தொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்

This entry is part 23 of 43 in the series 29 மே 2011

சென்னை போன்ற பெரு நகரங்களில் சைக்கிள் ஓட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதை காண முடிகிறது. கடைநிலை ஊழியர்களுக்கான வாகனம் சைக்கிள் என்றாகிவிட்டது. தபால்காரர், கொத்து வேலை செய்பவர், பிளம்பர் போன்றோர்கள் தான் சைக்கிள் உபயோகிக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தினர் சைக்கிள் உபயோகிப்பதை நிறுத்தி நீண்ட நாட்களாகிவிட்டது. என் நண்பன் ஒருவன் பள்ளிக்கூடம் போகும் போது வாங்கிய சைக்கிளை இன்றும் சென்னையில் வைத்திருக்கிறான். சரஸ்வதி பூஜை அன்றைக்கு மட்டும் துடைத்து பொட்டு வைப்பான். வாகனம் என்பது அவரவர்  வசதியை(convenient) […]

ஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1 மே 20, 2011

This entry is part 22 of 43 in the series 29 மே 2011

“அமெரிக்காவின் விண்வெளிக்கப்பல் “சாலஞ்சர்” எரிந்து போய் அனைத்து விண்வெளி விமானிகள் [1986 ஜனவரி 28] மாண்டதும், அடுத்துச் செர்நோபில் அணுமின் நிலையம் [1986 ஏப்ரல் 26] வெடித்ததும் நமக்கு அதிர்ச்சியைக் கொடுத்து, நாகரீக முன்னேற்றத்தின் பெயரால் எழுந்துள்ள நிறுவகங்களின் கோர விளவுகளை மனித இனம் இன்னமும் புரியாமலே இருப்பதை நினைவூட்டுகின்றன.”   மிக்கேயில் கார்பசாவ் [Mikhail Gorbachev (Aug 18, 1986)]   அணுமின்சக்தி நிலையங்களில் விபத்துக்கள் நேரும் என்று எதிர்பார்ப்பதிலும், அதனால் ஏற்படும் தீங்கு விளவுகளைக் […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)

This entry is part 20 of 43 in the series 29 மே 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎழுதும் இந்த எழுத்தாணியை    எடுக்காது செம்மறி ஆடு ! பிரிக்கும் இடைவெளிப் பேதங்கள் இல்லை நமக்குள்ளே ! காதலின் புனித பீடம் இது ! கண்களைக் கசக்கி காதலைக் காதலோடு நோக்கு மீண்டும் !   ++++++++++++   “வாசலில் யாரெனக் கேட்டாய்” “உனது அன்புத் தாசன்” என்றேன் நான் ! “எதற்கு வந்தாய் ?” என்று நீ கேட்டாய். “வழிபட்டு உன் […]

பிறப்பிடம்

This entry is part 19 of 43 in the series 29 மே 2011

வெள்ளையர் வேட்டி சேலையிலும் நம்மவர் ஜீன்சிலுமாய் நீறு மணமும் மக்களின் வேண்டுதல்களும் கமழும் நம் ஊர் கோவில்..   ஊர்களின் பெயர்களும் விற்கப்படும் பொருட்களும் ஒலித்துக்கொண்டிருக்கும் முகம் தெரியா மக்கள் நிறை பேருந்து நிறுத்தம்..   அதிகபட்ச அலங்கோலத்தில் வீசப்பட்ட புத்தகங்கள், துவைத்த துவைக்காத துணிகளின் அணிவகுப்பு கொண்ட விடுதி அறை..   என்று எங்கும் பிறப்பெடுக்கின்றன என் கவிதைகள்.. என் கண்கள் நோக்கும் உன் கண்கள் பார்க்கும் போது மட்டும் மௌனமே தவழ்கிறது சுற்றிலும்.. பேச […]

வேரற்ற மரம்

This entry is part 18 of 43 in the series 29 மே 2011

சொல்லாமல் செல்வதால் பெருகும் வலியை உனது இருபின்மையால் உணர்கிறேன். நிழல் போல வருவதாய் நீ வாக்களித்திருந்த வரிகள் எனது நாட்குறிப்பின் பக்கங்களில் வரிகள் மட்டுமே அருகிருந்து சொற்களை அர்த்தப்படுத்துகின்றன. எனது வாழ்க்கை வனத்தில் இது நட்புதிர்காலம்… வெறுமை பூத்த கிளைகள் மட்டும் காற்றின் ஆலாபனைக்கு அசைந்தபடி அகத்தே மண்டிய நினைவின் புகையாய் அவ்வப்போது வியாபிக்கிறாய் என்னை நமது நட்புறவின் குருதியை நிறமற்ற நீராய் விழிகளினின்று உகுக்கும்படி புன்னகை ஒட்டிய உதடுகளுடன் கைகோர்த்தபடி புகைப்படங்களில் மட்டும் நீ வேரற்ற […]

