, சம்பந்தப்பட்ட எல்லோரையும் உள்ளடக்கிய அளவில், நாகரீகமாகச் செய்ய […]