சோழகக்கொண்டல் வாசல் வந்தமரும் சிட்டுகளுக்காக நான் வீசியெறியும் நெல்மணிகள் பயந்து எழுந்து பறந்து மறையும் குருவிகள் யாருக்கும் வேண்டாமல் வீதியில் கிடக்கின்றன எனது நெல்மணிகள் நதியின் நீரைக் கரைதழுவும் விளிம்பில் நூறு தவளைகள் தண்ணீர் பாம்புகள் என் காலடி பட்டதும் சட்டென கலைந்து அலையெழ மறைகிறது ஒரு காட்சி தனியரங்கில் வெறும்திரை பார்த்துநிற்கும் கண்கள் நிலம் பிளப்பதை கடல் கொதிப்பதை முன்னறிந்து நீங்குகின்றன பறவையும் விலங்கும் செவியும் பார்வையுமின்றி செத்துமடியும் பூச்சிகளென […]
–முடவன் குட்டி பூமிக்கு வந்த கடவுள் கணப்பொழுதேனும் தங்கி இளைப்பாற கடுகளவு இடம் தேடினான் மனித மனங்களில். வயோதிகன் கண்டான். பகை பழி குற்றம் கவலை முதியவன் மனதை அப்போதும் நிறைத்திருந்தன முள்மரங்கள். உட்புக முடியாது திகைத்தான் கடவுள். வாலிபன் தெரிந்தான். காமம் புதிர் குழப்பம் கலகம் அதீத உணர்ச்சிகள்… உலகைப் புரட்டும் லட்சியங்கள்… சதா ஆட்டுவிக்கும் அவன் மனதை. அங்கும் நுழைய முடியவில்லை கடவுளால். உலகை […]
வணக்கம், கீழ் கண்ட செய்தியை உங்கள் இணைய இதழில் வெளியிடும் படி கேட்டுக்கொள்கிறோம். நிழல் -பதியம் இணைந்து தமிழக்கத்தின் 32மாவட்டங்களில் குறும்பட ப் பயிற்சி பட்டறையை நடத்திஉள்ளது .இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் 4500பேர் பயனடைந்துள்ளனர் .இன்று திரைப்படம் ,தொலைக்காட்சி ,இதழ்களில் பணியாற்றி வருகின்றனர் .இம்முறை தொழில் முனைவு மேம்பாட்டு மையத்துடன் இணைந்து 38வது குறும்பட பயிற்சி பட்டறையை மே மாதம் 20முதல் 26 வரை சக்தி பாலிடெக்னிக் கல்லூரி, ஆப்பக்கூடல், பவானியில் நடத்த உள்ளது . […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பூமியில் இடி இடிக்குது மின்னல் அடிக்குது பேய்மழை பெய்யுது மின்னழுத்தம் தீமூட்டுது காடுகளில் ! மனிதரைத் தாக்கி எரிக்குது. விண்வெளியில் ஒளி மந்தைகளோ வெடிப்பு மீன்களோ, பரிதிக் கதிர்த் துகள்களோ அகிலக் கதிர்களாய் அடிக்குது. பூமியில் புரளும் இடிமுகில் மின்னழுத்தம் அளக்க அகிலக் கதிர்கள் உதவும். மின்னலைத் தூண்டி விடுமா அவை என்றறிய உதவலாம். +++++++++++++ அகிலக் கதிர்கள் இடிமுகில் மின்னழுத்தம் அளக்கப் பயன்பாடு 20 கி.மீடர் [12 மைல்] உயரத்தில் அகிலக் கதிர்ப் புரோட்டான் பூகோளச் சூழ்வெளி வாயுவைத் தாக்கிய பிறகு, 10 மில்லி செகண்டுகளில் உண்டாகும் […]
(வங்கதேசப் பத்திரிகை “டெய்லி ஸ்டார்” தலையங்கம்) மேலும் ஒருமுறை பங்களாதேஷின் இந்து சமூகம் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது. பொது தேர்தல்களின் முடிவில், தாகுர்காவ்ன், தினாஜ்புர், ரங்பூர், போக்ரா, லால்மோனிர்ஹட், ராஜ்ஷாஹி ஜெஸ்ஸூர், சிட்டகாங் போன்ற இடங்களில் நூற்றுக்கணக்கான இந்துக்கள் தங்கள் வீடுகளை விட்டு ஓடியிருக்கிறார்கள். பங்களாதேசின் விடுதலைப்போரின் போது எவ்வாறு பாகிஸ்தான் ராணுவமும் அதன் பங்காளி கூட்டாளிகளும் பங்களாதேசிய வாதத்தின் ஆதரவாளர்கள் மீது வன்கொடுமைகள் இழைத்தார்களோ அந்த வன்முறை, மற்றொருமுறை, இப்போது பங்களாதேசத்தின் இந்து மக்களின் மீதான அவலத்தின் […]
