முருகபூபதி – அவுஸ்திரேலியா சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான் ஆறுதசாப்த காலத்தையும் கடந்து எழுத்தூழியத்தில் தவமிருந்த எஸ்.பொ. இலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. அவுஸ்திரேலியாவில் சிட்னியில் கடந்த 26-11-2014 இல் மறைந்தார். கடந்த காலங்களில் எனக்குத்தெரிந்த – நான் நட்புறவுடன் பழகிய பல படைப்பாளிகள் சமூகப்பணியாளர்கள் குறித்து எழுதிவந்திருக்கின்றேன். வாழும் காலத்திலும் அதில் ஆழமான கணங்களிலும் அவர்களுடனான நினைவுப்பகிர்வாகவே அவற்றை இன்றும் தொடர்ந்து எழுதிவருகின்றேன். காலமும் கணங்களும் ஒவ்வொருவர் வாழ்விலும் தவிர்க்க […]
எஸ்.பொ அவர்கள் வரிகளின் ஸ்பரிசம் எனக்கு ஏதும் இல்லையே. அந்த இலக்கிய ஒளிக்கு நானும் எதோ ஒரு”நெய்ப்பந்தம்” பிடிக்க வேண்டுமே என்று உள்ளே உறுத்தியதால் இதில் நுழைந்தேன். http://www.eramurukan.in/tamil பாரதியார் எழுதியிருந்தாரே “அக்கினிக்குஞ்சு ஒன்று கண்டேன்.. அதை ஆங்கொரு பொந்திடை வைத்தேன்..” அந்த குஞ்சு குஞ்சு இல்லை. அக்கினிக்கடல். இலங்கைக்கு கழுத்தில் வல்லாட்டு மாட்டி வல்லிய தமிழின் வலம்புரிச்சங்கெடுத்து முழங்கிக்க்கொண்டிருந்தது அந்த அக்கினிக்கடலே. பொறுத்தம் இல்லாமல் பூகோளக்காரர்கள் இந்து மகா சமுத்திரம் என்று அழைத்துக்கொள்ளட்டும்.கவலையில்லை. அக்கினியை […]
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வருடாந்தம் தமிழ் எழுத்தாளர் விழாவை கலை இலக்கிய ஒன்றுகூடலாக நடத்திவருவதுடன் அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும் ஒழுங்குசெய்துவருகிறது. கடந்த காலங்களில் சிறுகதை, கவிதை மற்றும் தமிழ் விக்கிபீடியா பயிலரங்கு அனுபவப்பகிர்வுகளை நடத்தியுள்ள சங்கம் – நாவல் இலக்கியம் தொடர்பான அனுபவப்பகிர்வையும் நடத்தவுள்ளது. சங்கத்தின் தலைவர் Dr. நடேசனின் தலைமையில் நடைபெறவுள்ள நாவல் இலக்கிய அனுபவப்பகிர்வில் இலங்கை – தமிழக நாவல்கள் புலம்பெயர்ந்தவர்களின் நாவல் இலக்கிய முயற்சிகள் மற்றும் மேலைத்தேய பிறமொழி நாவல் இலக்கியம் தொடர்பாகவும் […]
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பாரிஸ்- 1997 இடம்- உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற மேற்கு நாட்டின் தலைநகரமொன்றின் பெருவீதி.காதலுக்கும்,மனிதனின் நுண்ணிய உணர்வுகளின் பரிணாமத்தை விளக்கவும் மிகவும் சிறந்த தென்ற ஒரு மொழியைத் தனதாக்கிக்கொண்டதுமான நகரமிது.உலகிலுள்ள எந்த மூலையிலுள்ள கலைஞரென்றாலும், தன் வாழ்க்கையில் ஒரு தடவையாவது தரிசிக்கவேண்டும் என்று தவிக்கும் தாபத்தைக் கொடுக்கும் கட்டிடக்கலையில்,பெயர் பெற்றது. காதலர்களின் சொர்க்க பூமி என்று பரவசமாகப் பேசப்படும் நகரமது. இரண்டாம் உலக யுத்தத்தில்,ஹிட்லரால் மேற்கொண்ட முற்றுகையில் அழிவு நேராமல்,மறைத்து வைக்கப் பட்டஅதியற்புத ஓவியங்களை,சிலைகளை,கலைப்படைப்புக்களை, […]
காட்சி 7 காலம் காலை களம் உள்ளே இடம் பிராட்வே போலீஸ் ஸ்டேஷன் ட்யூட்டியில் இருக்கும் ஒரு போலீஸ்காரர் (போலீஸ் 1) உரக்க கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தபடி இருக்கிறார். கூடவே இன்னொரு கான்ஸ்டபிள் – போலீஸ் 2) போலீஸ் 2: (போலீஸ் 1-இடம்) வண்ணாரப்பேட்டையிலே விழுந்து இருபது பேர் அவுட்டாம்.. கை கால் போய் நூத்தம்பது பேர்..பேப்பர்லே போட வேணாம்னுட்டாராம் கலெக்டர் தொரை போலீஸ் 1: காக்க காக்க பயமின்றி காக்க.. (போலீஸ் 2-வைப் […]
