மனிதனை பிடித்து ஆட்டும் வெறிகள் பல.மத வெறி,இன வெறி,சாதி வெறி,மொழி வெறி என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. மனிதன் என்றால் ஏதாவது ஒரு வெறி இருந்தே ஆக வேண்டும் என்றால் இதில் குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் மொழி வெறியை எடுத்து கொள்ள பரிந்துரைக்கலாம்.குறைவான பாதிப்புகளை ஏற்படுத்தும் வெறி என்றாலும் அதனிடம் இருந்தும் மனிதன் விடுபட்டால் மனிதகுலத்திற்கு நல்லது தான். அதன் பாதிப்புகள் அதிகம் அலசப்படாத புனிதபசுக்களில் மொழி வெறி முக்கியமானது.சாதி வெறி,மதவெறியை எதிர்ப்பவர்கள் மொழிவெறியோடு இருப்பதை […]
இலக்கியச்சோலை நிகழ்ச்சி எண்: 143 நாள் :24-11-2013 இடம்: ஆர்.கே.வி.தட்டச்சகம் கூத்தப்பாக்கம்,கடலூர். கவியரங்கம் நகை:கா.மஞ்சு அழுகை:அன்பன் சிவா இளிவரல்:பழ.ஆறுமுகம் மருட்கை:அ.மீனாட்சி அச்சம்:வெற்றிச்செல்வி சண்முகம் பெருமிதம்:முனைவர் க.நாகராசன் உவகை:ந.இரவி வெகுளி:கவி மனோ அனைவரும் வருக ! வருக !
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. அடையாளம் கண்டு கொள்வர் அவளை ஒருநாள் ! தன்னம் பிக்கை இல்லா அவளை அடையாளம் காண்பார் ; எதற்கும் கவலைப் படாதவள் அவள் ! காலை இளம் பரிதியின் கீழ்வான விளக்கு இந்த கருமை முகத்திரை அகற்றும் ! மூழ்க்கி விடும் மூடுபனி மூட்டத்தின் வனப்பில்லா முகத்திரை மறைக்காது அவளைக் காட்டிக் கொடுத்து விடும் ! இன்று பூமாலையை அவள் தொடுக்கட்டும் ! துன்ப […]
டாக்டர் ஜி. ஜான்சன் அப்போது என் வயது ஆறு. எங்கள் கிராமத்துப் பள்ளியில் பயின்று வந்தேன். அது ஆரோக்கியநாதர் ஆலயம். அதில்தான் பள்ளியும் நடந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஆலய ஆராதனை நடைபெறும். தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபையின் ஆரம்ப காலத்தில் தரங்கம்பாடியிலிருந்து இங்கு வந்த ஜெர்மன் நாட்டு இறைப்பணியாளர்களால் ( Missionaries ) கட்டப்பட்டது இந்த ஆலயமும் பள்ளியும். அது கிறிஸ்துவப் பள்ளியாக இருந்தாலும் பெரும்பாலான பிள்ளைகள் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இந்து பிள்ளைகளே […]
பாவண்ணன் பொதுக்பொதுக்கென்று அழுந்தும் ஈரத்தரையில் கவனமாக அடியெடுத்து வைத்துக் கரையேறினான் சொக்கலிங்கம். அலைவேகத்துக்குத் தகுந்தமாதிரி தாவிக் குதித்தும் விழுந்தும் புரண்டும் கடலில் அரைமணிநேரமாக தொடர்ந்து குளித்ததில் இன்னும்கூட நிதானத்துக்கு வரமுடியாமல் மிதப்பதுபோலவே இருந்தது உடல். காதுக்கு வெகு அருகில் யாரோ உறுமுவதுபோன்ற ஓசை கேட்டது. வேகமாகப் பொங்கிவந்த அலையொன்று அவன் நடந்துவந்த காலடித்தடங்களை அழித்துவிட்டுச் சென்றது. உச்சிவெயிலில் கண்கள் கூசின. கரையில் வைத்திருந்த துண்டை எடுத்து தலையைத் துவட்டியபடி, கடலை விட்டுவர விருப்பமில்லாமல் […]
சுப்ரபாரதிமணியன் “ துண்டுத்துணி ஒன்னு ஆகும்போல இருக்குது. நெய்யறேன் ”” “ மல்லிகா சொன்னாள். அவள் கண்களில் புதுத்துணி பல வர்ணங்களுடன் மின்னியது.பட்டாம்பூச்சியொன்று பறந்து போனது.. “நாளைக்குதானே பாவு. நெய்யி. எப்பிடியும் இன்னிக்கும், நாளைக்கும் சும்மா இருக்கறது தானே. நெய்யி” ராதிகா அப்பாவின் தறிப்பக்கம் வந்து உட்கார்ந்தாள். “அப்பா.. அக்கா, துண்டுத்துணி நெய்சா நீங்க கேக்கக் கூடாது. அதெ வித்து நாங்க ரெண்டு பேரும் சினிமாவுக்கு போறதுக்கு காசு வெச்சுக்குவம்..” ரங்கசாமி கண்களை இடுக்கிக் கொண்டு […]
Sruti invites you to a delightful dance ballet / drama “Sri Krishna Parijaatham” performed by Shoba Natarajan, Sasikala Penumarthi, Kamala Reddy & Revathi Komanduri as a tribute to Kuchipudi exponent, Padma Bhushan Dr.Vempati Chinna Satyam. This event is co-presented with the Hindu Temple of Delaware on Saturday November 16, 2013 at 2:30 PM. Tickets are now available atsruti.tix.com. Venue: Hindu Temple […]
அன்படையீர் வணக்கம். இத்துடன் இரண்டாவது கம்பராமாயண உலகத்தமிழ் ஆய்வரங்க அறிக்கையினை அனுப்புவதில் பெரு மகிழ்வு அடைகிறோம்.தாங்கள் அவசியம் பங்கேற்று பைந்தமிழ்க் கம்பன் புகழ் பாடிட மிக்க பணிவன்புடன் வேண்டுகிறோம். என்றுமுள தென்றமிழ் இயம்பி இசை கொள்ள நன்றுவர வென்றுபல நல்லுரை பகர்ந்தோம். கம்பன் பணியில் உங்கள் கம்பன் அடிசூடி. KambanIntlResearchConf_2014(1)
சீதாயணம் படக்கதை -7 சி. ஜெயபாரதன், கனடா [சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு : வையவன் ஓவியம் : ஓவித்தமிழ் படம் : 12 & படம் : 13 [இணைக்கப் பட்டுள்ளன] +++++++++++++++++++++ காட்சி நான்கு அயோத்திய புரியில் ஆரம்பித்த அசுவமேத யாகம் இடம்: அயோத்திய புரி அரண்மணை நேரம்: மாலை பங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், […]
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 49 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) முழுமை பெற்ற மாதர் .. ! (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா இதுதான் குடும்ப அணுக்கரு ! பெண் ஒருத்தி குழந்தை பெற்றெடுப்பில் ஆண் மகவையும் ஈன்றெடுப்பாள் ! இதுதான் பிறப்பின் குளிப்பு பெரியதும் சிறியதும் அவள் மூலம் இரண்டறப் பின்னிக் கொண்டு, வெளியே வருவது ! […]