வட்டத்தில் புள்ளி

This entry is part 17 of 43 in the series 29 மே 2011

வட்டத்தில் சுற்றி வரும் புள்ளி போல- நம் வாழ்க்கை, மேல் போகும் கீழிறங்கும்- அழியாதிருக்கும்! கீழிறிந்து மேல் போகும் சுழற்சியிலே, விடாது உந்தப் பட்டால் மேலே போகும்! அது, அங்கேயே நிலைத்திருக்கும் சூக்குமம் தெரிந்தால் கீழிறிரங்கும் புள்ளிகள் இல்லாமல் போகும்! பழையப் புள்ளி பழையனவா, அன்றி புதிதான புள்ளித் தொடரா? புரிய வேண்டும்! அதில் புதிதாக தோன்றும் புள்ளி புதியது அல்ல! இருந்தவையே சுழற்சியிலே புதியனவாகும்! இங்கு இல்லாது ஒன்று தோன்றுவதில்லை! இருப்பதையே அறியாது நாம் தெளிவதுமில்லை! […]

அடங்கிய எழுத்துக்கள்

This entry is part 16 of 43 in the series 29 மே 2011

உரத்துக் குரலிட்ட பேனாக்களை வானரங்கள் உடைத்து மையை உறிஞ்ச மௌனித்த செய்திகள். யாருமில்லாப் பொழுதில் அலைகள் சப்பித் துப்பிய சிப்பிகள் கீறிப்போயின கவிதையின் தொங்கல்கள். மிஞ்சிய காகிதத்தில் தொடக்கங்கள் தொங்கல்களோடு இணைய இனி ஒருக்காலும் வரப்போவதில்லை அந்தப் பேனாக்கள் செய்திகளிலும்கூட!!! ஹேமா(சுவிஸ்)  

ராக்கெட் கூரியர்

This entry is part 15 of 43 in the series 29 மே 2011

அன்றைக்கும் கையில் பேப்பர்களோடு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார் சுப்ரமணியன்.எஸ்.டி.டி.பூத்தைத் தேடிக்கண்டுபிடித்துப் பேசிவிட்டு எரிச்சலோடு”இதே பொழப்பாப் போச்சு” எத்தன தடவ தான் போன் பண்றது, சலித்துக்கொண்டே வந்தவர் செருப்பைக்கழட்டிப்போட்டு விட்டு , வீட்டுக்குள் வந்ததும் “சிவகாமி” என  மனைவியை அழைத்தவாறே அருகில் கிடந்த சேரில் அமர்ந்தார்.பின்னர் காலரைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு “ஸ்..அப்பாடா..என்னா வெய்யில்..” என்றவரை “ என்ன இன்னிக்காவது அந்தக் கூரியர்காரன் ஏதாவது சொன்னானா? “எனக்கேட்டவாறு தண்ணீர் டம்ப்ளருடன் வந்தவளிடம் “ கிழிச்சானுங்க, திரும்ப திரும்ப கிளிப்பிள்ள சொல்ற […]

ஒரு கொத்துப் புல்

This entry is part 14 of 43 in the series 29 மே 2011

பூமியிலிருந்து சுமார் 12500 அடி உயரத்தில்  யாத்ரீகர்களுக்காக    நவீன வசதிகளுடன்  அமைக்கப் பட்டிருந்த சிற்றுண்டி சாலையில்    நான்  சாப்பிட்டுக்  கொண்டிருந்தேன். என்னுடன் என் மனைவியும்    மகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்…… கேதார்நாத்தின் உச்சிக்கு வந்தடைய கௌரிகுண்ட்  என்ற    ஸ்தலத்திலிருந்து  14 கிலோ  மீட்டர் குட்டைக் குதிரையின் மேல்    ஆடி அல்லாடி இரண்டு மணி நேரம் சவாரி செய்தாக வேண்டியிருந்   தது. அந்த அனுபவ அவஸ்தையில்  உடம்பும் மனசும்   ஒரு வித்யா […]

யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்

This entry is part 13 of 43 in the series 29 மே 2011

விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்தம் முடிவுற்று இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமானது, கடந்த இரண்டு வருடங்கள் பூராகவும் இடைக்கிடையே அந்த யுத்த வெற்றி மனப்பான்மையை மக்கள் மத்தியிலும் இராணுவத்தினர் மத்தியிலும் நிலை நிறுத்துவதற்காக பல விதமான விழாக்களை ஏற்பாடு செய்திருக்கிறது. அதனடிப்படையில் இன்றும் கூட அது போன்ற விழாக்கள் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.   மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கெனில் இன்றைய தினமானது ‘பலகாரம், பாற்சோறு சாப்பிட்டு’க் கொண்டாடப்பட வேண்டிய தினமென்பது உண்மை. ஏனெனில் […]