மா.அருள்மணி முனைவர்பட்ட ஆய்வாளர் தமிழ்த்துறை பாரதியார் பல்கலைக்கழகம் கோவை – 46. முன்னுரை படைப்பிலக்கியங்களில் வாசகரிடம் தனக்கென தனித்ததொரு இடத்தினைப் புதின இலக்கியம் பெற்றுள்ளது. ஏனெனில் அவை மனித வாழ்க்கையை மிகையில்லாமலும் குறையில்லாமலும் முழுமையாகப் படம்பிடித்துக் காட்டுபவையாக உள்ளன. ஒவ்வொரு தனிமனிதனின் மீதான சமூகத் தாக்கங்களையும் அவனுக்குள் நிகழும் மனப்போராட்டத்தையும் அதனால் ஏற்படும் மனநோயையும் அந்நோயிலிருந்து அவன் மீண்டுவர மேற்டகொள்ளும் முயற்சிகளையும் விளக்குவதற்குத் தகுந்த களமாக புதினங்கள் விளங்குகின்றன. புதின இலக்கியங்களில் மனநோய் ஆட்கொண்ட கதாபாத்திரங்களை அமைப்பதன் […]
. கி.பி.2040. உலகளவில் உள்ள சுற்றுச் சூழல் விஞ்ஞானிகளும்,உலகின் எல்லா நாட்டு பிரதிநிதிகளும் அந்த அரங்கத்தில் நிறைந்திருந்தனர். இதுஅக்டோபர் மாதக் கடைசி. அடைமழையில் எங்கும் சேறும்சகதியுமாய் இருக்கவேண்டிய மாதம்., ஆனால் இந்தமாலைப் பொழுதில் கூட வெப்பம் மனிதர்களை வறுத்தெடுக்கிறது.. நகரத்தைத் தாண்டி புற நகர் பகுதியில் கூட எங்கெங்கும்பொட்டல் வெளிகள். தென்னை பனை ,பாக்கு போன்ற சல்லிவேர் மரங்கள்உலர்ந்து பாடம் பண்ணிய சவம் போல அசையாமல் நிற்கின்றன.. இந்த மாலை நேரத்திலும் வெப்பம்—120 டிகிரிF என்றால்,.நடுப்பகல் வேதனையைப்பற்றி […]
இராமபிரானின் தூதனாக இலங்கை சென்ற சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயர் அசோகவனத்தில் தவம் செய்த தவமாம் சீதாபிராட்டியைக் கண்டார். பின் அசோகவனத்தை அழித்தார். இலங்கையைத் தீக்கிரையாக்கி அயோத்தி வள்ளலை அடைந்தார். எம்பெருமானிடம் “கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்று மாருதி கூறினார். அண்ணனுக்கு மொழிந்த நீதிகள் பயனளிக்காததால் வீடணன் இலங்கையை விட்டு நீங்கி இராமபிரானிடம் அடைக்கலமானார். பின்னர் சுக்ரீவனும், அனுமனும், வீடணனும் உடன் வர இராம இலக்குவர் இருவரும் இலங்கையை அடைய வேண்டி கடற்கரையை அடைந்தனர். அப்பொழுது வீடணன் “பெருமானே, […]
இடம்: ரங்கையர் வீடு உறுப்பினர்: ஜமுனா, மோகன் நேரம்: மாலை மணி ஐந்து. (சூழ்நிலை: ஜமுனா துவைத்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருக்கிறாள். அப்போது மோகன் வீட்டினுள் வருகிறான்.) மோகன்: என்ன பண்ணிண்டிருக்கே ஜம்னா? ஜமுனா: துணிகளை மடிச்சு வச்சுண்டிருக்கேன்! மோகன்: மடிச்சு ஒரு பெட்டியிலே வச்சுக்கோ… பயணத்துக்கு ரெடியாயிடு. ஜமுனா: உறுதி வந்துடுத்தா? மோகன்: ஆமாம். ஜமுனா: எத்தனை மணிக்குப் பொறப்படணும்? மோகன்: மாலை ஆறு மணிக்கு. ஜமுனா: (கூடத்திலிருந்த கடிகாரத்தைத் திரும்பிப் பார்க்கிறாள்) மணி […]
கல்யாணப்புடவையில் இப்போதெல்லாம் அதிகம் பேசப்படுவது திவாகா பட்டு என்ற 44 லட்ச ரூபாய் சேலைதான். பணக்காரர்கள் முகூர்த்தத்தில் அந்த பட்டுச்சேலையை அதிகம் விரும்புகிறார்கள். அதை விற்கும் கடையின் லேபிள் இருக்கும். அதை நெய்தவன், உருவாக்கியவன் பெயர் எங்குமிருக்காது. நெசவாளன் கூலியாளாக எங்கோ நின்று விடுகிறான். அவ்வளவு அற்புதமாக நெய்பவன் கலைஞனாக தன் இருப்பைக் காட்டிக் கொள்ள முடிவதில்லை. அதை வடிவமைக்கும், டிசைன் செய்பவனுக்கு கூட பெரும் மரியாதை இருக்கும். ஆனால் நெய்பவனுக்கு கூலிக்காரன் அந்தஸ்துதான். நெசவாளனுக்கு […]