தொடுவானம் 44. மலைக்கோட்டை To புதுக்கோட்டை

This entry is part 10 of 23 in the series 30 நவம்பர் 2014

            அன்று இரவு நான் திண்ணையில் கோரைப் பாயில் படுத்து உறங்கினேன். வாசலில் நின்ற வெப்ப மரத்து இலைகளின்  சலசலப்பில் இதமான குளிர்ந்த காற்று வீசியது. நன்றாக தூங்கி எழுந்தேன்.           காலையிலே பால்பிள்ளை கையில் இரண்டு தூண்டிகளுடன் வாசலில் நின்றுகொண்டிருந்தான்.           ” அண்ணே. வயல்வெளிக்குப் போய்விட்டு அப்படியே ராஜன் வாய்க்காலில் கொஞ்சம் மீன் பிடித்து வருவோமா? ” என்று கேட்டான். காலைக் கடனை முடிக்க […]

ஆத்ம கீதங்கள் – 7 எங்கள் கூக்குரல் கேட்குமா ? [கவிதை -5]

This entry is part 11 of 23 in the series 30 நவம்பர் 2014

    ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எளிய சிறுவரிடம் உரைப்பீர் : என்னரும் சோதரரே ! மேல் நோக்கிப் பார்த்து இறைவனைப் பிரார்த்திப்பீர் என்று; கொடை அளிப்பவன் கொடுப்பான் உமக்கு இன்றைக்கும் அடுத்த நாளுக்கும்; யந்திரச் சக்கரம் யாம் சுற்றும் போது எமது கூக்குரல் கேட்கும் இறைவன் யாரென்று ! களைத்துப் போய் மூச்சிழுக்கும் எம்மருகே கடந்து செல்வோர் காதில் கூக்குரல் விழாது ! ஏது பதிலும் […]

சாபக்கற்கள்

This entry is part 12 of 23 in the series 30 நவம்பர் 2014

வைகை அனிஷ் சாமி வரம் கொடுத்தாலும் ப+சாரி வரம் கொடுக்கமாட்டார் என்பது பழமொழி. அவ்வகையில் வரம் கொடுத்த சாமியே சாபம் விட்ட நிகழ்வுகளும் உண்டு. இச்சாபம் இன்று நேற்றல்ல பண்டைய காலம் முதல் இன்று வரை நிகழ்ந்து வருகிறது. ஒரு நாட்டின் வரலாற்றை முழுமையாக உருவாக்குவதற்குத் தக்க சான்றுகளாகத் திகழ்பவை கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, இலக்கியம், அரசு ஆவணம், பதக்கம், நாணயம், வெளிநாட்டார் குறிப்பு ஆகியவைகளேயாகும். இஸ்லாமிய பெருமக்கள் இந்துக்களையும், இந்துக் கோயில்களையும், இந்துமடங்களையும், இந்துப் பெருமக்கள் […]

ஒரு செய்தியின் குறுக்கு வெட்டுத் தோற்றம்

This entry is part 13 of 23 in the series 30 நவம்பர் 2014

   E.mail: engrsubburaj@yahoo.co.in முருகானந்தம் மறுபடியும் தினசரிகளில் செய்தியாகி இருந்தான். ஆனால் இம்முறை அவன் செய்தியான விதம் சந்தோஷப் படும் படியாக இல்லை. முதல் முறையாக அவன் ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் முழு மூச்சாய் ஈடுபட்டு அதற்காக அவர்கள் நடத்திய மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டு, அதை ஊடகங்கள் பிரதானப் படுத்தி வெளியிட்டபோது அவனுடைய புகைப்படம் தினசரிகளில் வெளியானது. ஒரு செய்திச் சேனலில் ஊழலுக்கு எதிரான இவனது இரண்டு நிமிஷப் பேச்சுக் கூட ஒளிபரப்பானது. முருகானந்தத்தைப் பொறுத்த […]

எனது கதைகளின் கதை – 1.எங்கள் வாத்தியார்

This entry is part 14 of 23 in the series 30 நவம்பர் 2014

  கதைகள் அனைத்துமே கற்பனையால் மட்டுமே எழுதப்படுவதில்லை. கதைக்கான உந்துதல் ஏதாவது ஒரு நிகழ்வின் பாதிப்பாகவே இருக்கும். எனது கதைகள் எதுவுமே கற்பனை இல்லை. நான் கண்ட, கேட்ட, பரவசப்பட்ட சம்பவங்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டவை. தங்கத்துக்கு செம்பு சேர்ப்பது போல கதையின் முழுமைக்கு கற்பனை துணையாகும். எனது முதல் கதை ‘எங்கள் வாத்தியார்’ கதையா நடைச்சித்திரமா என்று புரியாத நிலையில் எழுதப்பட்டது. பின்னாளில் பல ஆண்டுகளுக்குப்பின் ‘வ.ரா’ வின் நடைச்சித்திரங்களை ‘மணிக்கொடி’ படித்த பின்தான் நான் எழுதியது […]

சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்

This entry is part 15 of 23 in the series 30 நவம்பர் 2014

  சேயோன் யாழ்வேந்தன் 1.   கூடடைந்த காகங்களின் கறுப்பினைப் பெற்றுக்கொண்ட இரவு கூடு விட்டுச் செல்லும் கொக்குகளின் வெண்மையைப் பெற்றுக்கொள்ளும் விடியலில்     2.   எந்தக் கட்சி?   பட்டப் பகலில் இருட்டுக் கடையை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. ‘நீ வேற எல்லாக் கடையிலேயும் அதே அல்வாதான்’ என்றான் நெல்லைக்காரன்   3.   ரணம் பெயர்க்க   பெண் குழந்தை பிறந்தால் உன் நிறைவேறாத காதலுக்குச் சொந்தக்காரியின் பெயரை வைப்பதென்னவோ நியாயந்தான் […]

யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)

This entry is part 16 of 23 in the series 30 நவம்பர் 2014

  எனவே, இத்தகைய மாறுபட்ட பத்ததிகள், மரபுகள் கொண்ட ஒரே வேரிலிருந்து கிளர்ந்த பல நாட்டிய ரூபங்களைப் பார்க்கும் போது, பரத நாட்டியம் அதன் கண்டிப்பும் நுணுக்கமும் நிறைந்த விஸ்தாரமான, கண்கள், முகம், கைகள் என எல்லா அவயவங்களும் கொண்டு வெளிப்படுத்தப் படும் முத்திரைகள், அபிநயங்கள், பின் சாரிகள், அடவுகள் அவை தரும் எண்ணற்ற வேறுபட்ட பாவங்கள், செய்திகள் எல்லாம் சங்கீதத்தோடும், அவற்றுக்குரிய தாளத்தோடும் அவ்வப்போது தாளம் கொள்ளும் வேறுபடும் கால ப்ரமாணங்கள் எல்லாம் ஒத்திசைந்து ஓருருக்கொண்டு […]

தினம் என் பயணங்கள் : 37 கடலும் நானும் -1

This entry is part 17 of 23 in the series 30 நவம்பர் 2014

    ஒரு சின்ன சிலிர்ப்பு, அந்த எண்ணம் வந்து இதயத்தில் உதித்த போது. நான் கடலைப் பார்க்கப் போகிறேன்! எப்படியும் அந்த கடலையும் அதன் ஆர்ப்பரிப்பையும், உப்புச் சுவையின் பிசு பிசுப்பையும் அனுபவிக்கும் ஆவல். அதற்கு ஒரு வாய்ப்பும் வந்தது. நண்பர் வையவன் அவர்கள் ஒரு நாள் தொலைபேசியில் அழைத்து சென்னை வாங்க தமழ்ச்செல்வி, தாரிணி பதிப்பகம்  வெளியிட்ட லட்ச ரூபாய் பெறுமானமுள்ள புத்தகங்களை கொண்டு போங்கள் அப்படியே உங்க டிரஸ்ட்க்காக ஒரு கம்யுட்டரும் தருகிறேன், […]

இலக்கண அமைப்புமுறைக் கோட்பாட்டில் தொல்காப்பியரின் – மாத்திரை

This entry is part 19 of 23 in the series 30 நவம்பர் 2014

பி.லெனின். முனைவர் பட்ட ஆய்வாளர் இந்தியமொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்- 613 010. நுழைவு இலக்கணம் என்பது ஒரு மொழியின் கட்டமைப்பை விவரிப்பது. எழுத்ததிகாரத்தைப் பொறுத்த வரையில் மொழியின் அமைப்பு மட்டுமல்லாமல் சில பொது இலக்கணக் கோட்hபடுகளையும் விவரிக்கிறது, அவற்றுள் தமிழ் எழுத்துக்கள், சார்பெழுத்துக்கள், மாத்திரையின் அளவு, மொழி முதல், இடை, இறுதி எழுத்துக்கள் பற்றியும் மேலும் எழுத்துக்களின் பொதுப் பிறப்புமுறை மற்றும் புணர்ச்சிபற்றிய பொது விளக்கம், கருவி மொழி பற்றிய பொது விளக்கம் […]

சூரியனின் காந்தப்புலச் சுழற்சி பூமியிலே இடி மின்னலை மிகையாக்கி அசுர ஆற்றல் ஊட்டுகிறது.

This entry is part 20 of 23 in the series 30 நவம்பர் 2014

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ காலக் குதிரையின் ஆழியைச் சுற்றுவது சூரியன். ஊழியின் கரம் பூமியில் ஓவியம் வரைவது ! ஒளிரும் சூரியனும் ஒருநாள் ஒளி வற்றி முடங்கும் ! பூமியின் உட்கருவில் சங்கிலித் தொடரியக்கம் தூண்டி நில நடுக்கம் புரிவது பரிதிக் கதிர்கள் ! பூமி ஒரு வெங்காயம் ! உடைந்த  தட்டுகள் அடுக்கடுக் காய் அப்பிய பொரி உருண்டை ! சூரிய காந்தம், கதிர்வீச்சு காமாக் கதிர்கள் சூழ்வெளி படைப்பவை […]