ஒரு தலைவன் என்பவன்

This entry is part [part not set] of 19 in the series 1 நவம்பர் 2020

கௌசல்யா ரங்கநாதன்-1-சென்னையிலிருந்து புறப்பட்டு, கும்பகோணம் வந்து, அங்கிருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் உள்ள ஒரு குக்கிராமத்துக்கு எங்கள் குல தெய்வ பிரார்த்தனையை செய்ய அங்கிருந்து கிளம்பும் ஒரு லொடலொட்டா பேருந்தில் முண்டியடித்துக்கொண்டு ஏறிய பிறகுதான் எனக்கு விளங்கியது 40 கி.மீ. தூரத்தை அந்த பேருந்து கடக்க எப்படியும் 2 மணி நேரமாவது ஆகுமென.குண்டும்,குழியுமான சாலை, வளைந்து,நெளிந்து,பக்கவாட்டில் இன்னொரு பஸ்ஸோ,காரோ, வேறு ஏதாவது வண்டிகளோ வந்தால் டிரைவர்கள் பாடு படு திண்டாட்டம்தான்..அது மட்டுமல்ல..எங்களுக்கு பிறகுஅந்த வண்டியில் ஏகப்பட்ட குஞ்சும்,குளுவான்களும், […]

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 18 of 19 in the series 1 நவம்பர் 2020

பிறவி கைக்கும் வாய்க்கும் இடையிலான தொலைதூரத்தைக் கடக்கக் காலமெலாம் முயன்றவண்ணமேயிருக்கிறது மனம். There is many a slip between the cup and the lip என்று சற்றே பெரிய வகுப்பின் பாடப்புத்தகம் போன்ற ஒன்றிலிருந்து எழுத்துக்கூட்டி உரக்க வாசிக்கும் சிறுமி ஓடிச்சென்று ஒரு கோப்பை நீரை எடுத்துவருகிறாள். பின், தன் பையிலிருந்த திறப்புகளுக்குள் கையை நுழைத்து பலப்பலவாறாய்த் துழாவித் தேடியெடுக்கிறாள் ஸ்கேலை. ஒரு கையில் கோப்பையைப் பிடித்தபடி மறுகையால் மேற்சொன்ன தொலைவை அளக்கத்தொடங்குகிறாள். நீர்க்கோப்பையின் […]

கொரோனா காலம்

This entry is part 17 of 19 in the series 1 நவம்பர் 2020

கல்யாண மண்டபங்கள் பத்து மாதமாய் மூடிக்கிடக்கின்றன தெருவில் தினம் தினம் வந்த சலவைக்காரன் மாதங்கள் பல ஓடிப்போயின ஆளைக்காணோம். சலூன்கடை பக்கம்தான் யார் போனார்கள் கழித்தலும் அந்த வழித்தலும் அவரவர் வீட்டுக்குள்ளேயே பாத்திரம் தேய்க்கும்  வீடுபெருக்கும் பாப்பாவுக்கு எத்தனையோ மாதமாய் விடுப்பு பள்ளிகள்  எல்லாம் சாத்தித்தான் கிடக்கின்றன. கோவிலும் இல்லை குளமும் இல்லை உண்மையுமாய் இன்மையுமாய் தானேயது. அவசியமாய் மட்டுமே கடைக்குப்போதல் அச்சப்பட்டுக்கொண்டே காரியம் பார்த்தல் முகக்கவசம் சமூக இடைவெளி உண்டென்றால் இவை உண்டு   இல்லையென்றால் […]

வாக்குமூலம்

This entry is part 16 of 19 in the series 1 நவம்பர் 2020

என் செல்வராஜ்                      வாழாவெட்டியாக அம்மா வீட்டுக்கு வந்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. தங்கை கல்யாணத்துக்கு தயாராகிவிட்டாள். வரும் மாப்பிள்ளை வீட்டார் வாழாவெட்டியாக இருக்கும் அவளைக் காரணம் காட்டித் தங்கையை திருமணம் முடிக்கத் தயங்குகிறார்கள்.அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்ட அந்தக் கயவனை கேள்வி கேட்க யாரும் இல்லை. அவன் இன்னமும் கல்யாணம் ஆகாமல் ஊரில் திரிகிறான். படித்திருக்கிறான், வேலையிலும் இருக்கிறான், ஆனாலும் பெண்களுக்கு வலை விரிப்பதை விடுவதில்லை. அவனுக்கு இந்த பஞ்சாயத்தார் பாடம் புகட்டினால் […]

ஹமாம் விளம்பரமும் அப்பாவி சிறுமிகளும்

This entry is part 15 of 19 in the series 1 நவம்பர் 2020

லதா ராமகிருஷ்ணன் விளம்பரங்களில் 99.9 விழுக்காடு பெண்களைக் காட்சிப்பொருளாகத்தான் கையாள்கின்றன என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. சில அதைக் கொச்சையாக, அப்பட்டமாகச் செய்கின்றன. சில நாசூக்காக,ச் செய்கின்றன. அவ்வளவுதான் வித்தியாசம். சில மாதங்கள் முன்புவரையும் ஹமாம் சோப்பு விளம்பரத்தில் ஒரு சிறுமி தனது ஆடையற்ற தோள்களில் ஹமாமை வைத்து உருட்டிக்கொண்டே யிருப்பாள். (குளிக்கிறாளாம்). அருகில் நின்றுகொண்டு அவளுடைய அம்மாக்காரி ‘ஓடு, துரத்து, பயந்து ஒளியாதே’ என்று வெற்றுவீர முழக்கமிட்டுக் கொண்டிருப்பாள். இப்போது வேறொரு விளம்பரப்படம் வருகிறது. முன்பிருந்த […]

