This entry is part 26 of 33 in the series 11 நவம்பர் 2012
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இங்கும் அங்கும் போகும் வீதிகளில் உலவிக் கானங்கள் பாடிக் கொண்டென் காலம் கடந்து போனது. பிரியும் தருணத்தில் யார் கையில் நானென் இதயத்தில் வாசித்த வீணையைத் தருவது ? பூக்களின் வண்ணத்தில் வைப்பேன் பாக்களின் பல்வேறு இசைத் தொனியை ! யாழிசைக் கருவியைப் பொன் முலாம் பூசிய முகில்களின் சந்திப்பில் போட்டு விடுவேன். பூமாலைகள் சூடி ஐக்கிய மாகிய பாமரர் […]
இந்தத் திருத்தலத்தில் இன்னொரு பெருமையும் உண்டு. எல்லா வைபவ விஷேஷங்களும் போக கார்த்திகை மாத முதல் சோமவாரம்தான் அது. அதை கொண்டாட நகரத்தார் பெருமக்கள் அனைவரும் இங்கே ஒன்று கூடிவிடுவார்கள். சைவ நெறிச் செல்வர்களான அவர்கள் அந்தக் காலத்தில் ”ஆண்டிக்கு வடித்தல் ” என கார்த்திகை முதல் சோம வாரத்தில் வண்டி கட்டிக் கொண்டு இங்கே சமையல் பொருட்களை எடுத்து வந்து ஆள் வைத்து சமைத்து 7 கறி, கெட்டிக் குழம்பு, சாம்பார், ரசம், […]
நேற்கொழு தாசன் மலர் உதிரும் ஓசையொன்றால் குலைந்து போனவன் தனக்கான கல்லறையை செதுக்கத்தொடங்கினான். தேர்ந்த ஓரிடத்தில் நிறங்களை ஒதுக்கி மௌனப்பாறைகளால் சுவர்களையும், நிர்வாணத்தை நிகழ்த்தி தனிமையால் புதர்களையும் உருவாக்கினான் முதலில். இருளடர்ந்த சுவருக்குள் வாசங்கள் நுழைந்துவிடாதிருக்க வேர்களையெல்லாம் களையத்தொடங்கியவன் கிளைகளின் ஈரலிப்பில் பூர்விகத்தை கழுவிக்கொண்ட கணத்தில் மொட்டொன்று அவிழ்ந்ததை உணர்ந்தான். கல்லறையின் வாசலில் இறகொன்று கிடந்தது பறத்தல் பற்றிய கனவோடு….. ஆக்கம்; நேற்கொழு தாசன் வல்வை
வீட்டைவிட்டு வெளியே செல்ல முடிகிறதா குடை எடுத்துச் சென்றாலும் பாதி நனைந்து தான் வீடு திரும்ப வேண்டியிருக்கிறது சாலையில் யாரையும் காணோம் ஆங்காங்கே சில கடைகள் தான் திறந்திருக்கிறது விடாமல் தூறிக் கொண்டிருப்பதால் சுவரெல்லாம் ஓதம் காத்து இருக்கிறது கதகதப்புக்காக பெட்டிக் கடையில் நின்று சிகரெட் பிடிக்கிறார்கள் குடிமகன்கள் பளிச்சென்ற மின்னலைப் பார்த்து காதை பொத்திக் கொண்டன குழந்தைகள் கண்ணெதிரே வாகனத்தின் மீது விழுந்த மரம் கையாலாகாததனத்தை எண்ணி கண்ணீரை வரவழைத்தது கொள்கை முழக்கமிட்ட சுவரொட்டிகளுக்கெல்லாம் […]
நீலம் புயலால் தரை தட்டியிருக்கிறது வாழ்க்கைக் கப்பல் கொஞ்சம் படுத்துக் கொள்ள பாய் தேடுகிறது உலகப் பொருளியல் வலிகள் இவைகளுக் கிடையேதான் சுகப் பிரவேசமாய்த் தீபாவளி ஒரு சிரிப்பை எழுதத்தான் மையாகிறது கண்ணீர் ‘சுபம்’ சொல்லத்தான் முளைக்கிறது பிரச்சினை ஒரு குழந்தையை எழுதிவிட்டுத்தான் எடுக்கிறது இடுப்புவலி ‘அமைதி’ யை எழுதிவிட்டுத் தான் புறப்படுகிறது புயல் ஆக சேருமிடம் என்றும் சுபம் அதுதான் தீபாவளியின் முகம் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா (Preface […]
வே.ம.அருச்சுணன் மலேசியா காலை மணி எட்டாவதற்கு முன்பே கவுன்சிலர் மணிவண்ணன் பூக்கடைக்கு வருகிறரர். “நான் இருபது வருசமா இங்கு வியாபாரம் செஞ்சிக்கிட்டு வர்றேன். இப்போ……திடீர்னு வந்து இடத்தைக் காலிப் பண்ணச் சொன்னா நான் எங்கே போவேன்?” பூக்கடை உரிமையாளர் பூங்கோதை அந்த வட்டாரத்தின் நகராண்மைக் கழக உறுப்பினர் மணிவண்ணனிடம் தன் மன ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். “கேள்விப் பட்டுதான் வந்திருக்கிறேன் தைரியமாக இருங்கள் அம்மா!” கவின்சிலர் பதவியேற்று மூன்று மாதங்களே […]
ராஜூ பார்க்க அமைதியாய் இருந்தாலும் சிலவிஷயங்களில் மிகவும் தீவிரமானவன். ஆனால் பலவிஷயங்களில் மிகவும் மேம்போக்காய் இருப்பான். திருநெல்வேலியில் இருந்து பொன்மலை ரயில்வே பள்ளிக்கூடத்தில் அவன் ஆறாவது சேர்ந்ததில் இருந்து அவனை எனக்குத் தெரியும். அவன் முதன் முதலில் என் வீட்டிற்கு வந்திருந்தபோது எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த தென்னந்தோப்பிற்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கென்று இருந்த மிக ஆழமானதும் அகலமானதுமான கிணற்றைக் காட்டி, ” டேய்! இது பயங்கரமான கெணறுடா! நெறையா பேத்தை இது காவு வாங்கியிருக்கு தெரியுமா” […]
சிடிக்கள் டிவீடிக்கள் உருவாகாத காலமது. எழுபதுகளில் எல்லாம் தமிழகத்தில் வாழ்ந்த சிங்கப்பூர் சபுறாளிகள் சொந்த மண்ணுக்கு வரும்போது அள்ளிக் கொண்டுவரும் சாதனங்களின் ஒன்று கேசட்டுகள். தகவல் அறிவுப்பரிமாற்றத்திற்கு புரதான காலங்களில் எழுத்தாணிகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள்,மரப்பட்டை,தோல்களில் எழுதுதல் என்பதான வடிவங்கள் பயன்பட்டன. நவீன தொழில்நுட்பம் உருவாகிய போது அச்சு ஊடகம் முதன்மை பெற்றது. ஓலைச்சுவடி கருவூலங்கள் அச்சுவடிவில் பாதுகாக்கப்பட்டன. இதன்பின்னர் உருவான எலக்ட்ரானிக் மீடியாகாலத்தில் இந்த கேசட்டுகள் எனும் ஒலிநாடாக்கள் உருவாகின. தற்போது ஒலியும் ஒளியும் கலந்த […]