அக்னிப்பிரவேசம்- 11

This entry is part 42 of 42 in the series 25 நவம்பர் 2012

  தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்  yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பரீட்சை எழுதிவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தாள் சாஹிதி. இனி இரண்டு மாதம் எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இருக்கலாம் என்று நினைக்கும் போதே திருப்தியாய் இருந்தது. தாய் பூஜையில் இருந்தாள். அதேதோ நாற்பது நாள் நோன்பு. தினமும் உபவாசம். இரவில் மட்டும் பழமும் பாலும் அருந்தி வந்தாள். அந்த நோன்பு யார் பண்ணச் சொன்னார்கள் என்று சாஹிதிக்குத் தெரியாது. ஆனால் தாயை அந்த நிலையில் […]

காணோம்

This entry is part 41 of 42 in the series 25 நவம்பர் 2012

இரா. ஜெயானந்தன். கூரைவேய்ந்த பள்ளியைக் காணோம் குடுமி வைத்த வாத்தியைக் காணோம் உயர்ந்து வளர்ந்த மரங்களைக் காணோம் ஏறி விளையாடிய கிளைகளைக் காணோம். ஈமொய்த்த எலந்தை பழங்களைக் காணோம் தோல் சுருங்கியை பாட்டியைக் காணோம் டவுசரில் ஒட்டுப்போட்ட சுகுமாரானைக் காணோம் இங்கு படிந்த ஓட்டைப் பேனாக்களை யும் காணோம். கிட்டிபுல் விளையாடிய மைதானத்தைக் காணோம் கிளிக்கொண்டைப் போட்ட கிரிஜாவைக் காணோம் தேடி தேடி, ஓடி ஓடி பார்த்தேன் உன்னையும், என்னையும் காணோம்.

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் 70வது சிறப்புப் பட்டிமன்றம் 02 டிசம்பர் 2012 ஞாயிறு மாலை மணி 6.30

This entry is part 40 of 42 in the series 25 நவம்பர் 2012

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் 70வது சிறப்புப் பட்டிமன்றம் 02 டிசம்பர் 2012 ஞாயிறு மாலை மணி 6.30 70thprog 02 12 12

நாத்திகர்களும் இஸ்லாமும்.

This entry is part 39 of 42 in the series 25 நவம்பர் 2012

கடவுள் இல்லை. அல்லாஹ்வும் இல்லை. முன்னாள் முஸ்லீம்களான நாத்திகர்கள் வெளிப்படையாக பேசத்துவங்கியிருக்கிறார்கள். இருப்பினும், சகிப்புத்தன்மை இன்னும் அரிதாகவே இருக்கிறது. இந்தோனேஷிய நீதிமன்றம் அலெக்ஸாந்தர் ஆன் Alexander Aan) அவர்களுக்கு “மத வெறுப்பை தூண்டியதற்காக” இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனையை கொடுக்கும் முன்னரே, ஒரு கும்பல் அவரை தாக்கி விட்டது. உலகத்தின் மிகப்பெரிய முஸ்லீம் பெரும்பான்மை நாடான இந்தோனேஷியாவில் உள்ள மினாங் பிரதேசத்தில் உள்ள நாத்திகர்களுக்காக அவர் ஆரம்பித்த முகநூல் குழுமத்தில் (Facebook group) கடவுள் இல்லை என்று எழுதியதுதான் […]

தாகூரின் கீதப் பாமாலை – 41 அவள் தந்த பிரிவுப் பரிசு.

This entry is part 38 of 42 in the series 25 நவம்பர் 2012

தாகூரின் கீதப் பாமாலை – 41 அவள் தந்த பிரிவுப் பரிசு. மூலம்: இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா எந்தன் கழுத்தைச் சுற்றி அணிந்திருக்கும் இந்த மலர்மாலை எனக்கவள் தந்த பிரிவுப் பரிசு ! கால் எட்டு வைக்கும் ஒவ்வொரு கணமும் இங்கு மங்கும் அசைந் தாடும் என் இதயத்தின் அருகிலே ! இந்தக் கணமும் அடுத்த தருணமும் அந்த மாலை நறுமணம் வீசிடும் தேனீக்கள் ரீங்காரக் கிளைகளின் அடியில், வசந்தத் தென்றலில் ! […]

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 6. எஸ்.வைதீஸ்வரன் – உதய நிழல்

This entry is part 37 of 42 in the series 25 நவம்பர் 2012

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 6. எஸ்.வைதீஸ்வரன் – உதய நிழல் வே.சபாநாயகம். நீங்கள் வாசிக்கப்போகும் இவைகள் – கவிதைகள். சாதாரணமானதாக பொருளற்றதாக பழகிப்பொய்விட்ட தவிர்க்க முடியாத நியதியாகத் தோன்றும் வாழ்க்கையிலிருந்து ஆசையால் அறிவால் உணர்வால் கல்லிடியடுக்கபட்ட சில கலையுண்மைகள் இவைகள். பூமியில் வெகு நாட்களாகப் பதிந்து போய்க்கிடக்கிற ஒரு பாறாங்கல்லை சலித்துப் போன வெறும் ஆத்திரத்தால் புரட்டிவிட அடியிலிருந்து திடீரென்று கொப்பளிக்கும் நீரூற்றையோ நெளியும் அநேக ஜீவராசிகளையோ கண்டு பிரமிப்படைந்து நிற்கும் நிலைகள் – எனக்கு கவிதை […]

காலம் ஒரு கணந்தான்

This entry is part 35 of 42 in the series 25 நவம்பர் 2012

1.காலம் ஒரு கணந்தான்…! part 1 மெழுகுவர்த்தியாய் உருகி வெளிச்சங்கொடு… “சோனாமாரி”யிலும் அணையாதே! மேக கணங்களாய் உழை… மழைத்துளிகளாக சேவை செய்… பூமியைப்போல பொறுத்திடு… அகழ்வாரை அன்போடு நோக்கு… மின்னலிடம் வெளிச்சங் கேள்… இடியைத் தாங்கும் இதயம் பெறு… காற்றிலே கீதம் அமை… கைப்பிடிக்குள் உலகம் எடு… கால வெள்ளத்தோடு கல்லாக உருளாதே, பாறையாய் நில்லு., சந்தோஷச் சிறகில் பறவையாய்ப் பற… பனித்துளியாய் வாழ இலையிடம் இடங்கேள்… சூரியன் சுட்டாலும் அழியாமல் வாழ்… தேனீயாய் சுற்று… எறும்பாய் […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 46) விழிக்கும் நெஞ்சுக்கும் போர்

This entry is part 34 of 42 in the series 25 நவம்பர் 2012

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 46) விழிக்கும் நெஞ்சுக்கும் போர் மூலம்: வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -37

This entry is part 33 of 42 in the series 25 நவம்பர் 2012

சீதாலட்சுமி இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்   QUEST PROGRAMME பன்னாட்டு அரிமா சங்கம் தோற்றுவித்த ஓர் திட்டம் 65 நாடுகளில் 31 மொழிகளில் இத்திட்டம் செயல்படுத்த பயிற்சித் திட்டமும் வரையப்பட்டது. சிறுவர்கள், இளம் காளைகள் திறனை வளர்க்கவும் தவறான பாதைகளில் திரும்பி விடாமல் தடுக்கவும் தோன்றிய திட்டம். 1 தன் பொறுப்பை உணர்ந்து அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்தல் 2 சொல்ல நினைப்பதைச் சரியாகச் சொல்லக் கற்றுக் கொள்ளல் 3 […]