மண்ணில் உப்பானவர்கள் – நூல் விமர்சனம்

This entry is part 14 of 19 in the series 1 நவம்பர் 2020

குமரி எஸ். நீலகண்டன் உடலில் தண்ணீர் எவ்வளவு நிரம்பி இருக்கிறதோ அதே போல்தான் உப்பும் நம் உடலின் ஆரோக்கியத்தில் அதி உன்னதமான பங்கை வகித்துக் கொண்டிருக்கிறது. காற்றைப் போல் உலகம் முழுக்க நிரம்பி இருக்கிறது உப்பு.  அந்த உப்பைத் தின்றவர்கள்தான் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வீறு கொண்டு எழுந்தார்கள். அந்த உப்புதான் இந்திய விடுதலைப் போரில் ஒரு புதிய வேகத்தையும் சக்தியையும் அளித்தது.  காந்தியடிகளின் உப்பு சத்தியா கிரகத்தை அறியாமல் எந்த இந்தியனும் இருக்க இயலாது. […]

ஓவியக்கண்காட்சி

This entry is part 13 of 19 in the series 1 நவம்பர் 2020

திருப்பூர் வேலம்பாளையத்தைச் சார்ந்த ஓவியர் மருத பாண்டியன்  ஓவியக்கண்காட்சி நேற்று  29/10/20 மக்கள் மாமன்ற நூலகத்தில் துவங்கியது .  மக்கள் மாமன்ற அமைப்புத்தலைவர்  சி. சுப்ரமணியன் துவங்கி வைத்தார். டிட்டோனி முத்துச்சாமி, எழுத்தாளர்கள் செல்லம் ரகு, மதுராந்தகன், ஆழ்வைக்கண்ணன், சுப்ரபாரதிமணியன்., உள்ளிட்டோரும் மக்கள் மாமன்ற  நிர்வாகிகள் ராஜா, சித்தார்த்தன், நூலகர் ஆறுமுகம் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். மற்றும் இரு நூல்கள் அறிமுகங்கள் நடைபெற்றன. மருத பாண்டியன்  ஓவியக்கண்காட்சி இம்மாதம் 31ம் தேதி வரை நடைபெறும்/ காலை 9 மணி […]

ஒரு கதை ஒரு கருத்து – ஆறுதல் என்கிற தி.ஜானகிராமன் கதை

This entry is part 12 of 19 in the series 1 நவம்பர் 2020

அழகியசிங்கர்             தி.ஜானகிராமனின் தொகுக்கப்படாத சிறுகதைகளில் எதையாவது எடுத்துப் படித்துப் பார்க்கலாமென்று அகப்பட்ட கதை ஆறுதல             காதல் என்ற பத்திரிகையின் ஆண்டு மலரில் 1953ல் எழுதப்பட்ட கதை இது.              இந்தக் கதை ஆரம்பத்திலேயே மனைவியை விட்டுப் பிரிந்த கணவனைப் பற்றிச் சொல்கிறது.  தனிக்குடித்தனம் போக வேண்டுமென்று நினைக்கிறான் சங்கர்.  ஆனால் அது முடியவில்லை. 6 மாதமாக மனைவியைப் பிரிந்து இருக்கிறான் .               ஒரு வீட்டில் ஒரு அறையில் அவனும் நண்பன் கோபாலுடன் குடியிருக்கிறான்.  அவன் மனைவி பிரசிவித்த முதல் குழந்தையுடன் சென்னையில் தனிக் குடித்தனம் […]

ஒரு மாற்றத்தின் அறிகுறி

This entry is part 11 of 19 in the series 1 நவம்பர் 2020

குணா நல்ல தரமான செருப்பு வாங்கிப் போட வேண்டும் என்று வெகு நாள் ஆசை. சிறு வயதில் கடுக்கன் தைத்துக் கொடுத்த தோல் செருப்பு தான். அதையே சந்தோஷமாய் அணிந்த இளம் வயது காலம். அழுக்கு வேட்டியை வரிந்து கட்டி உட்கார்ந்து தைக்கும் கடுக்கன் இப்போது உயிரோடு இல்லை. வேறு ஒன்றுக்கு மாற வேண்டிய கட்டாயம். வயது ஏறியதோடு காலும் வளர்ந்து விட்டது. அதற்கேற்றாற் போல் செருப்பு தேடுவதில் அத்தனை சிரமம் இருக்குமென்று நினைத்திருக்கவில்லை. பல கடையேறி, […]

ஓடுகிறீர்கள்

This entry is part 10 of 19 in the series 1 நவம்பர் 2020

கண்ணாடியில் உன் முகத்தை காணமுடியாத ஒரு முகத்தை அறிய முடியாத முதல் தருணம் உன் கண்களில் குத்திட்டு நிற்பதே மரணம். கீரி பாம்பு இரண்டையும் நம் முன் காட்டி காட்டி ஜனன மரண பிம்பம்பங்களை ஒரு மலிவான வித்தை காட்டுபவனா கடவுள்? அந்த வித்தை பார்ப்பவர்களில் ஒருவனாய் கூட‌ உன் தோள்மீது கை போட்டுக்கொண்டு நிற்கலாம் அவர். நாம் நம் அறிவின் விளிம்பில் நிற்கும் அந்த கத்தி முனையில் கடவுளை எக்ஸ் என்று வைத்து நம் கையில் […]