ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

This entry is part 11 of 19 in the series 28 மே 2017

1. அபாண்டம் நம் மீது வீசப்படும் அபாண்டம் ஆயிரம் கால்கள் முளைத்த விஷப் பூச்சியாய் ஊர்ந்து நம் மனத்தை அரிக்கத் தொடங்குகிறது கல்வி நிலையத்தில் படிப்பவர்கள் மீதும் அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் மீதும் இன்னும் மிக எளிதாக வீட்டில் வயதானவர்கள் மீதும் அது வீசப்படுகிறது அதை வீசுபவர்கள் எப்போதும் சந்தேக இயல்பினராய் பொறுப்பற்றவர்களாய் இருக்கிறார்கள் நேரடியாகவும் புறங்கூறுதல் மூலமும் அது எந்தத் தடையுமின்றி நம்மைத் தைக்கிறது இந்தக் கசப்பை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் நாம் துன்புறுகிறோம் அபாண்டம் […]

வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய “சீதை பேசுகிறேன்” எனும் நூல் இப்போது விற்பனையில்.

This entry is part 12 of 19 in the series 28 மே 2017

நூல் பற்றி முன்னால் பேராசிரியர் H. பாலசுப்ரமணியம் அவர்கள் தனது அணிந்துரையில் கூறியது… “பஞ்சவடியில் ராவணன் கவர்ந்து செல்லும் கட்டம் தொடங்கி, வானரப் படையுடன் இலங்கை வந்த ராம-லட்சுமணர்கள் ராவணவதம் முடித்து சீதையை மீட்பது வரையிலான கதையை கவிஞர்கள் கதையோட்டமாக வருணித்துச் செல்கிறார்களே தவிர, அந்தப் பனிரென்டு மாத இடைவெளியில் சீதைக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி விசேஷமாக அக்கறை கொள்ளவில்லை. குரூரமான ராட்சசிகள் மத்தியில், இடையிடையே ராவணனின் பசப்பு வார்த்தைகளையும் அச்சுறுத்தல்களையும் தாங்கிக் கொண்டு, தான் […]

திருப்பூர் தொழில் துறை இடி விழுவதைத் தவிர்க்க வேண்டும் “ திருப்பூர் மாவட்டச் சிறப்பிதழ்” வெளியீட்டு விழா

This entry is part 13 of 19 in the series 28 மே 2017

” நிலவளம் “ மாத இதழ் தமிழக அரசின் கூட்டுறவுச்சங்கங்களின் மாத இதழாக 50 ஆண்டுகளாக வெளிவரும் பத்திரிக்கையின் “ திருப்பூர் மாவட்டச் சிறப்பிதழ்” – ஆக மே இதழ் வெளிவந்துள்ளது. . அதில் திருப்பூரைச்சார்ந்த இலக்கிய வாதிகள், கல்வியாளர்கள், பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள் உட்பட பலரின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. அந்த “ திருப்பூர் மாவட்டச் சிறப்பிதழ்” வெளியீட்டு விழா வியாழன் மாலை 6 மணி :சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் […]

நெட்ட நெடுமரமாய் நின்றார்   மது மனிதர்கள்!

This entry is part 14 of 19 in the series 28 மே 2017

இராமானுஜம் மேகநாதன் மது குடித்த மனிதனை மது குடித்துக் கொண்டிருக்கிறது. மாதர் மதுக்கடை இடிக்கின்றார் மகாளியாய் விஸ்வரூபம் எடுக்கின்றார். மது குடித்த முறுக்கு மீசை ஆண் நெட்ட நெடுமறமாய் நிற்கின்றான். நேரிய ஆண்கள். ஆஹா! இதுவல்லவோ உன்னத சமுதாயம்! மது ஒன்றும்  மக்கள் பிரச்சினையல்லவே. மது மாதர் பிரச்சினை! மகளிர் பிரச்சினை! மது குடிக்க உரிமை ஆணுக்கு மது உடைக்க உரிமை பெண்ணுக்கு. மற்ற எல்லோரும் எதற்கு! மயிர் பிடுங்குவதற்கா? மட்டற்ற அரசாங்கம் மாண்புமிகு அமைச்சர்கள் மதிமிகு  […]

65 மில்லியன் ஆண்டுக்கு முன்பு மெக்சிகோ சிக்குலுப் மீது முரண்கோள் தாக்கியது 10 பில்லியன் ஹிரோஷிமா அணு ஆயுத குண்டுகள் வெடிப்புக்கு ஒப்பாகும்