[குறிப்பு: இது தமிழிசை பற்றிய விரிவான கட்டுரை அல்ல. இந்தத் தமிழ்ப் புத்தாண்டிலிருந்து நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கம் தன்னுடைய நிகழ்ச்சிகளில் தமிழிசையை ஒரு நிரந்தர நிகழ்ச்சியாக வழங்க முடிவு செய்துள்ளது. மே 2, 2015 சனியன்று தமிழ்ப்புத்தாண்டு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், பார்வையாளர்களுக்குச் சுருக்கமாக தமிழிசையை அறிமுகப்படுத்தி சில நிமிடங்கள் மட்டும் நான் பேசியதன் எழுத்து வடிவம் இது. நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தில் தமிழிசை நிகழ்ச்சியை நடத்தவும், ஒருங்கிணைக்கவும், தொகுத்து வழங்கவும் வாய்ப்பளித்த அதன் நிர்வாகிகள், […]
நகரின் ஏதோ ஒரு கட்டிடத்துள் ஆளரவமில்லாக் கண்காட்சிக் கூடத்து மூலையை நீங்கி ஒரு நவீன ஓவியம் நிறைந்த நிதியை செல்வாக்கைப் பறைசாற்றும் விரிந்த வரவேற்பறைச் சுவரில் காத்திருப்போரினுள் அவர்களை அங்கே வரவழைத்த காரணம் தவிர வேறு எதுவும் விழித்திருக்காது கலாரசனையும் தான் தன் கலைக்கான ரசனையின் கவனிப்பின் விமர்சனத்தின் தொடுகை கலைஞனின் கூர் ஆசை அதைச் சென்றடையும் வரைபடம் அவன் தூரிகைக்கு அப்பால் காட்சிக் கூடத்திலிருந்து மாளிகைக்கு கலை பயணித்த வாகனம் வணிகம் காரணம் அதுவல்ல
யாமினி போன்ற முன் திட்டமிடாத, இயல்பாகவே வெடித்து சிதறும் வெடித்துச் சிதறும் சிருஷ்டி திறன் உள்ளவரால், நிகழ்ச்சியின் போதே தேவைக்குத் தக்கபடி பல்வேறு அபிநயங்களை முன் முயற்சியின்றி உருவாக்கி, ஒவ்வொரு அபிநயத்துக்கும் பலவித பாவங்களை கொடுக்க முடியும். திட்டமிடப்படாமல் அவருடைய கற்பனை ஊற்றிலிருந்து வெளிப்படுபவை இவை. பலநேரங்களில் ஜதிகளின் அமைப்பைச் சிக்கலானதாக (complexity) மாற்றுவார். மற்ற நர்த்தகிகள் ஜதி அமைப்புகளை தேர்ந்தெடுத்து அவற்றை மாற்றாமல் மூன்று கதிகளில் ஆடுகையில், யாமினிக்குத் தன் கலைத்திறன் மேலுள்ள நம்பிக்கை […]
மாதவன் ஸ்ரீரங்கம் “உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதா ? இதற்கு நம் சர்க்காரில் என்ன தண்டனை என்று உனக்குத்தெரியாதா ? இத்தனை அசால்ட்டாக நிற்கிறாயே ? பூமியின் பிரஜைகளைப்பற்றி கொடுக்கப்பட்ட பயிற்சிகளையெல்லாம் மறந்துவிட்டாயா? ” லூ எதுவும் பேசாமல் நின்றான். “எந்த இடத்தில் தொலைத்தாய் ?” “சென்னையில். கோயம்பேடு அருகே ஒரு பொது ஊர்தியில்”. அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள். பிறகு, “சரி கடவுளிடம் நான் பேசுகின்றேன். உன் இருப்பிடத்திற்கு செல்”. ——————————————- “இன்னா கவாலி ஆளியே காணம். வேலூரா” […]
சிவக்குமார் அசோகன் சிறுகதை ஒரு மொக்கையான கடத்தல் கதை சிவக்குமார் அசோகன் ஆர்.பி டிரேடர்ஸ் முதலாளியை ஏதாவது செய்ய வேண்டும். ஏதாவது என்றால் ஏதாவது இல்லை. அவர் கடைசி மூச்சு நிற்கும் வரை நினைவில் வைத்திருக்கும் படி, என் முகத்தை மறக்க முடியாத படி மூச்சு நிற்கும் வேளையில் நான் எதிரே போய் நின்றால் ‘நீயா?’ என்று கலவரத்துடன் தலையை எக்கிப் பார்த்துவிட்டு மண்டையை போட்டுவிட வேண்டும். அந்தளவிற்கு டர்ர்ர்ராக ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் […]