செக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்

This entry is part 33 of 43 in the series 29 மே 2011

[எச்சரிக்கை: குடும்பம், வேலை சார்ந்த மும்முரங்களில் நான் ஓடிக்கொண்டிருந்தாலும், என் மீதுள்ள அன்பினால் திண்ணையில் வாராவாரம் எழுதுங்களேன் என்று தொடர்ந்து சொல்லிவந்த திண்ணை ஆசிரியர் குழுவுக்கும், அதன் பலனை அனுபவிக்கப்போகும் வாசகர்களுக்கும் என் அனுதாபங்கள்.!] அமெரிக்கக் குடியரசு கட்சியின் தீவிர பழமைவாதக் கருத்துகளின் பெண் முகம் சாரா பாலின். நம்மூர் பதின்ம வயது இளைஞர்களின் பேச்சுவழக்கில் சொல்வதென்றால், நாற்பதுகளிலும் ஹாட்டாக தோற்றமளிக்கும் இருக்கும் மாமி. இப்படிப்பட்டகருத்துகளைச் சொல்பவர்களையும், சாரா உதிர்க்கிற அபத்தமான வாதங்களைக் கடுமையாக எதிர்ப்பவர்களையும், சாராவும் […]

தாமரை இலையும் சின்னக்குத்தூசியும்

This entry is part 32 of 43 in the series 29 மே 2011

எண்பதுகளின் இறுதியில் அலுவலக வேலையாக மாதத்துக்கு ஒருமுறையாவது அல்லது இரண்டுமுறையாவது கர்நாடகத்திலிருந்து சென்னைக்கு வந்துவிடுவேன். சென்னையில் எங்கள் தலைமை அலுவலகம் இருந்தது. பெரிய அளவில் கேபிள் சேமிப்புக்கிடங்கும் சென்னையில்தான் இருந்தது. நாங்கள் வேலை செய்யும் இடத்துக்கு கேபிள் உருளைகளை சென்னையிலிருந்துதான் சரக்குந்துகளில் ஏற்றி அனுப்புவார்கள். தமிழ் தெரிந்தவன் என்கிற காரணத்தை முன்னிட்டு இந்தப் பயணவாய்ப்பு எனக்குத் தரப்படும். அலுவலக வேலையை முடித்தபிறகு கிடைக்கிற குறைந்தபட்ச கால அவாகாசத்தை நண்பர்களைப் பார்த்து உரையாடவும் புத்தகக்கடைகளுக்குச் செல்லவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்னும் […]

பனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்

This entry is part 31 of 43 in the series 29 மே 2011

ஹெச்.ஜி.ரசூல்   இலைகளும் வேரும் வள்ளியுமாய் விசித்திரத்தை தன் உடலில் பெருக்கிய கொடி ஒவ்வொரு மூச்சின் போதும் காற்றில் மிதந்து மெளனம் காட்டியது. தொற்றிக் கொண்டதொரு பெரண்டையின் தீண்டலில் கசிந்த உதிரம் சிறுபூவாய்விரிந்தது. கமுகந்தைகள் பற்றிப் படரும் நல்லமிளகு கொடிகள் துயரத்தின் வாசத்தை காற்றில் மிதக்கவிடுகின்றன. அதிகாலைப் பனியில் உதிர்ந்த ஒரு கொத்து கறுப்பு பூக்கள் பூமியின் இதழ்வருடி வலிபட முனங்குகின்றன. பனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம் மெல்லத் தெரியத் துவங்கி ஒரு கனவாக உதிர்ந்திருந்தது. […]

பண்பாட்டு உரையாடல்

This entry is part 30 of 43 in the series 29 மே 2011

ஹெச்.ஜி.ரசூல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற குமரிமாவட்டக் கிளையினர் நடத்திய 33வது நாவா முகாம் இலக்கியப் பண்பாட்டு உரையாடல் மே21,22 தேதிகளில் முட்டம் கடற்கரைரிட்ரீட் மையத்தில் நடைபெற்றது. முதல்நாள் துவக்கவிழா அமர்வு முனைவர் சிறீகுமார் தலைமையில் நடைபெற்றது.இரண்டாம் அமர்வு சம கால கதை எழுத்து என்ற பொருள் பற்றியது.கதையாளரும் மலையாளமொழிபெயர்ப்பு படைப்பாளியுமான ஏ.எம்.சாலன் நிகழ்வை நெறிப்படுத்தினார்.   நாவலாசிரியர் ஜாகிர் ராஜா குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரையில் எனும் தலைப்பில் விரிவானதொரு ஆய்வுரையை வழங்கினார்.பேரா.நட.சிவகுமார் தமிழில் கால்வினோவும் பிறரும் […]

பாதைகளை விழுங்கும் குழி

This entry is part 29 of 43 in the series 29 மே 2011

* ஒரு கணம் மகிழ்வெனத் திகழ்ந்ததோர் ஒளியென் கனவுகளைப் பிளக்கும்   தெளிவற்ற பாதையின் குழியொன்று நகைப்புடன் எனதிந்த பாதையை விழுங்கி விடக்கூடும்   பாதங்களின் தீண்டல் பயணிக்கவேண்டிய பாதைகளை நிர்ணயித்துக் கொண்டிருக்க   இந்த இருளென்னை மிகவும் அழுத்துகிறது * ***   கலாசுரன்  

