தேமொழி நம் பாரதத்தில் பிறந்தவர்களின் வரலாற்றுக் குறிப்புகளின் நிலை மிகவும் வருந்தத் தக்கது. பொதுவாக ஒருவர் காலம் பல கடந்தும், அதாவது பற்பல நூற்றாண்டுகளுக்குப் பின்னும் நினைவுகூரப்பட வேண்டும் என்றால் அவர்கள் பொதுவாக சில பண்புகளைக் கொண்டிருப்பார்கள். – அவர்கள் கலையிலோ, இலக்கியத்திலோ (ஆன்மீகம், அரசியல், அறிவியியல் துறைகள் உள்ளடக்கிய படைப்புகள் உட்பட) தங்கள் பங்கினை அளித்திருப்பார்கள் – அதிகாரம் மிக்க அரச குடும்பத்தினராக இருந்திருப்பார்கள் – செல்வந்தராக இருந்து ஈகைகள் பல புரிந்த புரவலர்களாக இருந்திருப்பார்கள், […]
சத்யானந்தன் எழும்பூர் நூலகத்திலிருந்து ரயில் நிலையத்துக்கு பஸ் அதிகம் கிடையாது. நடந்து போவது என்பது அனேகமாக முடிவான ஒன்று தான். இருந்தாலும் ஐந்து நிமிடமேனும் பஸ் ஸ்டாப்பில் நின்று பிறகு மெதுவாக நடப்பதே வழக்கமாகி இருந்தது மீனாவுக்கு. இன்று நடக்க உடல் நிலை இடம் கொடுக்காது. எனவே பத்து நிமிடத்துக்கு மேலாக நின்று கொண்டிருந்தாள். முதுகுப்பை இன்று ஏனோ சுமையாகத் தோன்றியது. மாலை ஐந்து மணிக்கும் பளீரென வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது. பஸ்ஸுக்காகக் காத்திருப்போர் சொற்பமே என்று […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ‘‘காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன்’’ என்ற பாடலை நாம் அனைவரும் கேட்ட பழைய திரைப்படப்பாடல் ஆகும். இப்பாடலில் வரும் காலம் அனைவரது வாழ்க்கையிலும் பல்வேறு தடயங்களை விட்டுச் செல்கின்றது. வலிமையானவர்கள் தவறுகள் செய்கின்றபோது அவரைத் தட்டிக் கேட்க முடியாத நிலைவரும்போது, ‘‘அவனுக்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும். காலத்திடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது’’ என்று பலரும் கூறுவதைக் கேட்டிருக்கின்றோம். இக்காலத்தை, ‘‘எனக்குப் போதாத காலம், கேடு காலம், […]
சிறுகதை: சுப்ரபாரதிமணியன் மலேசியா பணத்திற்கு என்ன பெயர் என்று அவனுக்கு ஞாபகம் வரவேயில்லை.டாலர், பவுண்ட் என்ற வார்த்தைகளே ஞாபகத்தில் திரும்ப வந்து கொண்டிருந்தன. அவனின் பொது அறிவு அவ்வளவு கூர்மையானதல்ல.யாரிடம் கேட்க,எதற்கு என்று அலுப்பில் இருந்தான். மலேசியா விமான நிலையத்தில் போய் மாற்றிக் கொள்ளலாம் என்றிருந்தான். விமானத்தில் வந்து உட்கார்ந்தாயிற்று. ‘’ அதுலே குடிக்கத் தண்ணி கூட குடுக்க மாட்டானே ‘’ ‘’ இண்டர்னேசனல் பிளைட் . நாலு மணி நேரப்பயணம் .சாப்பாடு நிச்சயம் […]
(ஓர் அறிவியல் மாணவன்) வைரமுத்துவின் “மூன்றாம் உலகப் போர்” நாவலில் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யவரும் எமிலி என்னும் அமெரிக்க மாணவி (நியூ சயண்டிஸ்ட் புகழ்) அமெரிக்காவுக்குத் திரும்பு முன் சின்னப்பாண்டியென்னும் நமது கதாநாயகனுடன் பேசுகிறாள். அந்த உரையாடல் கொஞ்சம் காதல் போல் தொனிக்கிறது. ஆனால் காதல் இல்லை. எமிலி: “இந்தச் சந்தர்ப்பத்தில் என்னை நம்புகிறீர்களா?” சி.பா.: “இப்போது என் வாழ்வின் நம்பிக்கையே நீதான் எமிலி” “நம்பிக்கையின் குரலுக்குச் செவிசாய்ப்பீர்களா?” “நிச்சயமாக” […]
காத்திருக்கிறாள் கன்னியவள் கனிவான மணமகனுக்காக… கண்ணில் ஓர் காதலுடன் கையில் மாலையுடன் சுயம்வர மண்டபமதில்… காமம் வென்ற (வர)தட்சணை சாபம் என்றாகிப்போக கன்னி கழியாமல் கண்ணீருடன் வாடிய மாலையுடன் காத்திருக்கிறாள் கன்னியவள்! ஏனிந்த கவர்ச்சிப் பருவம் எதற்கிந்த வரட்டு கௌரவம்? யாருக்காக இந்த வரம்? எதற்கிந்த சுயம்வரம்? சீந்துவாரில்லாமல்…… தெருவெங்கும் கழுகுப் பார்வைகள் மனமத அம்புகள் அர்ச்சனைக்காக மலர்ந்து தட்சணையின்றி கருகி கூசிக் குறுகும் கன்னி மனம். என்றேனும் வருவாய் மாலை சூடுவாய் நம்பிக்கை இழக்காமல் காத்திருக்கும் […]
மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -4 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய […]
1956 – தான் அவரது விமர்சனப் பயணத் தொடக்கமாக எனக்குத் தெரிய வந்த வருஷம். அதிலிருந்து அவர் கடைசி மூச்சு பிரியும் வரை அவர் விமர்சகராகவே முத்திரை குத்தப் பட்டு ஒதுக்கப் பட்டு விட்டார். நாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என எல்லா வடிவங்களிலும் அவர் தொடர்ந்து எழுதி வந்தார். பெரிய மனிதன், ஆட்கொல்லி, ஏழு பேர், அசுர கணம், நளினி, மயன் கவிதைகள், சமூக சித்திரம், அவரவர் பாடு மாதவி, வள்ளுவரும் தாமஸ் வந்தார்,, அவதூதர்,. […]
ஊரை விட்டு உறவை விட்டு வந்தது போல் ஒரு வெறுமை. மனம் தனிமையின் குழிகளை வெட்டிக் கொண்டிருக்கும். கண்களில் விரிந்து கடந்த கால நினைவுகள் மண் மேடிட்டுக் கிடக்கும். ஓய்வு பெற்று எத்தனை காலம்? குழியில் விழுந்து கிடக்கும் கால நிழலை மேலும் குழி வெட்டி மனம் பிடிக்கப் பார்க்கும். ’மற்றவர்கள் தன்னை மறந்து விட்டார்களோ?’ பாறையாய்க் கேள்வி தடுக்கும். ’கொஞ்சம் காலமாகத் தான் பேச நினைத்த நண்பரோடு பேசினாலென்ன?’ ஒரு நினைப்பு ஈரமாகும். நினைப்பு நீளும் […]
எஸ் ராமகிருஷ்ணன் வழங்கும் உலக சினிமா 7 நாள் பேருரைகள்