This entry is part 15 of 19 in the series 28 மே 2017

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     https://youtu.be/0S2_QCJkwb0 https://youtu.be/vuet3t9geXo https://youtu.be/sEFjuNkY0yw   ++++++++++++++++++     வக்கிரக் கோள் வழி தவறி வையத்தில் மோதிச் சுக்கு நூறாகி, சுற்றுவீதி மாறி பிரளயம் நேரும், தட்ப வெப்பம்  மாறும்  ! பரிதிக்கு அப்பால் நகன்று பூமி சூடு தணியும் ! டைனசார்ஸ் மரித்தன நீண்ட இருட்டடிப்புக் குளிர்ச்சியில் ! புதுவித உயிரினம் தோன்றும்  முதல் மானிடம் உதிக்கும் டைனசார்ஸ் மீண்டும் தோன்றவில்லை ! […]

“மும்பை கரிகாலன்”

This entry is part 16 of 19 in the series 28 மே 2017

======================================ருத்ரா இ பரமசிவன் சூப்பர் ஸ்டார் அவர்களே ! மும்பை கரிகாலனாய் வாள் ஏந்த புறப்பட்டீர்கள் . சிவாஜியின் குதிரையும் வாளும் உங்களிடம் உண்டு. எங்களுக்கு பூரிப்பு தான். சிங்க மராட்டியன் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம் என்றானே பாரதி! சிவாஜியின் வீரம் எங்கள் புற நானூறு! ஆனால் அவன் குதிரையின் குளம்படிகள் கிளப்பும் காவிப்புழுதியை வெறும் குழப்பம் என்று நாங்கள் தள்ளுபடி செய்கிறோம். காவிரித்து பூவிரித்து வர காவிரிக்கு காடு திருத்த கரை உயர்த்த […]

எழுந்திருங்க தாத்தா….. ப்ளீஸ்……

This entry is part 17 of 19 in the series 28 மே 2017

சோம.அழகு “நுரையீரல் புற்று….நான்காம் நிலை…..இன்னும் ஆறு மாசம்தான் சார்….” – கனத்த இதயத்தோடு மருத்துவர் தாத்தாவை நோக்கி வரும் பாசக்கயிற்றின் வேகத்தைக் கணித்துக் கூறினார். அப்பாவும் கோமதிநாயகம் சித்தப்பாவும் உள்ளுக்குள் சுக்குநூறாக நொறுங்க ஆரம்பிக்கும் சத்தத்தை உணர்ந்தவராய் , “ஒரு மருந்து இருக்கு. அத குடுத்தா அப்பாவுக்கு ஒத்துக்கிடுமான்னு பரிசோதனை செய்யணும். அதோட முடிவுகள் வர பத்து நாள் ஆகும். அது மட்டும் நல்ல விதமா வந்துச்சுன்னா அந்த மருந்த வச்சு இன்னும் ரெண்டு வருஷத்துக்காவது எமன […]

சீதா கவிதைகள்

This entry is part 18 of 19 in the series 28 மே 2017

சீதா முதலிலிருந்து ஆரம்பிப்பவர்கள் ******************************************** மறுபடி முதலிலிருந்து ஆரம்பிப்பவர்கள் சுனாமிக்கு பிறகான மழை வெள்ளத்திலிருந்தும் முதலிலிருந்து ஆரம்பித்தவர்கள்தானே சளைக்காமல் வரிசையில் நிற்பார்கள் அரசு நியாய விலை கடையில் அரிசி சர்க்கரைக்கும், அரசு மருத்துவமனையில் ஓபி சீட்டுக்கும், சிகிச்சைக்கு முன்பான பரிசோதனை கூடத்திற்கு வெளியேயும், அரசு அலுவலகங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்கும் சாதி மற்றும் வருமான சான்றிதழ்களுக்கும் நீண்ட வரிசையில் நின்று பழகியவர்கள்தானே முதலீட்டை, சேமிப்பை, பொறுமையை கரைத்த சில வாரத்திற்குப் பிறகாவது முதலிலிருந்து ஆரம்பிக்க விடலாமே மாற்றத்திற்காகதானேயென்று […]

சிங்கப்பூர் கவிஞர் க.து.மு. இக்பாலின் கவிதை மொழி

This entry is part 19 of 19 in the series 28 மே 2017

முனைவர் எச்.முகம்மது சலீம் துணைத் தலைவர் ஜாமியா அற நிறுவனம் சிங்கப்பூர் சிங்கப்பூர் தமிழ் கவிதைகளை உலகக் கவிதைகளுடன் வைத்து வாசிக்கக்கூடிய தரமான கவிதை படைப்புக்களை உருவாக்கிய சமகாலக் கவிஞர்களுள் க.து.மு. இக்பால் தனிக்கவனம் பெறுகிறார். இக்பாலின் கவிதைகள் இதுவரை எட்டு தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. இதய மலர்கள் (1975), அன்னை (சிறுவர்பாடல்கள்) (1984) , முகவரிகள் (1989), வைரக் கற்கள் (சிறுவர் பாடல்கள்) (1995) கனவுகள் வேண்டும் (2000), காகித வாசம் (2003), வானானவர்கள் மண்ணில் இருக்கிறார்கள் […]