காஷ்மீர் பையன்

This entry is part 28 of 43 in the series 29 மே 2011

அமீரின் தாத்தா தாடிக்கு வயது எழுபத்தைந்து என்பார் அப்பா. அண்டை வீட்டுத் தாத்தாவின் தாடியலைகளில் மிதப்பது பிடிக்கும் காஷ்மீர் பையனுக்கு. உள்ளே அழுத்தும் துயரங்களைத் தேக்கி வைத்திருக்கும் பள்ளத் தாக்குகளான முகச் சுருக்கங்களுக் கிடையே வெள்ளையருவியாய்த் தொங்கும் தாடி.   தாத்தா தன் பேரன் அமீருடன் விளையாடும் போது சிரிப்பார். காஷ்மீர் பையனோ பரமபத விளையாட்டில் பாம்புகளிடையே எப்போதும் உருண்டு கொண்டிருப்பான். “எனக்கும் ஒரு நாள் தாடி வளருமா?” “பரமபத விளையாட்டில் காய்கள் பிழைப்பது பகடைக் காய்கள் […]

போராட்டத்திலிறங்கும் இடம்பெயர்ந்த மக்கள்

This entry is part 27 of 43 in the series 29 மே 2011

இன்று மே மாதம் 16ம் திகதி. நான் கொழும்பில் இருக்கிறேன். வீதி முழுதும் புத்தரின் பிறந்த நாளைக் கொண்டாடும் மகிழ்ச்சி எதிரொலிக்கிறது. எனது கைத்தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. எனக்கு மட்டுமல்ல. அது நாட்டிலிருக்கும் எல்லோருக்கும் அனுப்பப்பட்டவோர் தகவல்.   ‘நோயற்ற சுக வாழ்வோடு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்’ எனும் வாழ்த்துச் செய்தி அது. அவ் வாழ்த்தினை நினைவிலிருத்திக் கொண்டு நான் இப்பொழுது கிழக்குக்குச் செல்கிறேன்.   இப்பொழுது நான் திருகோணமலை – சேருநுவர வீதியிலிருக்கும் கிளிவெட்டி […]

ஏதுமற்றுக் கரைதல்

This entry is part 26 of 43 in the series 29 மே 2011

நான் நடக்கின்ற பாதை   எரியமுடியாத இருளினடிக்கட்டைகளால் கிழிபட்டிருந்தது. ஒவ்வொரு காயக்கிடங்கிலும் செந்நிறமுறிஞ்சிய நினைவுகளை விழுங்கிய எறும்புகள் பரபரத்தோடி விழுகின்றன. பாதையின் முடிவற்ற வரிகளைஒவ்வொருவரிடமும் காவியபடி ஊர்ந்துவருகின்றன சிவந்த எறும்புகள். உலரமுடியா அழுகையினீரம்இருட்கட்டைகளிலிருந்து சிந்துகிறது. ஓலச்சுவர்களின் வெறுமையில் நாக்கறுந்த பல்லியொன்றினசைவு எதுவுமற்றுக் கரைந்துபோகிறது. நினைவுப்பாலையாகிவிட்ட இந்த நிலத்திலிருந்து காயக்கிடங்கில் எறும்புகள் மொய்த்த என்னைப்பார்க்கிறேன்.இருட்கட்டைகளினீரம் எங்கும்டரஏதுமற்றுக் கரைந்துபோகிறேன்.   –ந.மயூரரூபன்  

“தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு

This entry is part 25 of 43 in the series 29 மே 2011

அருண் ஜெயிட்லி எதிர்க்கட்சித் தலைவர், ராஜ்ய சபை   “மத மற்றும் இலக்கைக் குறிவைத்த வன்முறைத் தடுப்பு (நீதி மற்றும் இழப்பீடுக்கான அணுகல்) மசோதா 2011” பொதுத் தளத்தில் இடப்பட்டுள்ளது. இந்த மசோதா மத சம்பந்தமான வன்முறைகளைத் தடுப்பதற்காகவும், அவ்வாறு வன்முறையில் ஈடுபடுவோர்களுக்குத் தண்டனை அளிப்பதற்காகவும் தயாரிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சட்டமாக்கப்படவுள்ள மசோதாவின் நோக்கம் அவ்வாறு சொல்லப்பட்டாலும், அதன் உண்மையான நோக்கம் அதற்கு நேர்மாறானதாக இருக்கிறது. இந்த மசோதாவானது சட்டமாக்கப்பட்டால், அரசின் அதிகாரவரம்பில் தலையிடுவதாகவும், ஒன்றிணைந்த அரசியல் சமுதாயத்தைத் […]

இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்

This entry is part 24 of 43 in the series 29 மே 2011

பொதுவாக இந்திய பொருளாதார வளர்ச்சி பற்றிய கட்டுரைகள் இந்தத் துறையைப் பற்றிய நல்முகத்தைப் பற்றி பேசுகின்றன. இல்லையேல், கட்டமைப்பு வளர்ச்சிப முன்னேற்றத்தில் உள்ள தடைகளைப் பற்றி அலசுகின்றன. ஆனால், இந்திய தேர்தல் காலப் பிரச்னைகள் ஏனோ நல்முகம் மற்றும் இப்பண்டிதர்கள் சொல்லும் கட்டமைப்பு வளர்ச்சி முட்டுக்கட்டைகள் பற்றி அதிகம் கவலைப் படுவதாகத் தெரிவதில்லை. எப்படி தேர்தலுக்கு ஒரு அணுகுமுறை, மற்ற சமயங்களில் இன்னொரு அணுகுமுறை சாத்தியம்? அலசப்படுவதோ ஒரே அம்சம் – இந்தியப் பொருளாதாரம். என் பார்வையில் […]